
மேலும் ஒரு சம்ஸ்க்ருத ஜோக்!
Compiled by London swaminathan
Date: 22 November 2015
POST No. 2351
Time uploaded in London :– காலை 9 -13 மணி
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.
நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை
“ஒரு நாள் என் மாமனார் வீட்டுக்குச் சென்றேன். அங்குப் பத்துப்பதினைந்து நாள் வயிறு குறையாமல் திருப்தியாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு சம்ஸ்க்ருத பாஷையில் தேர்ச்சி அதிகமாதலால் ஒருநாள் யோஜித்து மாமியார் வீட்டுச் சுவற்றில்,
“ஸ்வஸ்ருகிருகநிவாஸ
ஸ்வர்கதுல்யோநராணாம்”
அதாவது மாமியார் வீட்டில் வசிப்பதானது மனுஷர்களுக்குச் சொர்க்கத்துக்குச் சமானம் என்று எழுதி வைத்தேன். மறுநாள் மத்தியான போஜனத்துக்குப் பிறகு நான் எழுதிய சுவற்றைப் பார்க்க, நான் எழுதியதற்குக்கீழே
“எதிபதி குணக்ஞஹா
பஞ்சமேஷஸ்தினாதி”
அதாவது மாப்பிள்ளை நல்ல குணமுள்ளவனாக இருந்தால் ஐந்து, ஆறு தினத்துக்கு மேலிருக்க முடியாது என்று யாரோ எழுதிவைத்திருப்பதைப் பார்த்தவுடன் எனக்குப் பகீரென்று அடிவயிற்றில் நெருப்பு வைத்தது போலிருந்தது.
உடனே அதன் கீழே நான்
“ததிகிருத மதுவர்ஜியம்
மாஸமேகம்வஸாமி”
அதாவது தயிர், நெய், பால் இவைகளில்லாமல் ஒரு மாஸம் வசிக்கலாமல்லவா? என்று எழுதிவிட்டேன். அதற்கு மறுநாள்தான் எனக்குச் சனியன் பிடித்தது. நான் யெழுதிவைத்ததற்குக் கீழே மறுநாள் பார்த்தேன்.
“ததுபரி தினமேகம்
பாதரக்ஷப்ரயோககா”
அதாவது இதனைக் கண்டதற்கு மேல் ஒருநாளிருப்பதாயிருந்தாலும் ஆற்காடு ஜோட்டடிதான் கிடைக்கும் என்று எழுதியிருந்தது. அதைத் திருப்பித்திருப்பி வாசித்துக்கொண்டிருந்தேன். அங்கு மறைவில் ஒளிந்துகொண்டிருந்த என் மைத்துனன் இடதுகையாலே இடது கால் ஜோட்டடி மகோற்சவம் நடத்தி, “இளிச்சவாயா, மாமியார் வீட்டுச் சொத்து என்ன பிள்ளையில்லா வீட்டுச் சொத்து என்று நினைத்தாயா?” என்று சொல்லி வழியனுப்பினான் அதனால்தான் நான் இளிச்சவாயன் ஆனேன்”.
“ஸ்வஸ்ருகிருகநிவாஸ ஸ்வர்கதுல்யோநராணாம்
எதிபதி குணக்ஞஹா பஞ்சமேஷஸ்தினாதி
ததிகிருத மதுவர்ஜியம் மாஸமேகம்வஸாமி
ததுபரி தினமேகம் பாதரக்ஷப்ரயோககா”
–சுபம்–
You must be logged in to post a comment.