
WRITTEN BY R. NANJAPPA
Post No.7854
Date uploaded in London – – 20 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 12 – காதல் பாடல்கள்!
R. Nanjappa
பழைய இசை அமைப்பாளர்கள்
சினிமா பாடல் ஒரு குறிப்பட்ட கதைச் சூழ் நிலையில் உருவாக்கப்படுவது. அதற்கேற்பத்தான் மெட்டு அமையும். மெட்டிற்கு ராகமே அடிப்படை. ராகம் bhaavaத்தை உணர்த்த வேண்டும் . கச்சேரியில் ஒரு தேர்ந்த வித்வானுக்குக்கூட ராக ‘பாவத்தை ‘ வெளிப்படுத்த சில நிமிஷமாகும். ஆனால் சினிமா பாட்டில் ஒரு 78rpm ரெகொர்டில் 3-4 நிமிஷங்களுக்குள் இதைச் சாதிக்கவேண்டும்! இது எப்படி இயலும்?
நம் பழைய இசையமைப்பாளர்கள் இதில் தேர்ந்தவர்கள். ஜீனியஸ் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு பெரிய ராகத்தின் சாரத்தை மூன்று நிமிஷங்களில் பிழிந்து தருகிறார்கள்!. தடுமாற்றமே இல்லை! இத்தகைய பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கின்றன. சில உதாரணங்கள்;

–மன் தட்பத் ஹரி தர்சன் கோ– ராகம்: மால்கோஷ் படம்:பைஜு பாவ்ரா – இசை: நௌஷத்
–ஏஜிந்தகீ உஸி கி ஹை ராகம்: பீம்பலாசி, பட்தீப் ? படம்: அனார்கலி –சி.ராம்சந்த்ரா
–நைன் ஸோ நைன் ராகம்: மால்குஞ்சி படம்: ஜனக் ஜனக் பாயல் பாஜே –வசந்த் தேசாய்
– மதுபன் மே ராதிகா ராகம்: ஹமீர் படம்: கோஹினூர் – நௌஷத்
–ஆகே பீ ஜானேன தூ ராகம்: பாஹடி படம்: வக்த்–ரவி
–ப்ருந்தாவன் கா கிஷ்ண கனையா– ராகம் பாஹடி படம்: மிஸ்மேரி–ஹேமந்த் குமார்
– ஏ மாலிக் தேரே ராகம்: பைரவ் படம்: தோ ஆங்கேன் பாரஹ் ஹாத்–வசந்த் தேசாய்
–அல்லாஹ் தேரோ நாம் ராகம்: கௌட ஸாரங்க் படம்: ஹம் தோனோ–ஜய்தேவ்
–தூ ப்யார் கா ஸாகர் ஹை ராகம்: தர்பாரி கானடா படம்: ஸீமா–ஷங்கர் ஜெய்கிஷன்
– மன் ரே து காஹே ந ராகம்: யமன் படம்: சித்ரலேகா இசை- : ரோஷன்


மேலும் இந்த ‘மேதாவி“கள் ஒரே ராகத்தின் அடிப்படையில் பல மெட்டுகள் அமைப்பார்கள்! நௌஷத், சங்கர்–ஜெய்கிஷன் ஒரே பைரவி ராகத்திலிருந்து டஜன் கணக்கில் மெட்டுகள் அமைத்துள்ளனர்.
[ இந்த வித்தைக்கு முன்னோடியாக இருப்பவர் நமது முத்துஸ்வாமி தீக்ஷிதர். சங்கராபரணத்தின் அடிப்படையில் ‘பாண்ட்‘ இசைக்காக பல மெட்டுக்கள் அமைத்திருக்கிறார்!]
இந்த இசையமைப்பாளர்களின் இன்னொரு திறமை, பாடலுக்கேற்ற பாடகரைத் தீர்மானிப்பதாகும். கோரஸ் பாடல்கள் பலர் குரலில் இருந்தாலும், சோலோ. டூயட் பாடல்களில் குரலின் தனித்தன்மை அவசியமானது. இதைச் சரியாக நிச்சயித்ததால்தான் இன்றுவரை ஒருவர் பாடி பிரபலமான பாடலை வேறொருவர் பாடினால் ரசிக்கமுடியவில்லை!
ஹாலிவுட்டில் ஒருவர் பாடி பிரபலமான பாடலை பிறகு ‘கவர் வர்ஷன்’ Cover Version என்ற பெயரில் வேறு பலர் பாடுவார்கள். நமக்கு இது ஒத்துவரவில்லை.
இதில் ஒரு கிறுக்குப்பிடித்த நிலைக்கே போனவர் எஸ்.டி பர்மன். ரிகார்டிங்கிற்குமுன் பாடகருக்கு ஃபோன் செய்வார். பாடகர் குரல் சரி என்று தோன்றினால்தான் அவரைப் பாடவைப்பார்!
இங்கு ஒரு செய்தி. ஜி.ராமனாதன் தமிழ் திரையிசைத் துறையில் ஒரு ஜீனியஸ். முறைப்படி சங்கீதம் பயின்றவரல்ல–கேள்வி ஞானம்தான். கோமதியின் காதலன் என்ற படத்தில் “வான மீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே” என்ற பாடல் வருகிறது. இது சீர்காழி, திருச்சி லோகநாதன் இருவர் குரலிலும் பதிவாகி இருக்கிறது! படத்தில் சீர்காழி குரல்தான் , ரெகார்டில் திருச்சியார் குரல்! இரண்டும் நன்றாகவே அமைந்திருக்கின்றன. இது அருமையான காதல் பாட்டு! கு.மா.பாலசுப்ரமணியன் எழுதியது.
இசையும் காதலும்!
If music be the food of love, play on.
Give me excess of it that, surfeiting,
The appetite may sicken, and so die.
-Shakespeare, Twelfth Night
இங்கே ஷேக்ஸ்பியர் பொடி வைக்கிறார்! இங்கு வரும் பாத்திரத்திற்கு காதல் நோய். அது விருப்பமில்லை. அதனால் இசை அதிகம் கேட்டால் இது குணமாகிவிடும் (காதல் மறைந்துவிடும் ) என்று நினைக்கிறான்.
நமது சினிமாவில் நிலை வேறு! இங்கு காதலுக்கு தூபம் போடுவதே இசை தான்! காதல் தோல்வி என்றாலும் இசைதான்!
ஹிந்தி சினிமாவில் –அதன் பொற்காலத்தில் எத்தனையோ அருமையான காதல் பாடல்கள் உள்ளன.
பொறுக்குவது அசாத்யம் இருந்தாலும் ஒரு பாடகருக்கு ஒன்று என்று சொல்லப் பார்க்கிறேன்.

दिल से तुझको बेदिली है मुझको है दिल का गुरूर
तू ये माने के न माने लोग मानेंगे ज़ुरूर
தில் ஸே துஜ் கோ பேத்லீ ஹை,முஜ் கோ ஹை தில் கா சுரூர்
தூ ந மானே யா ந மானே லோக் மானேங்கே ஜுரூர்
மனது பற்றிய விஷயங்கள் உனக்குப் பிடித்தமில்லை
அனால் நான் அவற்றை மிகவும் மதிக்கிறேன்!
நீ இதை ஒப்புக்கொண்டாலு சரி, இல்லையென்றாலும் சரி,
இந்த உலகம் இதனை ஒப்புக்கொள்ளும்.
ये मेरा दीवानापन है या मुहब्बत का सुरूर
तू न पहचाने, तो है ये तेरी नज़रों का क़ुसूर
ये मेरा दीवानापन है…
யே மேரா தீவானாபன் ஹை, யா முஹப்பத் கா சுரூர்
தூ ந பஹசானே தோ ஹை யே தேரீ நஃஜ்ரோ9ன்) கா குஸூர்
இது தான் என் பைத்தியக்காரத்தனம்– அல்லது தீவிரக் காதல்!
இது உனக்குத் தெரியவில்லையென்றால் , அது உன் கண்களின் தவறே, தவிர வேறென்ன!
இது தான் என் பைத்தியக்காரத்தனம்….
दिल को तेरी ही तमन्ना दिल को है तुझसे ही प्यार
चाहे तू आए न आए हम करेंगे इंतज़ार
ये मेरा दीवानापन है.
தில் கோ தேரீ ஹீ தமன்னா, தில் கோ ஹை துஜ் ஸே ஹீ ப்யார்.
சாஹே தூ ஆயே ந ஆயே, ஹம் கரேங்கே இன்தஃஜார்.
யே மேரா தீவானா பன் ஹை
என் மனதில் உன் மேல் தான் ஆசை, உன்னிடம் தான் காதல்
நீ வந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி–
நான் காத்திருப்பேன்.
இது தான் என் பைத்தியக்காரத் தனம்
ऐसे वीराने में इक दिन घुट के मर जाएंगे हम
जितना जी चाहे पुकारो फिर नहीं आएँगे हम
ये मेरा दीवानापन है…
ஐஸே வீரானே மே இக் தின் குட்கே மர்ஜாயேங்கே ஹம்
ஜித்னா ஜீ சாஹே புகாரோ, ஃபிர் நஹீ ஆயேங்கே ஹம்
யே மேரா தீவானா பன் ஹை..
இந்த இடிந்த நிலையில் மூச்சுமுட்டும், ஒரு நாள் உயிர் பிரிந்துவிடும்
நீ எவ்வளவுதான் விரும்பி அழைத்தாலும் , நான் திரும்பி வரமாட்டேன்!
இது தான் என் பைத்திய நிலமை!….
Song: ye mera diwana pan hai. Film: Yahudi 1958 Director: Bimal Roy Lyricist: Shailendra
Music: Shankar-Jaikishan Singer: Mukesh

மிகப் பிரபலமான பாடல் முகேஷின் முத்திரைப் பாடல்களில் ஒன்று. அவர் குரலில் ஒரு லேசான சோகம் இழையோடும். Pathos. துயரச் சூழ்நிலை, மனத் துன்பம் ஆகிய நிலைகளில் வரும் பாடல்களுக்கு இவர் குரல் மிகவும் பொருந்தும். குரலை மாற்றிப் பாடத் தேவையில்லை! இது அப்படிப் பட்ட பாடல்.
ஷைலேந்த்ராவின் பாடல் எளிய சொற்களால் ஆனது–ஆனால் உணர்ச்சிகள ஆழப் பதிப்பது. இது ஷைந்த்ராவின் விசேஷத் தன்மை. இந்தப் பாடலுக்கு அவருக்கு ஃபிலிம்ஃபேர் அவார்டு கிடைத்தது. (First award in the year it was instituted.)
இசை அமைப்பாளர்கள் சங்கர் ஜெய்கிஷன் அப்போது கொடிகட்டிப் பறந்தார்கள்.
இந்தப் பாடல் முகேஷுக்குப் பாடக்கிடைத்தது தற்செயல்தான். படத்தின் ஹீரோ திலீப் குமார் இந்தப் பாட்டை தலத் மஹ்மூத் பாடவேண்டுமென்று விரும்பினார். ஆனால் இசைஅமைப்பாளகள் முகேஷை மனதில் கொண்டு இந்த மெட்டை அமைத்தார்கள். இறுதியில் டைரக்டர் முகேஷையே பாடச்செய்தார். டைரக்டரும் இசை அமைப்பாளரும் இதை பூவா–தலையா முறையில் முடிவுசெய்தார்கள் என்பவர்களும் உண்டு இன்னும் ஒரு விளக்கமமும் இருக்கிறது. அந்த சமயத்தில் முகேஷுக்கு மார்கெட் சரிந்திருந்தது. நடிப்பு– தயாரிப்பு ஆசையால் அவர் சில காலம் அதில் செலவிட்டார். அந்த ஒப்பந்தப்படி , படங்கள் வெளிவரும் வரை அவர் வேறு யாருக்கும் பாடக்கூடாது என்பது நிபந்தனை! படமும் தோற்கவே, முகேஷ் கஷ்ட தசையில் இருந்தார். அவர் நண்பரான தலத் முஹம்மத் தனக்கு வந்த சந்தர்ப்பத்தை முகேஷுக்குக் கொடுத்தார். ( அதே போல் தான் மதுமதியிலும் செய்தார்–அதுவும் பிமல் ராய் படம்–அதே வருஷத்தில் வந்தது.)
This is an iconic song for Shankar Jaikishan, Mukesh, Shailendra, the actor ,and director Bimal Roy. One of the best songs expressing the pangs of love in simple language.
இந்தப்பாடல் மிஸ்ர யமன் ராகத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
சலே ஜா ரஹே ஹை(ன்)
chale ja rahe hain mohabbat ke maare
kinaare kinaare kinaare kinaare
chale ja rahe hain
காதலில் அடிவாங்கியவன்– கரையோரமாகவே திரும்பிப்போகிறேன்
கரையயோரமாகவே போகிறேன்
na saahil ki parwaah na toofan ka dar hai
na zulmo ka shiqwa na gam ka asar hai
umeedon ke bal par dilon ke sahaare
chale ja rahe hain kinaare kinaare
chale ja rahe hain
கரையைப் பற்றிய கவலை யில்லை; புயல் பற்றிய பீதி இல்லை!
குற்றம் பற்றிய புகார் இல்லை; வருத்தத்தின் வேலை இல்லை
நம்பிக்கையின் பலத்தில், மனதின் துணைகொண்டு
கரையோரமாகவே போகிறேன்
tammana yahee hai ke lahron se khelen
naseebon ki gardish ko hans hans ke jhelen
umangon ki raah mein bichhaakar sitaare
chale ja rahe hain kinaare kinaare
chale ja rahe hain

அலைகளோடு விளையாடவேண்டும் என ஆசையிருக்கிறது
விதியின் பிடியைச் சிரித்துச் சிரித்தே சமாளிக்கவேண்டும்!
என் நம்பிக்கையின் பாதையில் நட்சத்திரங்களை விரித்து–
கரையோரமாகவே போகிறேன் .
Song: Chale ja rahe(n) hai(n) Film: Kinare Kinare 1963 Lyricist: Nyay Sharma
Music : Jaidev Singer: Manna Dey
இங்கு உணர்ச்சிகள், எண்ணங்களை நேரடியாகச் சொல்லவில்லை. இதில் வந்திருக்கும் சொற்கள் ( ஸாஹில், பர்வா, ஃஜுல்ம், உம்மீத், தமன்னா, நசீப், உமங்க் போன்ற சொற்கள் ஆழ்ந்த கருத்துள்ளவை–இவற்றைக் கதையின் போக்கைக்கொண்டே விளக்கிக்கொள்ளவேண்டும் இதைச் சிறந்த முறையில் படமாக்கியிருக்கிறார் டைரக்டர் சேதன் ஆனந்த். கடலில் அலை வீசுகிறது– நாயகன் ஓரமாக நடந்து போகிறான்– இதை உருவகப்படுத்திப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இங்கு கடலலையின் ஓசையுடன், காற்றின் போக்குடன் இசை எப்படி ஒத்துப்போகிறது என்பது fantastic.
ஜெய்தேவின் அருமையான இசை. பிரமாதமான இசை இருந்தும் தோல்வி தழுவிய படம்– பத்து வருடம் தாமதமாக வந்தது முக்கிய காரணம்.
ஜெய்தேவ் அதிகம் அலட்டிக்கொள்ளாத அமைதியான மனிதர். எஸ்.டி. பர்மனுக்கு அஸிஸ்டன்ட் ஆக இருந்தார். பாரம்பரிய இசையில் பிடிப்புள்ளவர். இந்தப் பாடல் ‘ஜெய்ஜெய்வன்தி‘ ராகத்தில் அமைந்தது.
பாடியவர் மன்னாடே. கிஷோர் குமார் சங்கீதப் பயிற்சியே இல்லாமல் பாட வந்தார்-அது ஒரு துருவம் என்றால், மன்னா டே முழுப் பயிற்சியுடன் வந்தவர்- இன்னொரு துருவம்! ஆனாலும் இவருக்கு பெரிய வாய்ப்புகள் அதிகம் வரவில்லை- பெரிய ஹீரோக்கள் இவர் குரலை முதல் சாய்ஸாக எடுத்துக்கொள்ள வில்லை. சாதுக்கள், தெருப்பாடகர்கள், அனாமதேயங்கள், காமெடி கேரக்டர்கள் -இப்படிப் பட்டவர்களுக்கே இவர் குரலை பயன்படுத்தினர். இதையும் மீறிய பல பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.

யே ராத் யே சாந்த்னீ
ये रात ये चाँदनी फिर कहाँ
सुन जा दिल की दास्ताँ
ये रात…
யே ராத் யே சாந்த்னீ ஃபிர் கஹா(ன்)
ஸுன் ஜா தில் கீ தாஸ் தா(ன்)
இந்த இரவு, இந்த நடசத்திரங்கள்– பின் எப்பொழுது திரும்ப வருமோ?
வந்து என் மனம் சொல்வதைக் கேட்டுச் செல்
पेड़ों की शाखों पे सोई सोई चाँदनी
तेरे खयालों में खोई खोई चाँदनी
और थोड़ी देर में थक के लौट जाएगी
रात ये बहार की फिर कभी न आएगी
दो एक पल और है ये समा, सुन जा…
பேடோ(ன்) கீ ஷாகோ(ன்) பே ஸோயீ ஸோயீ சாந்த்னீ
தேரே கயாலோ(ன்) மே கோயீ கோயீ சாந்த்னீ
ஔர் தோடீ தேர் மே தக் கே லௌட் ஜாயேகீ
ராத் யே பஹர் கீ ஃபிர் கபீ ந ஆயேகீ
தோ ஏக் பல் ஔர் ஹை யே ஸமா,
ஸுன் ஜா திகல் கீ…..
நட்சத்திரங்கள் பதிந்த இந்த இரவு மரக்கிளைகளில் தூங்குகிறது!
நட்சத்திரங்கள் பதிந்த இந்த இரவு உன் சிந்தனைகளில் மறைந்துவிட்டது!
இன்னும் சிறிது நேரத்தில் களைத்து அவள் ( இரவு) திரும்பிப் போய்விடுவாள்!
வஸந்தத்தின் இந்த இரவு இனி என்றும் திரும்ப வராது!
இந்த மகத்தான நேரம் இன்னும் ஓரிரு க்ஷணங்கள் தான் இருக்கும்–
நீ வந்து என் மனம் சொல்வதைக் கேட்டுச் செல்!
लहरों के होंठों पे धीमा धीमा राग है
भीगी हवाओं में ठंडी ठंडी आग है
इस हसीन आग में तू भी जलके देखले
ज़िंदगी के गीत की धुन बदल के देखले
खुलने दे अब धड़कनों की ज़ुबाँ, सुन जा…
லஹரோ(ன்) கீ ஹோடோ(ன்) பே தீமா தீமா ராக் ஹை
பீதி ஹவாவோ(ன்) மே டன்டீ டன்டீ ஆக் ஹை
இஸ் ஹஸீன் ஆக் மே தூ பி ஜல்கே தேக் லே
ஃஜிந்தகீ கே கீத் கீ துன் பதல் கே தேக் லே
குல் நே தோ அப் த்ட்கனோ(ன்) கீ ஃஜுபான்
ஸுன் ஜா தில் கீ தாஸ்தா(ன்)
இந்த அலைகளின் உதடுகளில் இனிய இசை திகழ்கிறது!
குளிர்ந்து வீசும் காற்றில் குளிர்ந்த நெருப்பு திகழ்கிறது!
இந்த அழகிய நெருப்பில் நீயும் வந்து விழுந்து எரிந்து பார்!
வாழ்க்கை என்னும் கீதத்தின் மெட்டை மாற்றிப் பாடிப் பார்!
உன்னுடைய மனமானது இப்பொழுதுதாவது திறக்கட்டும்!
வந்து என் மனம் சொல்வதைக் கேட்டுச் செல்!
जाती बहारें हैं उठती जवानियाँ
तारों के छाओं में क् हले कहानियाँ
एक बार चल दिये गर तुझे पुकारके
लौटकर न आएंगे क़ाफ़िले बहार के
आजा अभी ज़िंदगी है जवाँ, सुन जा
ஜாதீ பஹாரே ஹை உட்தீ ஜவானியா(ன்)
தாரோ(ன்) கே சாவோ(ன்) மே கஹ்லே கஹானியா(ன்)
ஏக் பார் சல் தியே கர் துஜே புகார் கே
லௌட் கர் ந ஆயேங்கே காஃபிலே பஹார் கே
ஆஜா அபீ ஃஜிந்தகீ ஹை ஜவா(ன்)
ஸுன் ஜா தில் கீ தாஸ்தான்.
வஸந்த காலம் கழிந்து போய்விடும், இளமை மறைந்துவிடும்
இந்த தாரகைகளின் நிழலில் உன் கதையைச் சொல்
இந்த வஸந்தம் ஒரு முறை உன்னை அழைத்துவிட்டுச் சென்றுவிட்டால்
பின்னர் திரும்பி வராது!
வாழ்க்கை இளமையாக இருக்கும் இப்பொழுதே வா,
என் மனம் சொல்வதைக் கேட்டுச் செல்.
Song: Ye raat ye chandni Film: Jaal 1952 Director: Guru Dutt Lyricist: Sahir Ludhianvi
Music: S.D.Burman Singer: Hemant KUmar.
This is a landmark song. Hemant Kumar sings his heart out! The picturisation is superb, with excellent camera work by the famed V.K.Murthy. Burman’s music is scintillating, pulling our heart strings. The melody has a haunting quality, and lingers in our minds and memory for long.
Sahir Ludhianvi’s poetry is superb, his imagination is fertile. See how he stresses time, and makes use of Nature to express his point.
இயற்கையுடனான இத் தொடர்பு நமக்கு சங்க இலக்கியத்தை நினைவூட்டுகிறது. அங்கும் அகத்துறைப் பாடல்களில் இயற்கைக்கு முக்கிய இடம் உண்டு.
முன் பார்த்த பாட்டில் உணர்ச்சிகள், எண்ணங்கள் மறைமுகமாகச் சொல்லப்பட்டன. இங்கு எல்லாம் தெளிவாக, நேரடியாக இருக்கிறது! இந்த விஷயத்திலும் இது நம் சங்க இலக்கியத்திற்கு ஒத்துப்போகிறது! காதல் இலக்கியத்திற்கு இங்கு இலக்கணம் வகுக்கிறார் ஸாஹிர்!
இது குருதத் டைரக்ட் செய்த முதல் படம்–இசை அருமையானது. இந்தக் காட்சியைப் பதிவுசெய்த விதம் அபாரம். இதே பாடல் சில மாற்றங்களுடன் டூயட்டாகவும் லதா மங்கேஷ்கருடன் சேர்ந்து பாடப்படுகிறது.
இந்தப் பாடல் ஹிந்துஸ்தானி காஃபி ( kafi) ராகத்தில் அமைந்துள்ளது. நம் சங்கராபரணம்போல் சம்பூர்ணராகம். சிருங்கார ரசத்திற்கும் வஸந்த காலத் தொடக்கத்திற்கும் ( ஹோலி பண்டிகை சமயம்) உகந்தது. இரவில் பாடவேண்டிய ராகம். எப்படிப் பாட்டின் கருத்துக்குப் பொருந்துகிறது பாருங்கள்! இது நம் அன்றைய இசையமைப்பாளர்களின் திறமைக்கு ஒரு சான்று!
இது நீண்டுவிட்டது. பெண்பாடகர்களின் பாட்டை தனியாகத்தான் பார்க்கவேண்டும்!

tags ஹிந்தி படப் பாடல்கள் – 12 , காதல் பாடல்கள்
****