சங்க காலத்தில் புலவர்களின் ஜாதி பேதம் பார்க்கவில்லை! (Post N.4978)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 5 MAY 2018

 

Time uploaded in London –  5-08 AM   (British Summer Time)

 

Post No. 4978

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

சங்க இலக்கிய காலத்தில் புலவர்களின் ஜாதி பேதம் பார்க்கவில்லை!

 

ச.நாகராஜன்

 

திராவிடம் என்று மார் தட்டும் தம்பிகள் அகநானூறையும் புறநானூறையும் முன்னிறுத்தி அகநானூற்றுத் தம்பியே ஆர்ப்பரித்து வா; புறநானூற்றுப் போர்வீரனே பொங்கி எழு என்றெல்லாம் போலி வசனம் பேசிய காலத்தில் அதனால் ஏமாந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அதற்கான பலனை இப்போது அனுபவித்து தமிழகத்தை இழிநிலைக்கு உள்ளாக்கி மோசமான நிலையில் வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம்.

பார்ப்பன எதிர்ப்பு; பார்ப்பன காழ்ப்பு என்ற அடிப்படை வெறுப்பில் உருவாகிய திராவிடக் கட்சிகள் அதனால் சொந்தக் குடும்பங்களுக்கு ஆதாயம் சேர்த்தது தான் மிச்சம்.

ஆனால் அந்தக் கொடிய செயலே அந்தக் குடும்பங்களுக்குள் குழப்பம் விளைவித்திருப்பது தர்மத்தின் வழி முறை தானே!

சொத்து யாருக்கு என்பதில் – அதாவது சொத்தை ஒரு டிரஸ்டாக ஆக்கினாலும் அதை ஆள்வது யார் என்பதில் – நடக்கும் போர் அவர்களை அழித்து விடும் என்பதைக் காலம் காட்டும்.

சங்க இலக்கியத்தை நன்கு படிக்காமலேயே இவர்கள் விட்ட கட்டுக் கதைகள் அந்தக் கால (ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் வாழ்ந்த) தமிழர்களை ஏமாற்றி நாசமுறச் செய்தது.

இதனால் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்பது போல ஒரு திருடர் கூட்டம் தான் உருவானது.

நிற்க, சங்க இலக்கியத்திற்குத் திரும்புவோம்.

அங்கு ஜாதி பேதமே இல்லை; பார்ப்பன வெறுப்போ, பார்ப்பன காழ்ப்புணர்ச்சியோ இல்லை.

தமிழ் படித்த யார் வேண்டுமானாலும் அவர் நன்கு இலக்கியம் படித்து கற்பனை வளத்தில் ஊறி அருமையான கருத்து வளம் சொல் வளம், நன்னெறி போதிக்கும் திறமை, உவமைகளைக் கையாளுவது போன்றவற்றில் திறம்பட்டு இருந்தால் அவர் புலவராகலாம்.

 

ஆணியம் பெண்ணியம் என்ற பால் வேறுபாடும் அந்தக் காலத்தில் இல்லை என்பது வியப்பூட்டும் ஒரு குறிப்பிடத் தகுந்த விஷயம்!

இப்படி புகழுடனும் பெருமையுடனும் பரந்த மனப்பான்மையுடனும் உலக நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் மனப்பானமையுடனும் வாழ்ந்த தமிழர்களை நாம் மறந்து விட்டோம்.

நமது முன்னோர்களை கொச்சைப் படுத்தி பார்ப்பனன், பார்ப்பனன் அல்லாதோன் என்றெல்லாம் வகை வகையாக வேறுபடுத்தி பல்வேறு சண்டைகளை மூட்டி அரசியல் ஆதாயம் பார்க்கும் தலைவர்களின் கீழ் வாழ்கிறோம். என்ன கொடுமை இது!

சில குறிப்புகளைக் கீழே பார்த்தால் சங்க இலக்கியப் புலவர்கள் பற்றி நன்கு அறியலாம்:

புலவர்களில் அந்தணர்

ஆமூர்க் கௌதமன் சாதேவனார்

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கபிலர்

கோடிமங்கலம் வாதுளிநற் சேந்தனார்

செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

நக்கீரனார்

மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்

மதுரை இளங்கௌசிகனார்

மதுரைக் கணக்காயனார்

மதுரைக் கௌணியன் தத்தனார்

மாமூலனார்

புலவர்களில் அரசர்கள்

அண்டர்மகன் குறுவழுதியர்

அதியன் விண்ணத்தனார்

ஒல்லையூர்த்தந்த பூதப்பாண்டியன்

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

சேரமான் இளங்குட்டுவன்

பாண்டியன் அறிவுடைநம்பி

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

பாலைபாடிய பெருங்கடுங்கோ

மருதம்பாடிய இளங்கடுங்கோ

முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்

வீரைவெளியன் தித்தனார்

 

புலவர்களில் இடையர்கள்

இடைக் காடனார்

இடையன் சேந்தன் கொற்றனார்

இடையன் நெடுங்கீரனார்

இருங்கோள் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்

 

புலவர்களில் எயினர்

எயினந்தைமகன் இளங்கீரனார்

விற்றூற்று மூதெயினனார்

 

புலவர்களில் கூத்தர்

உறையூர் முதுகூத்தனார்

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன்கூத்தனார்

மதுரைக் கூத்தனார்

மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன்மள்ளனார்

மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன்றேவனார்

 

புலவர்களில் தட்டார்

தங்காற் பொற்கொல்லனார்

மதுரைப் பொன்செய்கொல்லன் வெண்ணாகனார்

 

புலவர்களில் மந்திரத்தலைவர்

ஏனாதி நெடுங்கண்ணனார்

 

புலவர்களில் வண்ணக்கர்

வடமவண்ணக்கன் டேரிசாத்தனார்

 

புலவர்களில் வணிகர்

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

மதுரை அறுவைவாணிகன் இளவேட்டனார்

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்

 

புலவர்களில் வேளாளர்

ஆர்க்காடுகிழார்மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்

ஆவூர்கிழார் மகனார் கண்ணத்தனார்

ஆவூர் மூலங்கிழார்

மேற்படியார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்

உமட்டூர்கிழார்மகனார் கண்ணனார்

கோடியூர் கிழார்மகனார் நெய்தற்றத்தனார்

செல்லூர் கிழார்மகனார் பெரும்பூதங் கொற்றனார்

நல்லாவூர்கிழார்

நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர்கிழார்

நொச்சிநியமங்கிழார்

பெருங்குன்றூர் கிழார்

பொதும்பில்கிழார் வெண்கண்ணனார்

மதுரைக் காஞ்சிப்புலவர்

மதுரை மருதங்கிழார்மகனார் பெருங்கண்ணனார்

மாற்றூர்கிழார்மகனார் கொற்றங் கொற்றனார்

வடமோதங்கிழார்

புலவர்களில் பெண்பாற் புலவர்

அஞ்சில் ஆந்தைமகள் நாகையார்

அள்ளூர் நன்முல்லையார்

ஒக்கூர்மாசாத்தியார்

ஔவையார்

கழார்க்கீரனெயிற்றியார்

குமிழிஞாழார் நப்பசலையார்

நக்கண்ணையார்

போந்தைப்பசலையார்

மதுரைநல்வெள்ளியார்

முள்ளியூர்ப்பூதியார்

வெள்ளிவீதியார்

வெறிபாடிய காமக்கணியார்.

 

மேலே கண்ட புலவர்களின் பெயரே பெரிய வரலாறைச் சொல்லும். தமிழர்கள் இன்றைய திராவிடக் கட்சிகள் கூறும் பொய்களை நம்பாமல் உண்மையான சங்க இலக்கியத்தைத் தாமே படித்து ஆராய்வது தான் உண்மையைத் தெரிந்து கொள்ள சரியான வழியாகும்.

மேலே கண்ட பட்டியல் முழுதுமான பட்டியல் அல்ல; ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரு சின்னப் பட்டியலே.

அன்புத் தமிழர்கள் உண்மை அறியும் ஆர்வத்துடன் பரந்த சங்க கால நெறியுடன் இந்தக் கால நவீன தொழில்நுட்பத்தையும் ஏற்று வாழ்ந்தால் புதிய பொன்னான வரலாறைப் படைக்க முடியும்!

***