

Post No. 10,134
Date uploaded in London – 25 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தோள் கண்டார் தோளே கண்டார்- கம்பனுக்குப் போட்டி!
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்
–(பால. 1028)- கம்பராமாயணம்
ராமனின் வடிவழகை வருணிக்க வந்த கம்பன் அருமையான ஒரு பாடலை நமக்கு அளித்தார்.தமிழ் விரும்பிகளுக்கு நன்கு தெரிந்த பாடல் இது.
இதே போல ஒரு பாடலை கம்பனுக்கும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பர்வத குமாரன் என்ற பிராகிருத மொழி கவிஞன் பாடி விட்டான்.
காதா சப்த சதி என்னும் பிராகிருத மொழி நூலில் 700 அகத்திணைப் பாடல்கள் உள்ளன . அவற்றில் ஒன்று இது.
ஹாலன் என்ற சாதவாகன மன்னன், கோடிப் பாடல்களில் இருந்து 700 பாடல்களை தேர்தெடுத்ததாக அதே புஸ்தகத்தில் ஒரு கவிதையும் உளது. இங்கே ‘கோடி’ என்பதை பத்து மில்லியன்- 100 லட்சம்– என்று கொள்ளாமல் ஏராளமான கவிதைகள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழில் உள்ள 2000 அகத்துறை பாடல்களைப் போலவே சமகாலத்தில் இப்படி பிராகிருத மொழியிலும் உளது. சுமார் 300 கவிஞர்கள் பாடிய பாடல்கள் இவை. ஆயினும் நிறைய இடைச் செருகல் இருப்பதால் 700க்கும் மேலான கவிதைகள் இத்தொகுப்பில் உள . மொத்தத்தில் 2000 ஆண்டுப் பழமையான நூல் என்று சொல்லலாம். அகநானூற்றில் உள்ள சில புலவர்கள் பெயர்கள் இதிலும் உள்ளன. சங்க இலக்கியத்தில் காணப்படும் பிரம்மச்சாரி , (குண்டுகட் ) பாலியாதன் ஆகிய பெயர்கள் சில எடுத்துக் காட்டுகள்.
ராமனுடைய உடல் அழகு எப்படிப் பட்டதென்றால் , அவருடைய உடலில் ஒரு அங்கத்தைக் கண்டவர்கள் அதிலிருந்து கண்களை எடுக்க முடியாமல் வியந்து பார்த்துக் கொண்டு இருப்பார்க்களாம் ; யாரும் தேகத்தின் முழு அழகைக் காண முடியவில்லையாம் ! அதைச் சொன்ன கம்பன் ஒரு அருமையான உவமையையும் நமக்கு அளிக்கிறான். எப்படி மதத்தைப் பின்பற்றுவோர் தன் கடவுளே சிறந்தவர் என்று அதையே பற்றிக்கொண்டு, போற்றிக்கொண்டு, இருப்பார்களோ அப்படி அவர்கள் உடல் அழகினையும் ரசிப்பார்களாம் .

2000 ஆண்டுகளுக்கு முன்னர் பர்வத குமாரன் என்ற பிராகிருத மொழிக் கவிஞன் பாடிய பாடலை பன்மொழிப் புலவர் மு.கு ஜெகந்நாத ராஜா இப்படித் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.:
எப்படிச் சொல்வ தேந்திழை எழிலே!
எங்கெங்கவ ள் அங்கங்களிற் பதியும்
பார்வையதுவே பங்கத் தழுந்தி
வீழ்த்த வலி யில் விடை போலெழாதே
–பர்வத குமாரன் (3-71)
இங்கே தலைவியின் அழகு/ எழில் வருணிக்கப்படுகிறது எந்த அங்கத்தில் என் பார்வை விழுகிறதோ அதிலிருந்து கண்கள் எழுவதே இல்லை – இவ்வாறு தலைவன் கூறுகிறான் ; இதற்கு அவன் கூறும் உவமை உழவன் உவமையாகும் . உழுகின்ற காளை (விடை) மாடுகள் எப்படி சேற்றில் (பங்கம்) ஆழப் பதிகின்றனவோ அப்படிப் பதிந்தன என்கிறான் . அதாவது கண்களால் அவளுடைய உடலை உழுது விடுகிறான் என்றும் சொல்லலாம்.

ஆனால் இவ்விரு புலவரில் கம்பனே சிறந்தவன் என்பது என் கணிப்பு. ஏனெனில் பெண்களின் உடல் அழகு வருணனை எல்லா நாட்டு, எல்லா மொழி இலக்கியங்களிலும் உளது. அதை ஒரு ஆண் மகனுக்கு — இராம பிரானுக்கு –ஏற்றிச் சொன்ன கம்பனின் திறமையே திறமை; புலமையே புலமை. வடுவூர் போன்ற இடங்களில் விக்கிரகமாக வடிக்கப்பட்ட இராமனின் அழகை ரசித்தோருக்கு இது நன்கு விளங்கும். பிராகிருத மொழிக் கவிஞன் பாடியதை மேம்போக்கான உடல் அழகு என்றால் கம்பன் சொன்ன அழகை தெய்வீக அழகு எனலாம்.!
காதா சப்த சதியிருந்து சில சுவையான கவிதைகள்
https://tamilandvedas.com › காத…
11 Jan 2015 — நான், காதா சப்தசதி என்னும் நூலை ஆங்கில … இந்த சப்த சதி 700 காதல் கவிதைகள் …
காதா சப்தசதியில் அதிசயச் செய்திகள்! – Tamil and …
https://tamilandvedas.com › காத…
9 Jan 2015 — கட்டுரை 4:- இதில் 700 காதல் கவிதைகளைக் கொண்ட பிராக்ருத —-காதா சப்த சதி— கவிதை …
புகழ் மிகு பிராக்ருத காதல் நூல் தோன்றிய கதை
https://tamilandvedas.com › புகழ…
6 Jan 2015 — பிராக்ருத மொழியில் காதா சப்த சதி என்ற ஒரு காதல் நூல் இருக்கிறது.
Did Hala copy Kalidas in GSS? | Tamil and Vedas
https://tamilandvedas.com › 2015/01/09 › did-hala-cop…
9 Jan 2015 — Research Paper written by london swaminathan Research article No 1561; Dated 9th January 2015. Gatha Sapta Sati (GSS) is a Prakrit book of …

–subham—
Tags- காதா சப்த சதி ,ஹாலன் , கம்பன், உடல் அழகு, தோள் கண்டார்