தட்ப வெப்ப மாற்றத்தால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடு! (Post.9883)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9883

Date uploaded in London – 23 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் 25-7-2021 முடிய ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.

தொடுப்பு : https://onlineradiofm.in/stations/all-india-air-chennai-pc

உரை எண் : 2 – 17-7-21 அன்று காலை ஒலிபரப்பப்பட்டது

தட்ப வெப்ப  மாற்றத்தால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடு!

கடந்த 50 ஆண்டுகளில் மனித குலம் பயன்படுத்தி வரும் வாகனங்களில் படிம எரிபொருள் பயன்படுத்தப் படுவதால் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் பசுமை வாயுக்கள் வளி மண்டலத்தை மாசு படுத்தி வந்துள்ளன. கடந்த 130 ஆண்டுகளில் புவியின் வெப்பத்தில் 0.85 டிகிரி செண்டிகிரேடு கூடுதலாகி உள்ளது. ஒவ்வொரு பத்து ஆண்டையும் எடுத்துக் கொண்டு பார்த்தால் இப்போது வெப்பம் கூடிக் கொண்டே போகிறது.இதனால் தட்பவெப்பத்தைச் சீராக வைத்திருக்கும் பனிப்பாறைகள் உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது.

உலகின் மொத்த ஜனத்தொகையில் பாதிக்கு மேல் கடலுக்கு 60 கிலோமீட்டர் அருகிலேயே வசித்து வருவதால் கடல் மட்டம் உயர்வதால் அவர்கள் இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாவர். 

அதிக வெப்பமான நிலையில் நாம் காற்றை சுவாசிக்கும் போது சுவாசக் கோளாறுகளும் இதயக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. 2003ஆம் ஆண்டு கோடை காலத்தில் மட்டும் எப்போதும் இல்லாதபடி 70000 கூடுதல் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படும் சீர்கேடுகளைக் குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளது. சுத்தமான ஆற்றல் அமைப்புகளை உருவாக்குமாறும் பயன்படுத்துமாறும் அது இடைவிடாது வலியுறுத்தி வருகிறது.

குறைந்த தூரமுள்ள இடங்களுக்கு சைக்கிளில் செல்வது, நடந்து செல்வது உள்ளிட்ட பல நல்ல பழக்கங்கள் படிம எரிம பொருளைப் பயன்படுத்தும் வாகனப் பயன்பாட்டை மட்டுப் படுத்தும்,

2015ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயல்படும் அமைப்புகளை ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் செயல்பட, ஒரு செயல்திட்டத்தைத் தந்துள்ளது. அத்துடன் உலகெங்கும் தட்ப வெப்ப மாற்றத்தால் ஏற்படும் சீர்கேடுகளைக் குறித்து மனித குலம் விழிப்புணர்ச்சிப் பெற அனைத்து இடங்களிலும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் தகவல்களைப் பரப்ப வலியுறுத்தியுள்ளது.

ஐந்து வயதுக்கும் கீழாக உள்ள குழந்தைகளும், முதியோரும் தட்ப வெப்ப மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவதால் இந்த அபாயத்தை மிகவும் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.

பல அறிவியல் ஆய்வுகள், ‘தட்ப வெப்ப மாற்றத்தால் பஞ்சங்கள் ஏற்படும்’, ‘சூறாவளிகளும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும்’, ‘தொற்று வியாதிகள் பரவும்’, ‘பல தீவுகளில் வசிப்போரும் கடலோரம் வசிப்போரும் அபாயத்திற்கு உள்ளாவர்’ ஆகியவற்றைத் தெரிவித்துள்ளன. ஆகவே இதைத் தடுக்க ஒவ்வொருவரும் இந்தச் சீர்கேட்டைத் தடுக்கும் ஒரு தலைவனாக தம் தம் பகுதிகளில் செயல்பட வேண்டும்.

Lungs and Heart

–subham–

tags-தட்ப வெப்பம், மாற்றம், ஆரோக்கியம் , சீர்கேடு