கணவர் மீது 44 காதல் கவிதைகள் இயற்றிய எலிசபெத் ப்ரவுனிங் (Post No.10070)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,070

Date uploaded in London – 8 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கணவர் மீது 44 காதல் கவிதைகள் இயற்றிய எலிசபெத் ப்ரவுனிங்

ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ப்ரவுனிங் & கணவர் மீது 44 காதல் கவிதைகள் இயற்றிய எலிசபெத் ப்ரவுனிங்

விக்ட்டோரியன் கால கவிஞர்களில் புகழ் பெற்றவர் ராபர்ட் ப்ரவுனிங். ROBERT BROWNING அவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டு இதாலிக்கு ஓட்டம் பிடித்த எலிசபெத் ப்ரவுனிங்கும் ELIZABETH BROWNING , அவர் மீது 44 காதல் கவிதை மழை பொழிந்து  புகழ் பெற்றார் எலிசபெத் ப்ரவுனிங். இருவருடைய வாழ்க்கையையும் அவர்களது படைப்புகளையும் காண்போம் .

ராபர்ட் ப்ரவ்னிங் எழுதிய பாடல்களில் பழங்கால மக்கள் தங்கள் எண்ணங்களை பேச்சு வடிவிலோ கவிதை வடிவிலோ வெளியிடுவதைக் காணலாம். அவர் எழுதிய நீண்ட கவிதைகளில் முன் காலத்தில் வாழ்ந்த கதா பாத்திரங்கள் பேசுவதைக் காணலாம்.

ப்ரவ்னிங், லண்டனில் பிறந்தார். அவருடைய தந்தை பாங்க் ஆப் இங்கிலாந்தின் BANK OF ENGLAND  கிளார்க்/குமாஸ்தா/எழுத்தர். தாயோ ஜெர்மன் நாட்டுப் பெற்றோர்களுக்குப் பிறந்த நங்கை . நல்ல வசதி படைத்த குடும்பம். ஆகையால் வயிற்றுப பிழைப்பைப் பற்றிக் கவலைப்படாமல் கவிதை எழுதும் நல்ல பாக்கியம் பெற்றவர் ப்ரவ்னிங். குடும்பத்தில் இருந்த பெரிய நூலகத்தில் உள்ள எல்லா புஸ்தகங்களையும் படித்த ப்ரவ்னிங்கிற்கு ஷெல்லி, கீட்ஸ் ஆகியோரின் கவிதைகள் மிகவும் பிடித்தன. தானும் கவிஞர் ஆக வேண்டும் என்ற வேட்கை பிறந்தது  21 வயதில் பாலின் PAULINE  என்ற கவிதையை இயற்றினார் .

பின்னர் நாடகங்களையும் நீண்ட கதைகள் சொல்லும் PIED PIPER OF HAMLYN ‘பைட் பைபர் ஆப் ஹாம்லின்’ போன்ற கவிதைகளையும்  படைத்தார் . பேச்சு வடிவிலுள்ள கவிதைகளை ட்ராமாடிஸ் பெர்ஸோனே , ட்ரமாட்டிக் லிரிக்ஸ் மென் அன்ட் விமன் , த ரிங் அண்ட் தி புக் முதலியவற்றில் ப டித்து ரசிக்கலாம். இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தைச் (RENAISSANCE PERIOD)  சேர்ந்த ஒரு இளவரசன் அல்லது ஓவியன் அல்லது மத போதகர் வாழ்வில் ஏற்படும் சிக்கலான தருணத்தைப் படம்பிடித்துக் காட்டுவார் கவிதைகளில் .

நல்லவரோ கெட்டவரோ , வாழ்க்கையில் கிடைக்கும் அரிய நேரத்தைப் பயன்படுத்தி சாதனைகள் புரியத் தவறுபவர்களை பிரௌனிங் வெறுத்தார். தோல்விகள் அடைந்தாலும் முயற்சி செய்வோருக்கு சொர்க்கத்தில் இன்பம் கிடைக்கும் என்பார் பிரௌனிங் .

எவருக்கும் தெரியாத இடங்களையோ ஆட்களையோ பற்றி அவர் கவிதைகளை வரைந்தார். அதுவும் சுருக்கமான சொற்களைப் பயன்படுத்தி விரிவான விஷயங்களை சொல்ல முனைவார் . இதனால் அவருடைய கவிதைகளைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. இதன் காரணமாக 50 வயதுக்கு மேல்தான் அவருக்குப் புகழ் கிடைத்தது.அதற்கு முன்னமே அவருடைய மனைவி எலிசபெத்துக்குப் புகழ் வந்து சேர்ந்தது!

1846-ல் அவர் காதலி எலிசபெத்தைக் கல்யாணம் கட்டி இத்தாலிக்கு ஒடிப்போனார் . இது இருவரின் பெற்றோருக்குத் தெரியாமல் நடந்த, அந்தக் கால புகழ்பெற்ற காதல் கதை. மனைவி இறந்த பின்னரே இங்கிலாந்துக்குத் திரும்பினார்.

ராபர்ட் ப்ரவ்னிங்

பிறந்த தேதி – மே 7, 1812

இ றந்த தேதி- டிசம்பர் 12, 1889

வாழ்ந்த ஆண்டுகள் – 77

அவர் எழுதிய கவிதைகள் /நூல்கள்

1835- PARACELSUS

1840 – SORDELLO

1842- DRAMATIC LYRICS

(INCLUDING PIED PIPER OF HAMLYN)

1845- DRAMATIC ROMANCES AND LYRICS

1855 – MEN AND WOMEN

1864- DRAMATIS PERSONAE

1869-69 – THE RING AND THE BOOK

1879-80- DRAMATIC IDYLS

1889- ASOLANDO

XXX

கணவர் மீதான காதல் கவிதைகளால் புகழ் பெற்றவர்

இங்கிலாந்தின் தலை சிறந்த பெண் கவிஞர் எலிசபெத் பாரட்  ப்ரவ்னிங் ELIZABETH BARRET BROWNING என்று கருதப்பட்ட காலம் உண்டு. தற்காலத்தில் அவர் காதல் கவிதைகளினால் பிரபலமானவர் என்ற கருத்தே நிலவுகிறது . ஜமைக்கா தீவில் பெரிய தோட்டம் துரவுகளை வைத்திருந்த பணக்காரருக்குப் பிறந்த 12 குழந்தைகளில் மூத்தவர் எலிசபெத்.

வீட்டிலேயே கல்வி கற்றார். ஆங்கிலத்துடன் கிரேக்க , லத்தீன் மொழிகளையும் கற்றுத் தேர்ந்து நிறைய எழுதினார், படித்தார்.

பத்து வயதிலேயே நீண்ட கவிதை எழுதினார். நட்டங்களை எழுதி  அவற்றை குடும்ப நர்சரிகளில் நடிக்கவும் செய்தார். 14 வயதில் அவரது தந்தையே மாரத்தன் சண்டை THE BATTLE OF MARATHON என்ற கவிதையை வெளியிட்டார்.

15 வயதில் காச நோய் (TB) கண்டு முதுகெலும்பு அரிக்கப்பட்டது . இதனால் வாழ்நாள் முழுதும் உடலூனம் நீடித்தது. அவருடைய சகோதரர் இறந்தது,அவரிடைய மன நிலையைப் பாதித்ததால் லண்டனிலுள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு ஒரு அறையிலேயே அடைத்து வைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 29.

இதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய கவிதைகளை எட்கர் ஆலன் போ மற்றும் அவரை விட வயதில் இளையவரான ராபர்ட் ப்ரவ்னிங் ஆகியோர் பாராட்டினார்கள். இதன் மூலம் அவர் புகழ் அதிகரித்தது

ராபர்ட்டும் எலிசபெத்தும் சந்தித்தனர்; காதல் மலர்ந்தது; எலிசபெத்தின் தந்தையின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இருவரையும் ரஹஸ்ய திருமணம் செய்துகொண்டு இத்தாலி நாட்டுக்கு குடியேறினார்கள்.அங்கு அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். 15 ஆண்டுகளுக்கு சுகபோக வாழ்க்கை நடத்தினர். SONNETS FROM THE PORTUGESE ‘சான்னட்ஸ் பிரம் த போர்ச்சுகீஸ்’ என்ற கவிதைத் தொகுப்பு 1850ல் அச்சிடப்பட்டது. இதில் தான் அவர் தனது காதல் கணவன் மீது எழுதிய 44 கவிதைகள் இருக்கின்றன. கருங் கூந்தல் படைத்த எலிசபெத்தை ராபர்ட் “அட என் போர்ச்சுகீஸ் அன்பே! ஆருயிரே!” என்று அழைப்பார் . அதனால்தான் கவிதைத்தொகுப்பின் பெயரில் ‘போர்ச்சுகீஸ்’ உளது.

எலிசபெத்  ப்ரவ்னிங்

பிறந்த தேதி – மார்ச் 6, 1806

இறந்த தேதி- ஜூன் 29, 1861

வாழ்ந்த ஆண்டுகள் – 55

அவர் எழுதிய கவிதைகள்

1838 – THE SERAPHIM AND OTHER POEMS

1844 – POEMS

1850- SONNETS FROM THE PORTUGESE

1851 – CASA GUIDI WINDOWS

1856- AURORA LEIGH

1860- POEMS BEFORE CONGRESS

PUBLISHED AFTER SHE DIED

162- LAST POEMS

-SUBHAM–

TAGS- ஆங்கிலக் கவிஞர், ராபர்ட் ப்ரவுனிங், கணவர் ,காதல் கவிதைகள்,  எலிசபெத் ப்ரவுனிங்,

ELIZABETH, ROBERT, BROWNING

இதாலிய கவிஞர் பெட்ரார்க் காதல் கவிதைகள்(Post No.9664)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9664

Date uploaded in London – –30 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FRANCESCO PETRARCH

(1304 – 1374)

காதல் கவிதைகள் எழுதி புகழ்பெற்றவர் இதாலிய கவிஞர் பெட்ரார்க். லாராவுக்கு (POEMS TO LAURA) இவர் எழுதிய கவிதை மிகவும் புகழ்பெற்றவை. பழைய பாணியையும் மறுமலர்ச்சி (RENAISAANCE) காலத்தில் தோன்றிய புதிய பாணியையும் கலந்து எழுதியது இவரது தனிச்சிறப்பு.

     இதாலியின் TUSCANY வட்டாரத்தில் AREZZO என்னுமிடத்தில் இவர் பிறந்தார். இவருடைய குடும்பம் பிளாரன்ஸ் நகரில் வாழ்ந்தாலும் மாற்றுக்கட்சியை ஆதரித்த காரணத்தால் வெளியேற்றப்பட்டனர். பெட்ரார்க்கின் தந்தையும் தாத்தாவும் வழக்குரைஞர்கள். அதே வழியில் இவரையும் சட்டம் பயில்வதற்காக மான்டிபெல்லியர் (MONTEPELLER UNIVERSITY) பல்கலைகழத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் அவருக்கு சட்டம் பிடிக்கவில்லை. படிப்பை நிறுத்திவிட்டு சர்ச்சில் சேர்ந்தார் (MINOR ORDERS IN THE CHURCH)

     இது நடந்த சிறிது காலத்தில் அவர் லாரா என்னும் பெண்ணைச் சந்தித்தார். அவரது வாழ்க்கையையே இது மாற்றிவிட்டது. ஆனால் LAURA DE NOVES ஏற்கனவே திருமணமானவர். இருந்தபோதிலும் அவரை எண்ணி பெட்ரார்க் பல கவிதைகளை எழுதினார். இந்தக் காதல் கவிதைகளை ஏராளமானோர் ரசித்துப் படித்தனர்.

     அவர் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஹங்கேரி ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.

     32 வயதில் அவருக்கு கவலை அதிகமாகி மனநலம் குன்றினார். மாற்றான் மனைவியின் மீது தான் காதல் கொண்டு கவிதை எழுதியது தவறு என்று மனசாட்சி உறுத்தியது. இந்த மனப்போராட்டம் அவரை மனநோயில் (NERVOUS BREAKDOWN) ஆழ்த்தியது.

     1348ஆம் ஆண்டில் பிளேக் (Plague)  என்னும் கொள்ளைநோய் இதாலியில் பரவியது. லாராவும் அந்த நோய்க்கு பலியானார். பெட்ரார்க் துயரத்தில் மூழ்கினார். முறை தவறிய காதலுக்கு கடவுள் வழங்கிய தண்டனைதான் இது என்று கருதிய அவர் ரோமாபுரிக்கு (ROME) யாத்திரை சென்றார்.

     ரோமிலிருந்து பிளாரன்ஸ் சென்ற அவர் இதாலிய பெருங்கவிஞர் பொக்காஸியோவை சந்தித்தார். அவர்கள் வாழ்நாள் முழுதும் இணைபிரியா நண்பர்களாயினர்.

     பெட்ரார்க்கிற்கு GIOVANNIA VISCONTI தூதர் பதவி கொடுத்தனர்.

—subham—

tags– இதாலிய கவிஞர், பெட்ரார்க்,  காதல் கவிதைகள், 

சம்ஸ்கிருத காதல் கவிதைகள் (Post No.4593)

Date: 8 JANUARY 2018

 

Time uploaded in London- 6-00 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4593

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

சம்ஸ்கிருத காதல் கவிதைகள் : ராகத்திலே அநுராக மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா!!!

 

ச.நாகராஜன்

 

1

1955ஆம் ஆண்டு, பொங்கல் தினத்தன்று வெளியான படம் தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கியது.

மிஸ்ஸியம்மா.

அதில் ஒரு பாடல் காட்சி. மக்களை ஆட வைத்தது.

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும்

பொது சொந்தமன்றோ….

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் உள்ளமே

ஜில்லெனத் துள்ளாதா?

ராகத்திலே அநுராக மேவினால்

ஜகமே ஊஞ்சலில் ஆடாதா!

பாட்டுடன் மக்கள் ஆடினர்.

பாடலை ஜெமினி கணேசன் பாட ஜமுனா ராணி ஆடுகிறார்.

அதை ரங்காராவ் மனைவியுடன் ரசிக்கிறார். சாவித்திரியோ நடு நடுவில் வந்து பார்த்துக் குமுறுகிறார்.

தஞ்சை ராமையா தாஸின் பாடலுக்கு ராஜேஸ்வர ராவ் இசையமைத்துள்ள இந்தக் காட்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

சரி, ஒரு கேள்வி.

ராகத்திலே அநுராக மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா?

ராகத்திலே அநுராக மேவினால் என்றால் அர்த்தம் என்ன?

உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

 

2

காதலை 64 வ்கையாக போஜ மன்னன் பிரித்தார். அதில் ராகமும் உண்டு; அநுராகமும் உண்டு.

இந்த அநுராகத்தை விளக்கும் பாடல்கள் ஆயிரக் கணக்கில் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.

வித்யாகரர் என்று ஒரு தேர்ந்த கவிதா ரஸிகர்.

நல்ல பாடல்களாகத் தொகுக்க ஆரம்பித்தார்.

சுமார் 275க்கும் மேற்பட்ட கவிஞர்களைத் தேர்ந்தெடுத்தார்.

அவர்களின் சிறந்த பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்தார்.

1738 பாடல்கள் அவர் தேர்வில் வெற்றி பெற்றன.

அதை சுபாஷித ரத்னகோசம் என்ற பெயரில் நூலாகத் தொகுத்தார்.

அதில் 50 தலைப்புகள்.

அதில் ஒரு தலைப்பு: The Blossoming of Love. காதல் அரும்புதல்!

இந்த தலைப்பில்  மட்டும் 70 பாடல்கள் உள்ளன.

1738 பாடல்களும் அருமை என்றாலும் இந்தத் தலைப்பில் உள்ள சில பாடல்களை இங்கு பார்ப்போம்.

 

3

 

வித்யாகரரின் காலம் சரியாகத் தெரியவில்லை.அவரைப் பற்றிய விவரங்களையும் ஆதாரபூர்வமாக அறிய முடியவில்லை.

இருந்தாலும் இவரது பாடல்களை அரும்பாடு பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள டேனியல் ஹெச்.ஹெச்.இங்கால்ஸ் என்ற அறிஞர், இவர் புத்தமதத்தைச் சேர்ந்த பேரறிஞர் என்றும். பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த இவர் வங்காளத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்.

4

இங்கால்ஸின் An Anthology of Sanskrit Court Poetry என்ற நூலிலிருந்து The Blossoming of Love – காதல் அரும்புதல்

என்ற பகுதியிலிருந்து சில கவிதைகள்:

The glances of your eye,

Which stretches to your ear, darker than waterlily

Were enough to steal a heart.

What needs it, pretty lass,

With such ado pretending to bind up your loosened braid

To show your armpit, camphor dusted

And, marked with lover’s nail?

அடடா, உன் கண் பார்வை!

செவி வரை நீண்டிருக்கும் அது, அல்லி மலரை விடக் கறுத்திருக்கிறதே!

அது ஒன்று போதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள!

ஓ, அழகிய இளம் பெண்ணே,

பரபரப்புடன் தளர்ந்திருக்கும் உன் கேஸப் பின்னலைத் தூக்கி

முடிப்பது போலப் பாசாங்கு செய்கிறாயே!

அதன் தேவை தான் என்ன?!

வாசனை தூவப்பட்ட உனது அக்குளையும்

அங்கிருக்கும் காதலனின் நகக்குறியைக் காண்பிக்கவா?

*

Her body is a pond

Her face thereof a lotus and her arms the lotus stems,

Her loveliness the water and her triple fold the wave.

Therein a strong young elephant,

No other than my heart, has plunged,

But caught fast in love’s quicksand will never rise again.

 

அவள் மேனி ஒரு குளம்

அங்கிருக்கும் அவளது முகமோ தாமரை. அவளது கரங்களோ தாமரைத் தண்டுகள்.

அவளது பேரழகு தான் நீர்; அவளது மூன்று மடிப்புகளோ அலைகள்!

அங்கு ஒரு வலிமை வாய்ந்த யானை –

எனது இதயத்தைத் தான் சொல்கிறேன் – மூழ்கியது!

ஆனால் காதல் என்னும் புதைகுழியில் அது சிக்கி விட்டதால்

அது மீண்டும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது!

 

*

புதிதாக மணம் ஆகி விட்டது. கணவன் நெடு நாள் பிரிந்திருக்கப் போகிறான். வெளியூர் செல்ல இருக்கிறான். அவன் செல்ல வேண்டிய இடத்தை அடையவே நூறு நாள் பிடிக்கும்.

புது மணப்பெண்ணின் மனம் என்ன பாடுபடும்?

பார்க்கலாமா?

“You will return in an hour?                                                                                               Or at noon? Or after?

Or at least some time today!”

With such words the young bride,choked with tears,

Delayed her love’s departure for a land

Distant at hundred days.

 

“ நீ இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவாயா?

அல்லது நடுப்பகலில் வருவாயா? அல்லது சற்று நேரம் கழித்தா?

இன்றுக்குள் திரும்பி விடுவாய், இல்லையா!”

கண்ணீர அரும்ப தொண்டை அடைக்க இளம் மணப்பெண்

தன் கணவனிடம் கூறும் சொற்கள்… இவை

அவன் கிளம்பும் பயணத்தை சற்று நேரம் தள்ளி வைத்தது.

அவன் போக வேண்டிய இடத்தை அடையப் பிடிக்கும்

நூறு நாட்கள்.

*

மூன்று முத்தான கவிதைகளைப் பார்த்தோம்.

1738ஐயும் படிக்க வேண்டும் என்கின்ற ஆவல் எழுகிறதில்லையா?

வித்யாகரரின் ரஸனை அற்புதமானது. சுந்தரமான சுபாஷித ரத்ன கோஸத்தை நாடுங்கள். படியுங்கள். ரஸியுங்கள்

***

நன்றி : An Antholoty of Sanskrit Court Poetry translated by Daniel H.H.Ingalls

Cambridge, Massachusetts Harvard University Press, 1965

குறிப்பு: இதைப் படிப்பவர்கள், ‘காதலில் எத்தனை விதம் சொல்லு?! 64 வகை; அதன் உட்பிரிவோ 12288!! அதிசயமன்னனும், அவனை ஆராய்ந்த அறிஞரும்!!!’ என்ற கட்டுரையையும் படிக்கலாம்.