எவன் உண்மையான சாது? (Post No.9862)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9862

Date uploaded in London – 18 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டாக்டர் டி.எஸ்.கௌரிபதி திரிபாதி அவர்கள் தேர்வு செய்து வழங்கிய சில சுபாஷிதங்கள் தரப்பட்ட முந்தைய கட்டுரை எண் 9824 (வெளியான தேதி: 7-7-2021)

 எவன் உண்மையான சாது? 

ச.நாகராஜன் 

சம்ஸ்கிருத அறிஞரான டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி (Dr.T.S. Gouripathi Sastri)   அவர்களிடம் ஆந்திரா பல்கலைக்கழகம் நல்ல சில சுபாஷிதங்களைத் தேர்ந்தெடுக்குமாறு (1978இல்) பணிக்க, அவர் 36 சுபாஷிதங்களைத் தொகுத்துத் தந்தார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் அவரே செய்துள்ளார். அவற்றில் முதல் பதினைந்து சுபாஷிதங்களை சென்ற கட்டுரைகளில் கண்டோம். அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இதோ:-

வ்ரதே விவாதம் விமதிம் விவேகே ஸத்யேதிஷங்காம் வினயே விகாரம் |

குணேவமானம் குஷலே நிஷேதம் தர்மே விரோதம் ந கரோதி சாது: ||

 ஒரு சாது விரதங்களைப் பற்றி எதிர்த்து விவாதம் செய்ய மாட்டான். விவேகமான ஒன்றைப் பற்றி எதிர்க்க மாட்டான். ஸத்யத்தைப் பற்றி முடிவே இல்லாத சந்தேகத்தைக் கொள்ள மாட்டான். வினயத்தை விகாரமாக எடுத்துக் கொள்ள மாட்டான். குணத்தை அவமதிக்க மாட்டான். புனிதமான ஒன்றைத் தடுக்க மாட்டான். எது தர்மமோ அதை எதிர்க்க மாட்டான்,

The virtuous man does not quarrel or adversely argue in the case of a religious vow, does not show dissent in the case of discrimination, never entertains an endless doubt in the case of a reality, never takes benevolence as an unnatural quality, never insults a merit, never prohibits an auspicious thing and never opposes what is right or proper.

*

கல: சம்ஷபமாத்ராணி பரசித்தத்ராணி பஷ்யதி |
ஆத்மனோ பில்வமாத்ராணி பஷ்யன்னபி ந பஷ்யதி ||

மற்றவர்களிடம் உள்ள கடுகு போன்ற சிறு குறைகளைக் கூட ஒரு கெட்ட மனிதன் கூறி விடுவான். ஆனால் பில்வப் பழம் போல பெரிதாக இருக்கும் தன் குறைகளைக் காண மாட்டான்.

The Wicked man locates the defects in the case of others even though they are as small as mustard seed and fails to notice his own defects although they are as big as Bilva fruits.

*

ந நரஸ்ய நரோ தாஸோ தாஸ ச்ரார்தஸ்ய பூபதே |

கௌரவம் லாகவம் சாபி தனாதனநிபந்தனம் ||

ஓ, மன்னா! ஒரு மனிதன் ஒரு போதும் இன்னொரு மனிதனுக்கு அடிமை இல்லை. கௌரவமோ அவமதிப்போ ஒருவனிடம் பணம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்தே காண்பிக்கப்படுகிறது.

O King! Never is a human being slave to another human being. Respect or insult (shown to a person) are only due to (his having) money or absence of money.

*

வயோவ்ருத்தாஸ்தபோவ்ருத்தா ஞானவ்ருத்தாஸ்ச யே பரே |

தே சர்வே தனவ்ருத்தஸ்ய த்வாரி திஷ்டந்தி கிங்கரா: ||

வயதினால் பெரியவர்களும், தவத்தினால் பெரியவர்களும், அறிவினால் பெரியவர்களும் இதர நற்குணங்களால் பெரியவர்களும் செல்வத்தினால் பெரியவன் வீட்டு வாசலில் வேலைக்காரர்கள் போல நிற்கின்றனர்.

All those that are great by the age, great by their penance and great by their wisdom and great by other merits keep standing as peons at the doors of a man who is great by his wealth.

*

யத்ததாஸி விசிஷ்டோப்யோ யச்யாஷ்நாஸி தினே தினே |

தத்தே வித்தமஹம் மன்யே சேஷமன்யஸ்ய  ரக்ஷஸி ||

தகுதி உடையோருக்கு தானம் செய்யும் பணமும், தினமும் நீ உண்பதும் அதாவது  ஒவ்வொரு நாளும் நீ அனுபவிப்பதும் உனக்கே உரித்தாகுகிறது. உனது மற்ற அனைத்து சம்பாத்தியமும் அதைக் காப்பாற்றுவதும் ‘மற்றவர்களுக்காக மட்டுமே’ தான்!

Of your wealth whatever you donate to the deserving and what you eat, i.e., enjoy day after day really belongs to you. The rest you are earning and protecting ‘only’ for others.

***

INDEX

உண்மையான சாது யார்?

தன் குறை காணாமல் பிறர் குறை காண்பவனே கெட்ட மனிதன்

பணம் இருப்பதைப் பொறுத்தே கௌரவமும் அவமதிப்பும்

செல்வந்தன் வீட்டு வாசலில் வேலைக்காரர் போல அனைவரும் நிற்பர்

மற்ற்வர்களுக்கான சம்பாத்தியமும் உனக்கான சம்பாத்தியமும் எவை எவை?

Tags- உண்மையான, சாது,

சாது அளித்த ருத்ராக்ஷ மாலை! (Post No.4719)

DATE – 9 FEBRUARY 2018
Time uploaded in London- 7-49 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4719

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

இது தான் இந்தியா!

 

 

சாது அளித்த ருத்ராக்ஷ மாலை!

ச.நாகராஜன்

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

1

பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்து பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்பதும் ஓய்வு பெறும் வயதில் ஓய்வு பெற்று இங்கிலாந்திற்குத் திரும்புவதும் வழக்கம்.

 

அந்தக் காலத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இது!

சம்பவத்தைப் பார்ப்போம்.

 

2

(பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட காலத்தில்) இந்திய அரசின் உயர் அதிகாரிகளில் அவரும் ஒருவர்.

ரைட்டர்ஸ் பில்டிங்(Writers’ Building) சென்று தனது பணி ஒய்வு சம்பந்தமான பேப்பர்களைத் தருவதற்காக சாரட்டில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

 

பௌ பஜார் (கல்கத்தாவில் உள்ளது) ஒரே டிராபிக். வண்டி நின்றது.

என்ன செய்வது? காத்திருக்கத் தான் வேண்டும், வண்டியை டிரைவர் நகர்த்தும் வரை.

 

சிகார் ஒன்றைப் பற்ற வைத்தார் அவர்.

 

திடீரென்று கோச்சின் வலது பக்கக் கதவு திறந்தது. ஜடாமுடியுடன் கூடிய ஒருவர் எட்டிப் பார்த்தார்.

சாதாரண ஆளாக இருந்திருந்தால் பயந்து திகைத்துப் போயிருப்பார்.

 

ஆனால் அவரோ போலீஸ் ஆபீஸர் ஆயிற்றே! இதற்கெல்லாம் பயப்படுவாரா என்ன? 25 ஆண்டுகளில் இது போல எத்தனை

பேரைப் பார்த்திருப்பார்!

 

“ஹுசூர், இவ்வளவு காலம் அரிய சேவை செய்த பின்னர் பணியிலிருந்து ஓய்வு பெறுவது என்பது கஷ்டமான விஷயமாகத் தான் இருக்கும்! ஆனால் விதிமுறைகள் எல்லோருக்கும் ஒன்று தானே! வயது வரம்பும் எல்லோருக்கும் ஒன்று தானே”

சர்வ சகஜமாகப் பேச ஆரம்பித்த அந்த ஜடாமுடி சாது இப்படிக் கூறினார் ஆபீஸரிடம்.

 

அவர் அயர்ந்து போனார்.

 

அந்த சாதுவை நோக்கினார்: “ ஓ, சாது ஜி, நான் ரிடயர் ஆகப் போகிறேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

 

அவர் பதில் கூறினார்: “இப்படிப்பட்ட  விஷயங்கள் ஜன சந்தடி உள்ள இந்த இடத்தில் விவரிக்கத் தக்கதல்ல! உங்களை இந்தக் கூட்டத்தில் கண்டுபிடித்து விட்டேன்.அது போதும். சாதுக்களே பெறும் அரிய சித்தியான ஞானத்தின் மூலம் நீங்கள் ஒரு உயர் போலீஸ் அதிகாரி என்பதும் எனக்குத் தெரியும். என்ன பிரமிக்கிறீர்களா? பிரமிக்க வேண்டாம்! நீங்கள் உங்கள் கீழே பணி புரிந்த பலருக்கும் நல்லதைச் செய்திருக்கிறீர்கள். அத்துடன் மட்டுமின்றி கத்தியுடன் கூடிய காளியும் சிவனும் குடி கொண்ட பல தலங்களுக்கு நல்லதைச் செய்துள்ளீர்கள். இந்த ஒரு காரியத்திற்காகவே இந்த ராஜ்யத்தில் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும். அந்தக் கத்திகள் வெறும் இரும்பு அல்ல; உண்மையான உயர் ரக  எஃகால் செய்யப்பட்டவை. இன்னும் நீங்கள் செய்துள்ள பல காரியங்களும் புண்ய கர்மங்கள்! ஆகவே வெகு விரைவில் நீங்கள் அளப்பரிய செல்வத்தை அடையப் போகிறீர்கள்! அதை புத்திசாலித்தனமாகச் செலவழியுங்கள். இதோ இந்த ருத்ராக்ஷ மாலையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ரிகி ராமனை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இதோ வண்டிகள் நகர ஆரம்பித்து விட்டன. சாஹப், நான் போகிறேன். நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது சில சமயம் என்னையும் நினைத்துக் கொள்ளுங்கள்”

 

சாது போய் விட்டார். வண்டிகள் நகரத் தொடங்கின.

தன் வலது கரத்தில் இருந்த ஏழு முகமுள்ள ருத்ராக்ஷங்கள் கொண்ட மாலையை போலீஸ் அதிகாரி வியப்புடன் பார்த்தார்.அந்த வகை ருத்ராக்ஷம் அடர்ந்த ஹிமாலய  மலையின் உட்பகுதிகளில் மட்டுமே கிடைக்கக் கூடிய அரிய வகை ருத்ராக்ஷங்கள்!

 

“என்ன ஆச்சரியம்” என்று கூவினார் போலீஸ் அதிகாரி.

விஷயத்தை அத்துடன் அவர் மறந்து விட்டார்.

 

பணி ஓய்வு பெற்ற அவர் இங்கிலாந்தின் தென் பக்கம் உள்ள ஒரு ஊரில் குடியேறி விட்டார்.

 

பிரச்சினை ஏதும் இல்லாத வசதியான வாழ்க்கை.

ஒரு நாள் வீட்டுத் தோட்டத்தில் நிர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். சிகார் பிடிக்கும் வேளையில் அவருக்கு ஒரு தந்தி வந்தது.

கையெழுத்திட்டு அதை வாங்கிய அவர் தந்தியைப் பிரித்தார்.

அவரது ஒரே சகோதரன் இறந்து விட்டார். அவரோ கல்யாணமாகாத பிரம்மச்சாரி.

 

அவரது திரண்ட செல்வம் எல்லாம் சகோதரரான அவருக்கு வந்து சேர்ந்தது.

 

அமைதியாக அவர் உட்கார்ந்து விட்டார்.

அப்போது ஒரே ஒரு க்ஷண நேரத்தில் அவர் முன் ரிக்கி ராமன் தோன்றினார். பின்பு  மறைந்து விட்டார்.

உட்கார்ந்திருந்த அதிகாரி பரபரப்பாக எழுந்து வீட்டினுள் ஓடினார்.

அங்கு ஒரு பெட்டியில் பத்திரமாக வைத்திருந்த ஏழு முக ருத்ராக்ஷ மாலையைப் பார்த்தார்.

 

மிகுந்த சோகம் ததும்பிய குரலில்,” ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகி விட்டதே! சாது ஜீ! அதற்கு இப்படி ஒரு விலையா?” என்று கூவினார்!

 

***

1935ஆம் ஆண்டு வெளியான TRUTH ஆங்கில வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. மீண்டும் 3-11-2000 இதழில் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி : ட்ரூத்

ஆங்கிலத்திலிருந்து தமிழ் வடிவம்: ச.நாகராஜன்