
Veena is seen behind Aum and under Adi shankara
Written by London Swaminathan
Date: 26 August 2017
Time uploaded in London- 7-49 am
Post No. 4164
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.
கர்நாடக மாநிலம் ஏராளமான அதிசயங்களைக் கொண்ட மாநிலம். அது பற்றி பெரிய புத்தகமே எழுதலாம். சிருங்கேரிக்குச் சென்று சாரதாம்பாள் கோவிலைலயும் சங்கராச்சார்ய சுவாமிகளையும் காண நீண்ட காலமாக ஆசை. இரண்டும் ஆகஸ்ட் (2017) மாதம் நடந்தேறியது. அத்தோடு ஒரு போனஸும் கிடைத்தது. சிருங்கேரி சங்கராசார்ய மடத்தில் உலகிலேயே பெரிய வீணை உள்ளது. அது இருக்கும் கண்ணாடிப் பெட்டியை உரசிக் கொண்டு நின்ற போதும் மேடையில் சங்கராசார்ய சுவாமிகள் அருளாசி வழங்கும் நேரத்தில் அதை நெருங்கிப் புகைப்படம் எடுக்க மனது உடன்படவில்லை. தொலைவில் இருந்து ஒரு படம் எடுத்தேன்.
இந்த வீணை பற்றிய தகவல்கள்:
இது சார்வபௌம வீணை என்று அழைக்கப்ப்டும். தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு 2003ல் மடத்திற்கு வழங்கப்பட்டது.
சாதாரண வீணை 132 சென்டிமீட்டர் நீளமே இருக்கும். ஆனால் அங்குள்ள சார்வ பௌம வீணை 305 செ.மீ. நீளம் உடையது அதாவது சுமார் பத்து அடி நீளம் கொண்டது. அதன் அகலம் 76 சென்டிமீட்டர் உயரம் 74 சென்டிமீட்டர்.
எடை 70 கிலோ! சாதாரண வீணையோ 10 கிலோதான். அருகில் நின்று பார்த்தால் நாம் தூக்க முடியுமா என்று திகைத்து நிற்போம். இதை 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாரதா பீடத்தில் கொண்டு வைத்தனர்.

இந்த வீணை தாமரை வடிவ ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுள்ளது, அதாவது நிற்கும்படி செய்யப்பட்டுள்ளது. ஒன்றின் மேல் சுவாமி விவேகாநந்தர் உருவமும் மற்றொன்றின் மீது ஒரு பொன்மொழியும் பொறிக்கப்பட்டுள்ளது.
“நாம் ஒன்று சேருவது துவக்கம்
நான் ஒன்றாக நீடிப்பது முன்னேற்றம்
நாம் ஒன்றாக வேலை செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்”
என்ற பொன்மொழி செதுக்கப்பட்டுள்ளது.
இந்த மஹா சார்வ பௌம வீணை ஒரே மரக்கட்டையைக் குடைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட வீணை வேறு கிடையாது!
இந்த வீணையின் குடம் முதலிய பகுதிகளில் சங்கீத மும்மூர்த்திகளின் படங்கள், பிள்ளையார், சரஸ்வதி, லெட்சுமி படங்கள், எந்தரோ மஹானுபாவுலு பாடலின் முதல் வ ரி ஆகியன செத்க்கபட்டு இருக்கிறது.
கனகதாசர், புரந் தரதாசர், ராகவேந்திரர் ஆகியோர் படங்களுடன் இதை உருவாக்கிய சிவா மியூசிகல்ஸின் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.
சப்த ஸ்வரங்கள், அவற்றைக் குறிக்கும் ஏழு கடவுள்கள், 7 ஒலிகளைக் குறிக்கப் பயன்படுத்தும் பிராணிகள் ஆகியனவும் வரையப்பட்டுள்ளன. வெறும் இசைக் கருவியாக நில்லாமல் ஒரு சங்கீத என்சைக்ளோபீடியாவாக இது திகழ்கிறது.
வீணையின் கழுத்துப் பகுதியில் இதை உருவாக்கிய கர்நாடக கலாஸ்ரீ சின்னப்ப நடராஜர் பெயர், காந்திஜி, அசோகச் சக்கர உருவம் ஆகியனவும் உள்ளன. கண்ட பேரண்டம் எனப்படும் இருதலைப் பறவையும் இதை அலங்கரிக்கிறது.
முனைப் பகுதியில் யாளியின் பட உருவமும் காணப்படுகிறது.கர்நாடக மாநில அசெம்பிளி, வீரர் கம்பகவுட, பொறியியல் வல்லுநர் விஸ்வேரையா ஆகியோர் திரு உருவங்களும் வீணையில் இடம் பெறுகின்றன.

SARVABHOWMA VEENA
Length – 305cm
Width (Kodam) – 76cm
Height (Kodam) – 74cm
Dimension (Kodam) – 225cm
Length of Dandi – 128cm
Frets – 12mm
Weight – 70Kg
Left Stand (Burude)
Height – 46cm
Dimension – 144cm
CONVENTIONAL VEENA
Length – 132cm
Width (Kodam) – 36cm
Height (Kodam) – 33cm
Dimension (Kodam) -115cm
Length of Dandi – 62cm
Frets – 6mm
Weight – 10Kg
Left Stand (Burude)
Height – 23cm
Dimension – 82cm
Veena Details are taken from Shiva Musicals site.
நல்லதோர் வீணை செய்து அதை நாடு புகழும் மண்டபத்தில் வைத்தது சிறப்பான செயல்; அதைத் தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சிக்குரியது!!
கர்நாடக மாநிலத்தில் இன்னும் பல அதிசயங்கள் இருக்கின்றன. அவைகளையும் எழுத்தில் செதுக்குவேன்!
TAGS: பெரிய வீணை, உலகிலேயே, சார்வபௌம, சிருங்கேரி
–subahm–