நாட்டுப்புற கதை — நிஜ வாழ்வில் 'நீலாம்பரி' ! (7731)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7731

Date uploaded in London – 23 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

வாட்ஸ் அப் whats up அரட்டையால் குடும்பத்தில் பிளவுகள் உண்டாவது தெரிந்ததே. தமிழ் டெலிவிஷன்கள் குடும்பங்களை எப்படி எடுத்துக் கெடுப்பது என்று ஸீரியல்கள் மூலம் தினசரி சொல்லித் தருவதும் அறிந்ததே. ‘அடுத்துக் கெடுத்தல்’ என்பது மன்னர்கள்  மட்டும் கையாள வேண்டிய பஞ்ச தந்திரங்களில் ஒன்று என்று விஷ்ணு சர்மா நமக்குச் சொல்லிக் கொடுத்ததும் உண்மையே. தமிழ்த் திரைப்படத்தில் பழி வாங்கத்  துடிக்கும் நீலாம்பரிகளையும் பார்த்துவிட்டோம் . இதோ ஒரு பழைய நாட்டுப்புற நீலாம்பரன் கதை tamilandvedas.com, swamiindology.blogspot.com !

இரண்டு வழிப்போக்கர்கள் நடந்து, நடந்து கால் வலித்ததால் ஒரு வீட்டுத் திண்ணையில் மூட்டை முடிச்சுகளை இறக்கிவிட்டு ஒய்வு எடுத்தனர். அந்தக் காலத்தில் நடைப் பயணமாக யாத்திரை செல்லுவோருக்கு உதவுவதற்காக வீட்டின் முன்புறத்தில் திண்ணைகள் இருக்கும். இப் போது கலியுக அரக்கர்கள் பெருத்துவிட்டதால் வீட்டுக்கு பத்து அடி முன்னால் , ஒரு இரும்பு கேட் போட்டு, அதை பூட்டி விட்டு, வீட்டு வாசலில் ஒரு நாயையும் கட்டி வைப்பது, பெரிய அந்தஸ்து கொடுக்கும் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

இரண்டு வழிப்போக்கர்களும் திண்ணையில் உடகார்ந்து ஒய்வு எடுத்த போது கணவன்- மனைவியின் காதல் பேச்சுக்கள் காதில் விழுந்தன. tamilandvedas.com, swamiindology.blogspot.com

“அன்பே ஆருயிரே! தேனே, மானே கல்கண்டே !

நாகப்பட்டினம் நெய் மிட்டாய்க்கட்டை  கோதுமை ஹல்வாவே ! திருநெல்வேலி லாலா கடை ஹல்வாவே! திருப்பதி லட்டே!!”

என்ற சப்தங்கள் வெளியே மெல்லிசாகக் கேட்டன.

முதல் வழிப்போக்கன் சொன்னான் —

அடடா! என்னே அன்பு ! என்னே அந்யோன்யம்!

நான் நினைக்கிறேன் இவர்கள் வாழ்நாள் முழுதும் இப்படியே இணை பிரியா ஜோடிகளாக வாழ்வர் என்று”.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இரண்டாமவன் சொன்னான்-

“அட மூடா ! மடையா ! மனித மனம் பற்றி உனக்குத் தெரியவில்லையே. மனம் ஒரு குரங்கு என்பது தெரியாதா? கொஞ்சம் பொறு உனக்குப் புரியவைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அந்த வீட்டின் கதவைத் தட்டி மெதுவாக உள்ளே  போனான்.

“இப்போதுதான் காசியிலிருந்து வருகிறேன். உங்கள் வீட்டுக்குப் போய் கங்கை ஜலம் தரும்படி சிவா பிரானே என் கனவில் சொன்னார் என்று கூ றிவிட்டு , கூஜாவில் உள்ள நீரை கணவன் கையிலும் மனைவி கையிலும் ஊற்றவே அவர்கள் அதை அமிர்தம்போல எண்ணி பய பக்தியுடன் சாப்பிட்டனர். பின்னர் என்ன கேட்பானேன். அவருக்கும் அவருடைய நண்பருக்கும் ராஜ உபசாரம்; பஞ்சபக்ஷ பரமான்னத்துடன்tamilandvedas.com, swamiindology.blogspot.comவிருந்து .

மதியம் ஆயிற்று ; கணவர் வழக்கமான வேலைகளுக்காக வெளியே சென்றார். இந்த வழிப்போக்கன் “அம்மையாரே உங்களை பார்த்தவுடன் பார்வதி தேவியைப் பார்த்தது போல இருக்கிறது ; ஆகையால் ஒரு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன்” என்றவுடன் அவளுக்கு ஆர்வம் அதிகரித்தது. அவள் அது என்ன? என்று வினவினாள்.

“உங்களை பார்த்தாலேயே தெய்வீகக் களை சொட்டுகிறது ஆனால் உமக்கு வாய்த்த கணவர் சரியில்லை . அவர் பூர்வ ஜென்மத்தில் உப்பு வியாபாரி. நீயோ மஹாராணியாக இருந்தாய்” என்றார் . நீங்கள் சொல்லுவதை நான் நம்புவதற்கு என்ன சாட்சி? என்றாள் அந்த புத்திசாலி.

“ஒன்றும் வேண்டாம்; இரவில் அவர் குறட்டை விட்டுத் தூங்கும்போது அவர் காலை நக்கிப் பார் ; அது கூட உப்புக்கரிக்கும்” என்றார் . அவளும் ஒரு நமஸ்காரம் போட்டு அப்படியே செய்கிறேன் சுவாமி ! என்று செப்பினாள் .

மாலை நேரம் ஆயிற்று ; மனைவி சமையல் அறைக்குள் கதவைச் சாத்திக்கொண்டு அறுசுவை உண்டி சமைத்துக் கொண்டு இருந்தாள் . அந்த நேரத்தில் சாமியார் tamilandvedas.com, swamiindology.blogspot.comபோல நடித்துக் கொண்டிருக்கும் வழிப்போக்கன் கணவனை அழைத்து அருள் உபதேசம் செய்தான். “அடடா, உன்னைப் போல ஒரு நல்ல ஆத்மாவை நான் காசியின் கங்கைக் கரையிலும் கண்டதில்லை. ஆகையால் உன்னிடம் ஒரு உண்மையை  விளம்பியாக வேண்டும் ; நீ உலக மஹா உத்தமன் . உனக்குப் போய் இப்படி ஒரு நாய் கிடைத்து விட்டதே” என்றார்.

“சுவாமி ! புரியவில்லையே கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்” என்று கேட்டான் கணவன் .

வழிப்போக்கன் புகன்றான்- “உன் மனைவி பூர்வ ஜென்மத்தில் ஒரு நாய். இப்போதும் கூட அவளுக்கு அந்த நாய்க்குணம் போகவில்லை ; நான் சொல்லுவதை நீ நம்பவேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. .உனக்கு ஏதேனும் ப்ரூப் (Proof) வேண்டுமானால் இன்றிரவு குறட்டைவிட்டுத் தூங்குவது போல பாசாங்கு செய். அவள் தினசரி உன் கால்களை நக்குவது தெரியும்” என்றான்.

இரவும் வந்தது. கணவனும் மனைவியும் வழிப்போக்கன் சொன்னபடி செய்தனர். tamilandvedas.com, swamiindology.blogspot.com

கணவன் குறட்டை விட்டுத் தூங்குவது போல பாசாங்கு செய்ய, அவள் அவன் கால் உப்புக் கரிக்கிறதா என்று நக்கிப் பார்க்க நள்ளிரவில் உலக மஹா யுத்தம் வெடித்தது.

“அடி நாயே! வீட்டை விட்டு வெளியே போடி ! “என்றான் கணவன்.

“அடச் சீ ! மானங்கெட்ட உப்பு வியாபாரியே ! என்னை ஏமாற்றிக் கல்யாணம் செய்து கொண்டாயா? நான் இப்போதே , என் அம்மா வீட்டுக்குப் போகிறேன்” என்று நகை நட்டுக்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் . இரண்டு வழிப்போக்கர்களும் ஊருக்கு வெளியே புதரில் மறைந்து கொண்டு வேடிக்கை பார்த்தனர்.. tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதனால்தான் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் “சம்சய ஆத்மா விநஸ்யதி (சந்தேகப் பேர்வழி அழிகிறான் -கீதை 4-40)” என்கிறார்.

பாரதியாரும் “நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத் தீர்ப்பு “ என்கிறார் .

—SUBHAM–

tags — நம்பினார் கெடுவதில்லை,சம்சய ஆத்மா விநஸ்யதி, நீலாம்பரி