

Compiled BY LONDON SWAMINATHAN (News Editor, Gnanamayam)
Post No. 8987-C
Date uploaded in London – –1 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவம்பர் 30-ம் தேதி — திங்கட் கிழமை
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.
உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
XXX
இன்று தேவ தீபாவளிப் பண்டிகை நாளாகும்

நேற்று தமிழ் நாடு உள்பட தென் இந்தியாவில் கார்த்திகைத் தீ த் திரு நாள் கொண்டாடப்பட்டது. இன் று வட இந்தியாவில் கார் த்திக் பூர்ணிமா கொண்டாடப்படுகிறது இந்து சந்திர கிரஹண நாள். ஆனால் பகல் நேரத்தில் நடப்பதால் அது இந்தியாவில் தெரியாது .
கார்த்திகை பவுர்ணமி நாளான இன்று 1700 மைல் தூரம் ஓடும் கங்கை நதியின் துறைகள் தோறும் பல லட்சம் மக்கள் புனித நீராடுவர். ஹரித்துவாரில் மட்டுமே பல லட்சம் மக்கள் நீராடுவது வழக்கம். ஆனால் புனித நீராட்டத்துக்கு ஹரித்துவார் மாஜிஸ்திரேட் தடை விதித்துள்ளார்.
இந்தியாவில் தடை இல்லாத ஊர்களில் மக்கள் இன்று காலை முழுவதும் நீராடத் துவங்கிவிட்டனர் . தேவர்கள் தீபாவளி எனப்படும் இன்று காசி மா நக ரத்துக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும்உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்தும் வந்துள்ளனர். இன்று புனித காசியில் 14 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன . ஆண்டுதோறும் கங்கை நதித் துறையில் விளக்கு ஏற்றுவது வழக்கம். இவ்வாண்டு மணல் திட்டுகளிலும் புற நகர்ப் பகுதிகளிலும் தீபமங்கள ஜோதி ஒளியைக் காணலாம்.
காசியில் நடக்கும் மஹா ஆரத்தியைக் காண்பதற்கு இன்று இறைவனும் தேவர்களும் கங்கை நதிக்கு வருவதாக ஐதீகம். இதன் காரணமாக இது தேவ தீபாவளி என்று அழைக்கப்படுகிறது. சிவ புராணத்திலும் இது பற்றிய குறிப்பு இருப்பதாக ஆன்றோர் பகர்வர். திரிபுராசுரனை இறைவன் கொன்ற நாளும் இதுவே .
XXX
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான NETRU மாலை 6 மணிக்கு நகரின் மையப் பகுதியில் உள்ள மலை உச்சியில் கார்த்திகை மாகாதீபம் ஏற்றப்பட்டது.
கொரோனா காரணமாக முதல் முறையாக பக்தர்கள் இன்றி தி. மலையில் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது. 1,500 கிலோ நெய் மற்றும் 1,000 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
XXXXXXX
பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்..

முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், இருள் நீங்கி, ஒளி பிறக்கும் கார்த்திகை தீப திருநாளில் அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிட, அனைவருக்கும் எனது உளமார்ந்த ‘திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகளை’ தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
XXXXX
லவ் ஜிகாத்‘: 10 ஆண்டு சிறை விதிக்கும் அவசர சட்டத்திற்கு உ.பி., கவர்னர் ஒப்புதல்
லக்னோ: நேர்மையற்ற முறையில் மதம் மாறுவது, சட்டவிரோத மதமாற்றம், ‛லவ் ஜிகாத்’ ஆகியவற்றைத் தடுக்க கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு உத்தரப்பிரதேச கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
உ.பி.,யில் திருமணத்துக்காக நேர்மையற்ற முறையில் மதம் மாறுவதையும், ஹிந்துப் பெண்களைக் காக்கவும், ‛லவ் ஜிகாத்’துக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார்.
இதன்படி, கட்டாயமாக மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாக திருமணத்துக்காக மதம் மாறுதல், லவ் ஜிகாத் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அதுபோன்று நடத்தப்படும் திருமணம் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
‛திருமணத்தை அடிப்படையாக வைத்து 100க்கும் மேற்பட்ட கட்டாய மதமாற்றங்கள் நடந்துள்ளன. இந்த நேர்மையற்ற மதமாற்றத்தைத் தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஓர் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். மைனர் சிறுமிகள், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களை கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இது ஜாமினில் வெளிவரமுடியாத குற்றமாகவும் கருதப்படும்,’ எனக் கூறினார்.
XXXX


சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள தலைமை செயலர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கொரோனா காரணமாக சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வார நாட்களில் ஆயிரம், சனி, ஞாயிறு தினங்களில் இரண்டாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் வருமானம் குறைந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தவிக்கிறது. இதனால் தினசரி பக்தர்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்று தேவசம்போர்டு சார்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. இதுதொடர்பாக முடிவு எடுக்க கேரள அரசின் தலைமை செயலாளர் விஸ்வாஸ்மேத்தா தலைமையில் உயர்மட்ட கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
XXXX
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 7 டன் மலர்களால் புஷ்ப யாகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடக்கின்றன. இதில் கார்த்திகை மாதம் நடைபெறும் புஷ்பயாகம் சிறப்பு வாய்ந்தது. இதனையொட்டி கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அப்போது உற்சவர்களுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
புஷ்பயாகத்தையொட்டி மல்லிகை, ரோஜா, கனகாம்பரம், லில்லி, இக்சோரா உள்பட 14 வகையான 7 டன் பூக்கள் கூடை கூடையாக தேவஸ்தான பூங்காவிலிருந்து விழா நடக்கும் மண்டபத்திற்கு ஊழியர்களால் எடுத்து வரப்பட்டது அந்த பகுதியே மலர்களின் நறுமணத்தால் பக்தி பரவசமாக இருந்தது.
XXXX
திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு

திருமலை: திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 10 நாட்களுக்கு சொர்க்க வாசலை திறந்து வைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி, திருமலை அன்னமய பவனில், நேற்று மாலை அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில், குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில், பல முக்கிய விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
கூட்ட நிறைவுக்கு பின், சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலை தேவஸ்தான வரலாற்றில் முதன் முறையாக, வைகுண்ட ஏகாதசியின் போது, 10 நாட்கள் சொர்க்க வாசலை திறந்து வைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்காக மடாதிபதிகள், பீடாதிபதிகளுடன் கூடிய கமிட்டி ஏற்படுத்தப்பட்டு, அதில் முடிவு செய்யப்பட்டு, அறங்காவலர்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வரும், 25 முதல், தொடர்ந்து, 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்து வைக்கப்பட உள்ளது.
திருமலை தேவஸ்தானத்திடம் உள்ள அசையாத சொத்துக்கள் தொடர்பாக, வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய தேவஸ்தானத்தின் சொத்துக்கள் விற்கப்படுவதை தடுக்க, தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதுவரை தேவஸ்தானத்திடம், 1,128 சொத்துகள் உள்ளன; 8088.89 ஏக்கர் நிலம் உள்ளது.
XXXX
நியூசிலாந்து எம்.பி. சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர், நாடாளுமன்றத்தில் பதவியேற்பின் போது சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி ஏற்றார்.
இந்தியாவில் ஹிமாச்சால பிரதேசம், ஹமீா்பூரை பூா்விகமாக கொண்டவர் டாக்டர் கெளரவ் சர்மா . மருத்துவரான இவர் அங்கிருக்கும் தொழிலாளர் கட்சி சார்பில், நியூசிலாந்தின் ஹாமில்டன் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக சமீபத்தில் தெரிவு செய்யப்பட்டார்.
இதையடுத்து, கடந்த புதன் கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பதவியேற்பின் போது, டாக்டர் கெளரவ் சர்மா, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் கலாச்சார பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், முதலில் நியூசிலாந்தின் மயோரி
மொழியிலும் பின்னா் சம்ஸ்கிருத மொழியிலும் உறுதிமொழி ஏற்றார்.
பதவி ஏற்பின் போது, ஏன் ஹிந்தி மொழியில் உறுதி மொழி எடுக்கவில்லை என்று சர்மாவிடம் கேட்ட போது, அவர்
ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப்படுத்துவது என்பது கடினமான விஷயம். அதன் காரணமாகத்தான் சம்ஸ்கிருதத்தை தெரிவு செய்தேன். சம்ஸ்கிருதம் அனைத்து இந்திய மொழிகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியது என்று கூறியுள்ளார்.
XXXXXX
நியூ ஜெர்சியில் சாத் பூஜை
சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!
இந்தியாவின் வடமாநிலங்களில் சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத் பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து மத விழாவான சாத் விரத பூஜை சூரிய கடவுளுக்கும் மற்றும் அவரது மனைவிக்கும் நன்றி சொல்ல நடத்தப்படும். நான்கு நாட்களுக்கு இந்த பூஜை நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர்., அமெரிக்காவில் வாழும் வட இந்தியர்கள் பலரும் சாத் விரத பூஜையில் பங்கேற்றனர். அமெரிக்காவின், நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள மனலபன் ஆற்றுக்கரையில் திரண்ட 600க்கும் அதிகமான வடஇந்திய பெண்கள் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான சாத் விரத பூஜை நடத்தினர்.
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி,
வணக்கம்

tags — உலக இந்து சமய, செய்தி மடல் 30-11-2020 ,