
Article written by London swaminathan
Date: 22 May 2016
Post No. 2830
Time uploaded in London :– 6-55 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

கடலுக்கடியில் இருக்கும் ஒரு பெரிய மலைத் தொடர் பற்றி இந்திய இலக்கியங்கள் பேசுகின்றன. தமிழ், சம்ஸ்கிருத நூல்கள் இதைப் பற்றி குறிப்பிடுகின்றன. கடலுக்கடியில் வட்டமாக பூமியைச் சுற்றி இம்மலை இருப்பதாக மக்கள் நம்பினர். இதனால் இதை, புலவர் பெருமக்கள் உவமையாகக் கூட பயன்படுத்தினர்.
இப்பொழுது கடலடி மலைகளையும், கடற் படுகைகளையும் ஆராயும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாகிவிட்டதால் எளிதில் ஆராய முடிகிறது. கடலுக்கடியில் மிக உயரமான மலைகள் இருப்பதை கடலியல் ஆராய்ச்சியளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆயினும் நமது இலக்கியங்கள் வருணிப்பது போல இது வட்டமாகத் தொடர்ந்து இல்லாமல் ஆங்காங்கே இடைவெளி விட்டு மலைத் தொடர்களாக இருக்கின்றன. இதைத் தான் நமது இலக்கியங்கள் சக்கரவாளம் என்று வருணிக்கிறது என்று சொல்லலாம்.
கடலடி ஆராய்ச்சிக் கருவிகள் இல்லாமலேயே, பூமி முழுவதும் எல்லா இடங்களிலும், கடலுக்கடியில் இப்படி ஒரு மலைத் தொடர் இருப்பதைக் கண்டுபிடித்த நம் முன்னோர்களின் அறிவை எண்ணி வியக்கலாம். கடற்பயணம் செய்த நம் முன்னோர்கள் இதைக் கண்டு பிடித்திருக்கலாம்.
இதோ கம்பன் சொல்லும் உவமை:
தேமொழி திறத்தினால் அரக்கர் சேனை வந்து
ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார்
நேமி மால் வரைநெருக்குகின்றதே
ஆம் எனல் ஆய கைம்மதிட்குள் ஆயினார்
-கவந்தன் படலம், ஆரண்ய காண்டம், கம்பராமாயணம்
பொருள்: சக்கரவாளம் என்று பெரிய மலை ஒன்று உள்ளது. அது நெருங்கி வந்து நெருக்குகிறது என்று சொல்லுமாறு கவந்தன் என்னும் ராட்சசனின் கைகள் ராம, லட்சுமண சகோதரர்களைச் சுற்றி வளைத்தது. தேன் போல இனிய மொழி பேசும் சீதையின் பொருட்டு அரக்கர் சேனை வந்துவிட்டது என்று எண்ணி மகிழ்ந்தனர்.
கவந்தனின் கைகள் வளைத்ததை, சக்கரவாக மலை நெருக்கியதற்குக் கம்பன் ஒப்பிடுகிறார். மக்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருந்தால்தான் புலவர்கள் அதை உவமையாகப் பயன்படுத்துவர். ஆகவே மக்களுக்கு இதுபற்றி நன்கு தெரிந்திருந்தது என்றே சொல்லல்லாம்.

கம்பனுக்கு முன் தோன்றிய பழமொழி நானூறு என்னும் நூலிலும் இதோ ஒரு உவமை:-
கெடுவலெனப்பட்ட கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் – நெடுவரை
முற்று நீராழி வரையகத் தீண்டிய
கற்றேயும்; தேயாது சொல்
-பழமொழி
பொருள்:- பெரிய சக்கரவாள மலை சூழ்ந்த கடலை எல்லையாக உடைய உலகத்திலுள்ள மலைகள் தேயும்; ஆனால் வடுச்சொல் தேயாது. ஆகையால் தான் கெடுவோம் என்று தெரிந்தாலும்,தனக்கு பழி உண்டாகத செயல்களையே செய்தல் வேண்டும்.
–சுபம்–
You must be logged in to post a comment.