பரபரப்பு உண்டாக்கிய கென்னடி கொலை வழக்கு (Post No.7423)

Written by London Swaminathan

Uploaded in London on  – 5 JANUARY 2020

Post No.7423

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

நான் தினமணிப் பத்திரிகைக்கு 1992  ஜனவரியில் எழுதி அனுப்பிய  கட்டுரையைக் குப்பைத்தொட்டியில் போடுவதற்கு முன்னர் இங்கே வெளியிடுகிறேன். இது என்ன நியாயம்? குப்பைத் தொட்டியில் போட வேண்டிய  பழைய கட்டுரையை இங்கு வெளியிடலாமா? என்று சிலர் கேட்கலாம். வெளிநாட்டிலும் நிறைய இளிச்சவாயர்கள், இன்னும் சொல்லப் போனால் இளிச்சவாயிகள் உண்டு என்று காட்டத்தான்.

சுமார் 55 ஆண்டுகளாக மாதா மாதம் கென்னடி கொலை (J.F.Kennedy Assassination) விவகாரத்தை டெலிவிஷனில் காட்டுகிறார்கள்.  புதிய பரபரப்பான தலைப்பைப் போட்டுவிட்டு பழைய செய்தியையே காட்டுவர். ஏதோ புதிதாகக் கண்டுபிடித்தது போல ஓரிரு கேள்விகளைக் கேட்டுவிட்டு  ஏமாற்றுவார்கள். கென்னடியும் அவர் மனைவி ஜாக்குலினும் மிகவும் வசீகரத் தோற்றம் உடையவர்கள் என்பதால் எத்தனை முறை அரைத்த மாவையே அரைத்தாலும் வாயில் கொசு போனதும் தெரியாமல் பெண்கள் இதை பார்க்கிறார்கள் . ஒருவேளை நீங்கள் கடந்த சில ஆண்டுகளில் இளைஞர் ஆகி இருந்தால் — புதிய தலைமுறை என்றால் — உங்களுக்கு இது புதிய செய்தி என்ற முறையில் ஆர்வத்தை ஏற்படுத்தலாம். இதோ எனது பழைய தினமணிக் கட்டுரை