Please click here for the article:
All posts tagged சம்ஸ்கிருத சுபாஷிதம்
பணமும் படிப்பும்
Posted by Tamil and Vedas on January 24, 2014
https://tamilandvedas.com/2014/01/24/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
மூர்க்கனை எப்படிக் கண்டுபிடிப்பது?

சம்ஸ்கிருதச் செல்வம்- 8
மூர்க்கனை எப்படிக் கண்டுபிடிப்பது?
By ச.நாகராஜன்
சுய முன்னேற்றம் என்னும் SELF IMPROVEMENT நூல்களில் ‘HOW TO WIN FRIENDS AND INFLUENCE PEOPLE’ என்ற டேல் கார்னீகி நூலில் ஆரம்பித்து இன்று ஆயிரக்கணக்கான “ஹௌ டு” நூல்கள் வந்து விட்டன. ஆனால் நம் முன்னோர்கள் சின்னச் சின்ன பாடல்களில் சுய முன்னேற்ற வழிகளைச் சுலபமாக நினைவில் இருக்கும்படி பாடலாகப் பாடி விட்டார்கள்.
யாருடன் சேரக் கூடாது. மூர்க்கரோடு அதாவது முட்டாள்களுடன். இவர்களை நம் வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி விட்டாலே ஐம்பது சதவிகிதம் வெற்றி நிச்சயம்!
அவர்களை எப்படி இனம் காண்பது?
கவிஞர் வழி காட்டுகிறார்:-
கர்வம் (PRIDE), துர்வசனம் (NASTY WORDS), விரோதம் (ENEMITY), தேவையற்ற அதிகப் பேச்சு (TOO MUCH TALK), கடமையைச் செய்ய மறுப்பது (REFUSAL TO DO THE DUTY), செய்யும் செயல்களில் அலட்சியம் (CARELESSNESS IN ACTIONS) இந்த ஆறு குணங்களும் எவரிடம் இருக்கின்றனவோ அவர்கள் மூர்க்கர்கள். அவர்களுடன் சேர வேண்டாம் என்பது கவிஞரின் அறிவுரை. பாடலைப் பார்ப்போம்.
மூர்க்கம் சின்ஹானி ஷடிதி கர்வோ துர்வசனம் முகே I
விரோதி தீர்க்கவாதி க்ருத்யாக்ருத்யம் ந மன்யதே II
மூர்க்கருக்கான சின்னங்கள் ஆறு. கர்வம், கெட்ட வார்த்தைகள், பகைமை, தீர்க்கவாதம் என்னும் அதிகப்பேச்சு, கடமையைச் செய்யாமை, செய்யும் செயல்களில் அக்கறையின்மை (இவையே மூர்க்கருக்கான அடையாளங்கள்!)
மூர்க்கனிடம் தர்ம பிரஸங்கம் ஏன்?
—————————————————————
இன்னொரு கவிஞர் இவர்களுடன் பேசி அறிவுரை சொல்வது வீண் அல்லவா என்று எச்சரிக்கிறார் நளினமாக!
முக்தாபலை: கிம் ம்ருகபக்ஷிணாம் ச
மிஷ்டான்னபானம் கிமு கர்தபானாம் I
அந்தஸ்ய தீபோ பதிரஸ்ய கானம்
மூர்கஸ்ய கிம் தர்மகதா ப்ரஸங்கை: II
ம்ருகபக்ஷிணாம் – மிருகங்களுக்கும் பறவைகளுக்கும்
முக்தாபலை: கிம் – முத்துக்களினால் என்ன பயன்!
மிஷ்டான்னபானம் – (அற்புதமான) அறுசுவை உணவும், பானங்களும்
கிமு கர்தபானாம் – கழுதைக்கு என்ன பயன்?
(கர்த்தபம் – கழுதை)
அந்தஸ்ய தீபோ – அந்தகனுக்கு தீபத்தால் என்ன பயன்?
பதிரஸ்ய கானம் –அருமையான கானம் செவிடனுக்கு
என்ன பயன்? மூர்கஸ்ய கிம் தர்மகதா ப்ரஸங்கை –முட்டாளுக்கு தர்ம கதையை பிரசங்கம் செய்து என்ன பிரயோஜனம்?
தர்மோபதேசத்தால் அவன் திருந்தவும் போவதில்லை; நமது நேரமும் வீண் தான் என்று சுட்டிக் காட்டுகிறார் கவிஞர்.
‘ஆத்திசூடி’யில் அவ்வையாரும் ‘மூர்க்கரோடு இணங்கேல்’ என்று சுருக்கமாகக் கூறி விட்டார்.
அதிவீர்ராம பாண்டியரோ ‘வெற்றி வேற்கை’யில்,
நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசி போல் வேர்க் கொள்ளாதே
என்று அழகுறச் சொல்லி விட்டார்.
நீர்க்குள் பாசி போல வேர் கொள்ளாத நட்பு எதற்காக?
உலகநாத பண்டிதரோ தனது ‘உலக நீதி’யில்
“நஞ்சுடனே ஒரு நாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்” என்றும்
“சேராத இடம்தனிலே சேர வேண்டாம்” என்றும்
“துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்” என்றும்
எச்சரித்து அறிவுரை பகர்கிறார்.
மூர்க்கரை இனம் கண்டு அவர்களை ஒதுக்கி முன்னேறுவதே வெற்றி பெறும் வழியாகும்!
***********
Posted by Tamil and Vedas on February 15, 2013
https://tamilandvedas.com/2013/02/15/%e0%ae%ae%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/

You must be logged in to post a comment.