பெண்கள் வாழ்க Part 16; ராமாயண காலத்தில் ஒரு பெண்துறவி (Post 9529)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9529

Date uploaded in London – –25 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

(பெண்கள் வாழ்க தொடர் மார்ச் 22, 2021ல் துவங்கியது. முதல் கட்டுரை எண் 9410)

வேதகாலத்தில் மைத்ரேயி போன்ற பெண் தத்துவ ஞானிகள் இருந்ததை போல இதிகாச காலத்திலும் பலர் இருந்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் சபரி. இவர் தமிழ்நாட்டு ஔவைப்

என்கிறது இதிஹாசம். ராவணன் சீதையால் அழிந்த ராமாயணக் கதையை  அனைவரும் அறிவர்.

to be continued……………………………………………………….

tags – பெண்கள் வாழ்க 16,  ராமாயண கால, பெண்துறவி, காந்தாரி , தவறு, 

துரியோதனா! எங்கு தர்மமோ அங்கே ஜயம்! : காந்தாரி! (8567)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8567

Date uploaded in London – – –25 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹாபாரதத் துளிகள்!

துரியோதனா! எங்கு தர்மமோ அங்கே ஜயம்! : காந்தாரி!

ச.நாகராஜன்

மஹாபாரதப் போரில் துரியோதனன் ஏன் வெற்றி பெறவில்லை?

படைபலமும் அவனுக்கு அதிகம். பீஷ்மர், துரோணர், க்ருபர், கர்ணன் உள்ளிட்ட ஏராளமான அஸ்திர சஸ்திர வித்தைகள் தெரிந்தவர்களும் அவன் பக்கமே.

பதினோரு அக்ஷௌஹிணி சேனை கொண்ட அவனால் ஏழு அக்ஷௌஹிணி சேனை கொண்ட பாண்டவர்களை ஏன் வெல்ல முடியவில்லை?

இதற்கான காரணத்தை ஒரு அழகிய சம்பவம் விவரிக்கிறது.

யுத்தம் வரப்போகிறது, வரப்போகிறது, வந்தே விட்டது.

உடனே துரியோதனன் அவனது தாயான மஹாபதிவிரதையான காந்தாரியிடம் ஆசீர்வாதம் பெறச் செல்கிறான்.

அன்னையிடம் வந்த அவன் கைகளைக் குவித்துக் கொண்டு, “ அம்மா, இந்த ஞாதிகளுடைய சண்டையில் எனக்கு ஜயத்தைக் கூற வேண்டும் என்று வேண்டினான்.

ஒரு அம்மாவாக உடனே ‘தந்தேன் ஆசீர்வாதம், நீ ஜயிப்பாயாக என்று காந்தாரி சொன்னாளா? சொல்லவில்லை.

காந்தாரி கூறினாள் : “எங்கு தர்மமோ அங்கு ஜயம்

தர்மம் வென்றது.

காட்சி மாறுகிறது.

போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த துரியோதனனின் உடலைப் பார்த்துக் கதறுகின்ற போது காந்தாரி இப்படிக் கூறி புலம்புகிறாள்:

“பெரிய வில்லை உடையவன்.மஹா பலசாலி. அப்படிப்பட்ட இந்த துரியோதனன் சிங்கத்தினால் புலி தள்ளப்படுவது போல பீமசேனனால் தள்ளப்பட்டுக் கிடக்கிறான்.

சிறுவனும் மந்தர்களை அடைந்தவனும், மந்தனுமான இவன் விதுரரையும் பிதாவையும் அவமதித்து விருத்தர்களுடைய அவமானத்தினால் இப்படி மரணத்தை அடைந்து விட்டான்.

பல்வேறு விதமாகப் புலம்பும் காந்தாரி, கிருஷ்ணனை நோக்கி, “நான் எதற்காகப் பிழைத்திருக்கிறேன்? என்று கேட்கிறாள்.

தன் துக்கத்தை விட இன்னும் பெரிதான ஒரு துக்கத்தை அவள் கிருஷ்ணரிடம் கூறுகிறாள் :

“கிருஷ்ணா, இதோ பார்! அழகிய இடையை உடையவள். பொன்னாலாகிய வேதிக்கு ஒப்பானவள். இவள் இப்போது விரித்த கூந்தலை உடையவளாக இருக்கிறாள். துரியோதனனுடைய தோள் நடுவை அடைந்த லக்ஷ்மணனின் இந்தத் தாயைப் பார். நல்ல மனமுள்ளவளான இந்தச் சிறு பெண் துரியோதனன் உயிரோடிருந்த காலத்தில் துரியோதனனுடைய இரு கைகளையும் அடைந்து சுகித்தாள்.

யுத்தத்தில் என் பேரனும் புத்திரனும் கொல்லப்பட்டதைக் காணும் என் உள்ளம் ஏன் இன்னும் நூறு சுக்கலாகச் சிதறிப் போகவில்லை?!

இவள் புத்திரனை முகர்ந்து பார்க்கிறாள். துரியோதனனை கையினால் நாற்புறமும் தடவிக் கொண்டிருக்கிறாள்!

நல்ல மனமுள்ள இந்தப் பெண் தன் கணவனுக்காக அழுவாளா, அல்லது தன் மகனுக்காக அழுவாளா?

ஹே கிருஷ்ணா, நீண்ட கண்களை உடைய இவள் இரு கைகளாலும் தன் தலையில் அடித்துக் கொண்டு அவன் மார்பில் விழுந்து அழுகிறாளே!

சாஸ்திரங்கள் மட்டும் உண்மையாக இருக்குமாகில், அதே போல வேதங்களும் ஸத்தியமாக இருக்குமாகில் இந்த துரியோதனன் தோள்வன்மையால் அடையப்பட்ட உலகங்களை அடைந்தான் என்பது மட்டும் நிச்சயம்!

இப்படி ஆரம்பிக்கும் காந்தாரி கிருஷ்ணரிடம் போர்க்களத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்ததையும் அவர்களின் மனைவிமார்கள் கதறுவதையும் காண்பிக்கிறாள்.

துச்சாதனன் திரௌபதியை சபையில் இழுத்து வந்த போது அவளை விட்டு விடு என்று துச்சாதனனிடம் சொன்னதை நினைவு கூர்கிறாள்.

விகர்ணன், துர்முகன் ஆகிய ஒவ்வொரு புத்திரனையும் பார்த்துப் பார்த்து அவள் அழுது புலம்புகிறாள்.

பின்னார் காந்தாரி கர்ணனின் மனைவியரைக் காட்டுகிறாள். பீஷ்மர் உள்ளிட்டோரின் குணங்களைக் கூறி அழுகிறாள்.

அவள் மனம் ஆறவில்லை.

இந்தப் போரின் வெற்றி தோல்விக்கு கிருஷ்ணனே காரணம் என்பதைத் தெளிந்து தெரிந்து கொண்ட அவள் கிருஷ்ணனை நோக்கிக் கூறுகிறாள்;

“ஹே! மதுசூதன! நீ கௌரவர்களது சேனை அழிவை விரும்பி இருக்கிறாய்! ஆகவே கூறுகிறேன் கேள். நான் கணவனுக்குச் செய்த பணிவிடையினால் சிறிது சம்பாதித்ததும் பிறரால் அடைய முடியாததுமான தவத்தின் பெயரால் சக்கரத்தையும் கதையையும் தரித்திருக்கிற உன்னைச் சபிக்கிறேன். இது முதல் முப்பத்தாறாவது வருடம் நீ நாசத்தை அடையப் போகிறாய். இதே போல உன்னைச் சேர்ந்த பெண்களும் கதறி அழப் போகிறார்கள்

கோரமான இந்த சாபத்தைக் கேட்ட கிருஷ்ண பரமாத்மா புன்முறுவல் பூத்தார்!

“க்ஷத்திரியப் பெண்ணே! நானும் இப்படி ஆகப் போகிறேன் என்பதை அறிவேன். என்னால் அநுஷ்டிக்கப்பட்டதையே நீ அனுஷ்டிக்கிறாய்! யாதவர்கள் யாராலும் கொல்லப்பட முடியாதவர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு நாசமடைவர்

அனைவரும் இதைக் கேட்டுத் திடுக்கிட்டனர்.

போரின் முடிவு தான் உச்சகட்டம் என்று நினைத்திருந்தவர்களுக்கு அடுத்த கிளைமாக்ஸை இப்படி கண்ணன் முன் வைக்கிறார்.

யுத்தத்தின் விளைவையும், அறம் வெல்லுவதையும், இதையெல்லாம் நடத்தும் சூத்ரதாரியான கிருஷ்ணன் தன் முடிவையும் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்வதையும் வியாசரைத் தவிர வேறு யாரால் இப்படித் திறம்பட அழகுறச் சொல்ல முடியும்?

ஸ்திரீ பர்வத்தில் பதினேழாவது அத்தியாயம் முதல் இருபத்தைந்து அத்தியாயம் வரை விளக்கப்படும் இந்தச் சம்பவங்கள் போரில் துரியனின் அழிவுக்கான காரணத்தை அறிய முடிகிறது.

சூத்ரதாரியான கண்ணன் அறத்தைக் காக்கவும் மறத்தை வீழ்த்தவும் யுகம் தோறும் அவதரிக்கும் பரமாத்மா தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

*

வ்யாஸாய விஷ்ணு ரூபாய! உமக்கு ஒரு நமஸ்காரம்!

வியாசர் உள்ளிட்டோராலும் அறிய முடியாத அற்புத கிருஷ்ணரே! உமக்கு கோடி நமஸ்காரம்!!

tags – காந்தாரி, துரியோதனன்

**