நாடகத்தில் யாருக்கு என்ன கலர்? என்ன மொழி? (Post No.7861)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7861

Date uploaded in London – 21 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

யவனர்கள் பற்றிய எல்லா குறிப்புகளையும் தொகுத்து வழங்கும்– ‘ இந்திய இலக்கியத்தில் யோனர்களும் யவனர்களும்’ — என்ற ஆங்கில நூல் (பின்னிஷ் ஓரியண்டல் சொசைட்டி) நாட்டிய சாஸ்திரத்தில் யவனர்கள் பற்றி என்ன சொல்லி இருக்கிறது என்பதைத் தருகிறது. அவர்கள் பேசிய மொழி, அவர்கள் முக வர்ணம் பற்றி  சுவையான விஷ்யங்களைத் தருகின்றன.

Yonas and Yavanas in Indian Literature, Klaus Karttunen, Finnish Oriental Society,, Helsinki

முதலில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பரத முனி எழுதிய சம்ஸ்க்ருத நூலான நாட்டிய சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதை ப் பார்ப்போம்:-

பரத நாட்ய சாஸ்த்ர 13-59

இதில் தென்னக மக்களுடன் யவனர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோசலாஸ் தோஸலாஸ் சைவ கலிங்கா யவனாஹா காசாஹா

த்ராவிடாந்த்ரமஹாராஷ்டிர  வைஸ்னா  வை வானவா சஜாஹா

இதில் கலிங்க , யவன, திராவிட , ஆந்திர, மகாராஷ்டிரா என்ற வரிசை வருவது பலரையும் வியப்புக்குள்ளாக்குகிறது

எனது கருத்து :-

தமிழ் நாட்டில் பல இடங்களில் யவனர் சேரிகள் (காலனிகள்) இருந்ததாக பழந்தமிழ் நூல்கள் செப்புகின்றன . அவர்களில் பலர் நாடகக் கலையைப் பயின்றிருக்கலாம் .

மேலும் முன்னொரு கட்டுரையில் நான் நான்கு வகையான, யவன,யோனர்களை தமிழ் , சம்ஸ்க்ருத இலக்கியங்கள் பாடியிருப்பதைக் காட்டி இருக்கிறேன் . சங்கத் தமிழ் நூல்கள் காட்டும் யவனர்கள் இத்தாலியிலிருந்து வந்த ரோமானியர். பிற்கால தமிழ் நூல் காட்டும் ‘யவன தச்சர்கள்’ வடமேற்கு இந்தியாவின் ஒரிஜினல், ஆதி யவனர்கள் . அதற்குப் பின்னர் சம்ஸ்க்ருத இலக்கியம் பேசும் யவனர்கள் அலெக்ஸ்சாண்டருடன் வந்த கிரேக்க நாட்டவர். துலுக்கர் படையெடுப்புக்குப் பின்னர் ‘யவனர்கள் , யோனர்கள்’ என்போர் அராபியர்கள் அல்லது துலுக்கர்கள் (துருக்கர்கள்). ஆகவே இவர்களில் பெரும்பாலும்  தென்னக காலனிகளில் வசித்த இத்தாலியர்களே / ரோமானியர்களே .

(இரண்டாம் நூற்றாண்டு கிரேக்க குறு நாடகத்தில்  கன்னட அல்லது துளு  மொழி சொற்கள் உள்ளன என்பர். ஆயினும் இம்மொழிகள் உருவானது இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே.)

பரத முனிவர் இன்னுமொரு இடத்தில் எந்தெந்த வகுப்பினருக்கு முகத்தில் என்ன சாயம் பூசி நடிக்கவோ, நடனமாடவோ வைக்கவேண்டும் என்று இயம்புகிறார்:–

பாரத நாட்ய சாஸ்திரம் 23-105

கிராடபார்பராந்த்ராஸ் ச த்ரமிலாஹா காசிகோசலாஹா

புலிந்தா தக்ஷிணாட்யாஸ் ச ப்ராயேன த் வசிதா ஸ்ம்ருதாஹா

சகாஸ் ச யவனாஸ் சைவ பஹ்லவா வாஹ்லிகா தயாஹா

ப்ராயேன கௌரவாஹா கர்தவ்யா உத்தராம்யே  ஸ்திரிதா திசம்

இதன் பொருள் என்ன?

கிராட , பார்பர , ஆந்திர , த்ராவிட,  காசி, கோசல நாட்டவர்க்கும்

புலிந்தர்களுக்கும் தென்னாட்டினருக்கும் – மாநிறம் அல்லது கருப்பு.

வடக்கேயுள்ள சகரர், யவனர், பஹ் லவர்கள் , பாஹ்லிகர்ளுக்கு – இளம் சிவப்பு நிறம் ;

ஜாதிகளைப்  பொறுத்தமட்டில் , பிராஹ்மணர்கள் , க்ஷத்ரியர்களை இளம் சிவப்பு வண்ணத்திலும், வைஸ்ய, சூத்ர வர்ணத்தாரை கருநீல வண்ணத்திலும் காட்டும் வகையில் ‘மேக் அப்’ (Make up) போடுக.

xxx

காவ்யமீமாம்ச நூல்

ராஜசேகரன் எழுதிய காவ்யமீமாம்சம்  கீழ்கண்ட செய்தியை அளிக்கிறது —

காவ்யம் 17

யவனர்கள் முதலியோரின் இருப்பிடம்

தேவசபாவைத் தாண்டிச் சென்றால் மேற்கத்திய தேசங்கள் வரும் –

அவை சுராஷ்ட்ரம் , தசரேக, த்ரவன, ப்ருகு கச்ச , கட்ச் , அற்புத, அனர்த்த, பிராஹ்மண வாஹ , யவன தேசம்.

(இதிலுள்ள பிராஹ்மண தேசத்தை பாணினி (5-2-81)யும்,  பதஞ்சலியும் குறிப்பிடுகின்றனர். அது இப்போதும் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் பிராஹ்மணாபாத் என்ற நகரமாக இருக்கிறது .இதுபற்றி பிராமண நாடு, சூத்திர நாடு என்ற எனது கட்டுரையில் விவரித்துள்ளேன். அலெக்ஸ்சாண்டருடன் வந்த வரலாற்று ஆசிரியர்கள் இதை கிரேக்க மொழியில் ‘பிராஹ்மனோய்’  Brachmanoi என்று எழுதிவைத்துள்ளனர்.)

இதே வரிசையில் மலைகள், நதிகள் ஆகியவற்றையும் காவ்ய மீமாம்சம் குறிப்பிடுகிறது:–

கோவர்த்தன , கிரிநாகர , தேவசபா , மால்ய சிகர, அற்புத.

நதிகள் – ஸரஸ்வதீ , ஸ்வப்ரவதீ , வார்த்தக்னீ , ,மஹா ஹிடிம்பா.

Xxx

ரஸார்ணவ சுதாகர’

இதற்குப் பின்னர் 1400ம் ஆண்டு வாக்கில் சிம்மபூபால என்கிற மன்னன், ‘ரஸார்ணவ சுதாகர’ என்ற நாடக நூலில்  யவன கதா பாத்திரங்கள் என்ன மொழியைப் பேசவேண்டும் என்று சம்ஸ்க்ருதத்தில் எழுதி இருக்கிறார் —

கீழ்த்தர, மத்தியதர வர்க்க நடிகர்கள்/கதா பாத்திரங்கள் – ஸுரஸேனி ;

ரவுடிகள், கீழானவர்கள் – மாகதி ;

ராக்ஷஸர்கள், பேய், பிசாசுகள் — பைசாசி;

சண்டாளர்கள், யவனர்கள் – ஆப பிராஹ்ம்ச .

tags — பரத , நாட்டிய சாஸ்திரம், யவனர், நிறம், மொழி, காவ்ய மீமாம்சம்

–subham–