எல்லாம் சிவரூபம் (Post 10,450a)

மாயன் மையானான் BY A NARAYANAN

Date Posted 24 December 2021

மண் தோன்றிய மங்கை

கண்டதெல்லாம் கண்ணனாக

வண்ணக் கவிதையாய் தீட்டிய

பண்ணோடிணையும் பாசுரங்கள்

விண்ணோரும் கேட்டு வியந்தனரோ

எண்ணத்திலடங்காதோனை தன்

கண்ணிடும் மையாகத் தீட்டத்

திண்ணமாய் இருக்கிறாளோ இம்

மண்ணுலக ஆரணங்கோ.

நாராயணன்

xxxxxxxxxxxxxxxxxxxxxx

பழனி

POSTED ON 23-12-2021

குன்றுதோரும் , நின்றோன் கோலமயிலேறி

ஞாலமெலாம் சுற்றி வந்தும் கை நழுவிய

பழம் வேழமுகன் கை காண அப்பனையும்

அன்னையையும் அண்ணனையும் துறந்து

ஆண்டி கோலமாயிருந்தும் அண்டியோர்

வேண்டியதை ஈன்றிடும் தருமசிவபாலன்

கிட்டாப்பழத்தால்  எட்டா ஞானப் பழமாய்

நின்ற குன்றே பழம் நீ மருவிய பழனி

நித்தத்தில் சித்தமாய் நின்றோன் தாளடி

நின்றோர் நிலமிசை நீடு வாழ்வர்

நாராயணன்

RITTEN BY DR. A. NARAYANAN

Post No. 10,450 a

Date uploaded in London – –   22 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

விரிசடையோன் செஞ்சடையோன்

பனி நீர் கங்கை திரு முடியோன்

பிறை சூடியோன் பீடுடையோன்

நெருப்பாக நெற்றிக்கண்ணுடையோன்

கரு நாகம் மாலையாயுடையோன்

திரு நீறு பூசுடர் மேனியுடையோன்

புலித்தோல் ஆடையுடையோன்

ஆல கால விடம் கண்டமுடையோன்

உடல் பாதியில் உமையுடையோன்

உடுக்கை ஒரு கையுடையோன்

மறு கை மழு உடையோன்

தூக்கிய திருவடி ஆடிய பாதத்தைத்

வீடு பெற  நாடுவோர் வீடடைவீரே

நாராயணன் 

Tags-  சிவரூபம்