குமரிக்கண்டம் அட்லாண்டிஸா? (Post.9571)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9571

Date uploaded in London – –5 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

இந்தப் படம் பொருள்படைத்தது. ஏனெனில் மடகஸ்கார் (இப்பொழுது மலகாசி ) தீவில் நிறைய ஸம் ஸ்க்ருத பெயர்கள் இருப்பதை 1932 மைலாப்பூர் உரையில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சுட்டிக்காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பழங்குடி மொழிகள் இருந்தாலும் கொஞ்ச்ம தமிழ் சொற்களை இனம் காண முடிகிறது. ஆக ஆஸ்திரேலியா, இந்தியா, மடகாஸ்கரை இணைக்கும் லெமுரியா கண்டத்தை குமரிக்கண்ண்டாம் என்று இனம் காணலாம். மலகாசி- இந்தோனேஷியா தொடர்பு மிகவும் வியக்கத்தக்கது. ஆனால் இப்படி நிலங்கள் இணைந்து இருந்தது மனித இனாம் தோன்றுவதற்கு முன்னர் இருந்தது , சமீப காலத்தில் அல்ல என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்

லெமுரியா, அட்லாண்டிஸ் ஆகிய இரண்டும்  தொலை துரத்தத்தில் இருந்ததாகக் கருதப்படுவதால்

இரண்டும் ஒன்றாக இருக்க முயடியாது.

Lemuria

1864, name given by English zoologist Philip L. Sclater (1829-1913) to an ancient continent or land bridge, now sunk in the Indian Ocean, connecting Africa, Madagascar, India, and Southeast Asia, which he hypothesized to explain the geographical distribution of mammals around it, especially the lemur, hence the name (with -ia). The premise was considered scientifically untenable by 1880and the phenomena now are accounted for otherwise, but Lemuria in some ways by chance anticipated Gondwanaland (1896) in the continental drift model.

Earlier Lemuria was the name of the Roman feast of the Lemures, evil spirits of the dead in Roman mythology. The head of each household ritually exorcised them every 9th, 11th, and 13th of May. Related: Lemurian

கிரேக்க அறிஞர் பிளாட்டோ (Plato) எழுதிய நூலில் கடலில் மூழ்கிய அட்லாண்டிஸ் (Atlantis) பற்றி குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரம் முதலிய தமிழ் நூல்கள் குமரிக்கோடு பஃறுளி ஆறு

tags- குமரிக்கண்டம், லெமூரியா , பிளாட்டோ, அட்லாண்டிஸ்

தமிழர்களின் குமரிக் கண்டம் அழிந்தது எப்படி? (Post No.4121)

 

 

Written by London Swaminathan
Date: 2 August 2017
Time uploaded in London- 15-54
Post No. 4121
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

pictures by london swaminathan.

 

 

சிந்து சமவெளி நாகரீக அழிவுக்கும்  , குமரிக்  கண்ட மறைவுக்கும்   கிரேக்க எரிமலை வெடிப்புக்கும் தொடர்பு?

 

கிரேக்க நாட்டுத் தீவில் இன்பச் சுற்றுலா – பகுதி 2 (முதல் பகுதி நேற்று வெளியானது)

 

 

 

சான்டோரினி (Santorini Islands) தீவு அழகான பிரமிப்பூட்டும் காட்சிக்கு மட்டும் பெயர்போன இடம் என்று எண்ணிவிடக்கூடாது. அந்த மண்ணில் நின்றபோது எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஏன் என்றால் நான் சிந்து/ சரஸ்வதி நதிச் சமவெளி நாகரீகம் பற்றி எழுதிய 20, 25 கட்டுரைகளுக்கும், ஆரிய- திராவிட ‘புருடா’, ‘கப்ஸா’, ‘பொய் பித்தலாட்டம்’ பற்றி எழுதிய 20, 30 கட்டுரைகளுக்கும் எனது தேரா (Thera/ Santorini சாண்டோரினி) தீவு விஜயத்துக்கும் தொடர்பு உண்டு.

வரலாற்றையே மாற்றிய ஒரு மிகப் பெரிய எரிமலை வெடிப்பு கி.மு 1630ல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பாகும். அதற்கு முன்னரும் பின்னரும் இந்த தேரா/ சாண்டோரினி எரிமலை பல முறை சீறி இருக்கிறது.

 

எரிமலை வெடித்து அதற்குள் ஏற்படும் பள்ளங்களில்  நீர் நிரம்பி ஏற்படும் சமுத்திரப் பகுதிகளை கால்டெரா எனபர். அப்படிப்பட்ட கால்டெரா (Caldera) வில்தான் நான் நின்றேன்.

 

இந்த பிரம்மாண்ட தேரா வெடிப்பு பற்றி பல மர்மங்கள் உள்ளன. தமிழர்களாகிய நாம் குமரிக் கண்டம் மறைந்தது பற்றி எப்படி அங்கலாய்க்கிறோமோ அதே போல கிரேக்க நாட்டு எழுத்தாளர்களும் புலவர்களும் அட்லாண்டீஸ் (Atlantis) என்னும் மர்ம கண்டம் முழுகியது பற்றி நிறைய எழுதி வைத்துள்ளனர். அதை ஏற்காதோரும் இந்த எரிமலை வெடிப்பால் மினோவன் (Minoan Civilization) நாகரீகம் அழிந்ததை ஒப்புக் கொள்வர். இந்த எரிமலை சீற்றத்துக்கும் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சீன ஆட்சிக் குழப்பத்துக்கும், எகிப்திய ஆட்சிக் குழப்பத்துக்கும் (கி.மு.1600) இதுவே காரணம் என்பது வரலாற்றாய்வா ளர்களின் ஊகம். இதை எல்லாம் பார்க்கும் போது நமது குமரிக் கண்டம் மறைந்ததற்கும் சிந்து / சரஸ்வதி நதி தீர நாகரீகம் க்ஷீணம் அடைந்து படிப்படியாக மறைந்ததற்கும் தொடர்பு இருக்கிறது என்பது என் கணிப்பு. ஆகையால்தான் நான் இந்த மண்ணில் நின்றபோது ஒரு பிரமிப்பு, ஆனந்தக் களிப்பு!

2000 தீவுகள் உடைய நாடு!!

 

கிரேக்க நாட்டுக்குச் சொந்தமாக 2000க்கும் மேலான தீவுகள் உள்ளன.

கடலிடையே உள்ள சிறிய குன்றுகளையும் கணக்கில் சேர்த்தால் 6000 தீவுகள் என்றும் சொல்லுவர்.

 

இவ்வளவு தீவுகள் இருந்தாலும் (Crete) க்ரீட் எனப்படும் மினோவன் நாகரீக தலைமையிடமும் இந்த சாண்டோரினி தீவும்தான் முக்கியமானவை.

 

சாண்டோரினி தீவின் தலை நகர் Fபிரா. (Fira)–இயா என்னும் கிராமத்தில் (Oia) சூரிய அஸ்தமனத்தைக் காண ஏராளமானோர் வருவர். கழுதையில் சுற்றிப் பார்க்கவும் வசதி உண்டு. எல்லாவற்றுக்கும் கட்டணம்தான். ஏதன்ஸ் நகரை விட உணவும் உறைவிடமும் அதிக செலவு பிடிக்கும் இடங்கள்.

 

இந்த இடம் ஒரு குறிப்பிட்ட வகை ஒயின் (Wine) செய்வதற்கும் பெயர் பெற்ற இடம். ஆகையால் பழங்காலத்தில் எப்படி ஒயின் செய்தனர் என்பதைக் காட்டும் மியூசியமும் (Winery Museum)  உள்ளது.

அக்ரோதிரி (Akrotiri) என்னும் இடத்தில் தொல்பொருட் துறையினர் மினோவன் நாகரீக தடயங்களைக் கண்டு எடுத்துள்ளனர். அங்கு ஒரு காட்சி சாலையும் இருக்கிறது.

கருப்பு நிற மணல் கடற்கரையும் சிவப்பு மணல் கடற்கரையும் ஒரே தீவில் இருப்பது இயற்கை அதிசயமே.

 

நாங்கள் இயா (oia) கிராமத்தில் கடைத் தெருவில் நின்றபோது நம் ஊரில் மார்கழி மாத பஜனை கோஷ்டி வருவது போல ஒரு கோஷ்டி இசை முழக்கத்துடன் சென்றது. தினமும் நடக்கும் கிரேக்க இசை நடன ஷோவுக்கு விளம்பரம் தேடி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துச் சென்றனர்.

 

ஒரு பழங்கால மொனாஸ்ட்ரிக்கும் (Monastery) சென்று வந்தோம். கிரேக்க நாட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் வகுப்பினர் (Greek Orthodox) அதிகம். இது பிராடெஸ்டண்ட், கதோலிக்கத்திலிருந்து வேறுபட்டது.

 

சுற்றுலா வரும்படியை நம்பியே மக்கள் வாழ்கின்றனர். கிரேக்க நாடு சலவைக் கல் எனப்படும் மார்பிள் (marble) கற்களை அதிகம் உற்பத்தி செய்கிறது. உலக உற்பத்தியில் ஏழு சதவிகிதம் இவர்களுடையதே. கிரேக்கர்களுக்கு என்று சில விசேஷ உணவு வகைகளும் உண்டு. நாங்கள் கிரீக் சாலட் (Greek salad) முதலிய வெஜிட்டேரியன் வகைகளை மட்டும் சுவைத்தோம்.

 

அடுத்த கட்டுரையில் ஏதென்ஸ் அதிசயங்களை எழுதுகிறேன்.

TAGS:- தேரா மினோவன், சிந்துவெளி, குமரிக்கண்டம்

–சுபம்–