
Article written by S.NAGARAJAN
Date: 10 June 2016
Post No. 2883
Time uploaded in London :– 8-01 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
10-6-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
ச.நாகராஜன்
“மறு ஜென்மம் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். குழந்தைகள் சில சமயம் தங்கள் முற்பிறப்புகளின் விவரங்களைக் கூறுகின்றன. சரி பார்க்கப்படும் போது அவை அனைத்தும் சரியாக இருக்கின்றன. முந்தைய ஜென்மம் அல்லாது அவைகளுக்கு அவ்வளவு விவரங்கள் தெரிய வாய்ப்பே இல்லை!” – அமெரிக்க விண்வெளி உயிரியல் விஞ்ஞானி கார்ல் சகன்
மறு ஜென்ம்ம் பற்றிய ஆராய்ச்சியில் இன்று உலகில் தலையாய ஆய்வாளராக இருப்பவர் வ்ர்ஜீனியா பல்கலைக் கழகத்தைச் (அமெரிக்கா) சேர்ந்த உளவியல் நிபுணர் ஜிம் டக்கர் (Jim Tucker)என்பவர். எக்ஸ்ப்ளோர் (Explore) என்ற பிரபல பத்திரிகையில் 2008ஆம் ஆண்டு பல மறு ஜென்ம கேஸ்களைப் பற்றிய தன் ஆய்வுக் குறிப்புகளை அவர் வெளியிட்டார்.

அதில் நூறு சதவிகித விவரங்களும் சரியாக இருப்பது குழந்தைகள் தங்கள் முந்தைய ஜென்ம விவரங்களை வெளியிடும் போது தான் என்று அவர் குறிப்பிட்டார் பிரமாதமான விவரங்களைத் துல்லியமாக குழந்தைகள் தருவது சராசரியாக அவர்கள் மூன்று வயதாக (35 மாதங்கள்) இருக்கும் போது தான்
அவர்கள் கூறும் செய்திகளை யாராலும் சுலபமாக அவர்களுக்குச் சொல்லித் தர முடியாது.
தங்களது முந்தைய குடும்பம், நாடு, நகரம், விலாசம், தொழில், நண்பர்கள் உள்ளிட்ட விவரங்களைச் சரியாகத் தருவது லேசுப்பட்ட காரியமா என்ன ? அதுவும் 35 மாத குழ்ந்தையாக இருக்கும் போது!
மறு ஜென்மம் இல்லையென்றால் இன்னொரு சாத்தியக்கூறு இப்போதுள்ள மூன்று பரிமாணங்கள் அல்லாமல் இன்னொரு பரிமாணத்தில் அவர்கள் பயணம் செய்து இன்னொரு நிலையில் ஒரு வாழ்க்கை அனுபவத்தை உணர்வது தான்!
ஒரு ஆன்மா அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முன் பல்வேறு ஜென்மங்களை எடுத்து அனைத்தையும் அனுபவிக்க வேண்டியதாக இருக்கலாம்.
எல்லா ஆன்மாக்களும் ஒரே ஒரு இடத்திலிருந்து தங்கள் பயணங்களைத் துவங்குகிறார்களோ, என்னவோ!
போரிஸ்கா என்ற ஒரு சிறு பையன். ரஷியாவைச் சேர்ந்தவன். அவன் தாயார் அவன் நான்கு மாதக் குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே நன்கு பேச ஆரம்பித்து விட்டான் என்கிறார்! வார்த்தைகளைத் தெளிவாக அவனால் உச்சரிக்க முடிகிறது. எட்டு மாதமான போது அவன் முழு வாக்கியங்களைப் பேச ஆரம்பித்து விட்டான்! இரண்டு வயதான போது அவன் படிக்கவும் ஆரம்பித்து விட்டான்!
உள்ளூரில் பிரபலமான குழந்தையாக அவன் ஆனதில் வியப்பில்லை. அவனது அறிவு அனைவரையும் அசத்தியது.
சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களின் பெயர்களைச் சொல்வதிலிருந்து பிரபஞ்சத்தில் உள்ள் காலக்ஸிகள், நட்சத்திரங்கள் என்று வானியலில் அவனுக்குத் தெரியாத விஷயமே இல்லை!
அந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட பேரறிவு வருவதற்கான வாய்ப்பே இல்லை!
அவனுக்குத் தன் பழைய ஜென்ம ஞாபகமும் உண்டு. முந்தைய ஜென்மங்களில் ஒன்றில் அவன் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்திருக்கிறான் – பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்!
அவனைப் பேட்டி காண பலரும் வந்தனர்.
அவர்களிடம் அவன் சகஜமாகப் பேசினான். ஏராளமான விவரங்களைப் போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போனான்.
பேட்டி கண்டோர் திகைத்துப் போனார்கள்!
“செவ்வாய் கிரகத்தில் உள்ளவர்கள் பலவேறு காலக்ஸிக்களுக்கும் பல்வேறு கிரகங்களுக்கும் பயணம் செய்வார்கள். அங்கு ஆகாய விமானம் போல விண் கலங்கள் உண்டு. அந்தக் கலங்கள் ப்ளாஸ்மா சகதியையும் ஐயான் சக்தியையும் உபயோகித்துப் பறந்தன. பெட்ரோல் போன்றவற்றை உபயோகித்தால் சீக்கிரமே அவை தீர்ந்து விடும். அந்தக் கலங்களில் பொருத்தப்பட்டிருந்த எஞ்ஜின்கள் மிக மிக சக்தி வாய்ந்தவை!”
ஒரு சிறு குழந்தைக்கு எந்த விதத்திலும் யார் சொல்லித் தந்தாலும் சொல்ல முடியாத விவரங்களை அவன் கூறும் போது திகைப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?
அவன் டெலிபோர்டேஷன் பற்றியும் பேசினான்.
“ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்தில் தோன்றுவது என்பது சுலபமான விஷயம் தான். அப்படி ஒரு மாறுதலை போர்டல் (PORTAL) மூலம் செய்ய முடியும். போர்டலின் போது நேரம் மெதுவாக இயங்கும் பின்னர் வெகு வேகமாக ஓடும். எப்படி என்பதை விளக்கவே முடியாது.
சில நிமிடங்களில் வெளியில் உள்ள இன்னொரு இடத்திற்குச் சென்று விடலாம்!
எல்லா எஞ்ஜின்களும் ஒரே மாதிரி இயக்கத்தைக் கொண்டிருப்பதில்லை. ப்ளாஸ்மா எஞ்ஜின்கள் சூரிய மண்டலத்தில் மட்டுமே பயணிக்க முடியும்.
ஒவ்வொரு கிரகத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு விதமாகத் தங்கள் விண்கலங்களை இயக்குகிறார்கள். உதாரணமாக ப்ளாஸ்மாவை எல்லோரும் பயன்படுத்துவதில்லை. சில கிரகங்களில் எனர்ஜி எஞ்ஜின்களைப் பயன்படுத்துகின்றனர்!”
இப்படி அந்த சிறுவன் விண்கல விவரங்களைப் பற்றி பிட்டுப் பிட்டு வைத்தான்.
செவ்வாய் கிரக வாசிகள் மனிதர்களைப் போல ஆக்ஸிஜனை சுவாசிப்பதில்லையாம். அவர்கள் கார்பன் டை ஆக்ஸைடையே சுவாசிக்கிறார்களாம். கிரகங்களிடையே ஒத்துழைப்பு போன்ற பெரிய விஷயங்களையும் மூன்று வயதுச் சிறுவன் பேசும் போது விஞ்ஞானிகள் வியக்கின்றனர்; திகைக்கின்றனர்.
இதற்கிடையில் நாஸாவைச் சேர்ந்த ப்ளானடரி ஸயின்ஸஸ் டைரக்டரான ஜேம்ஸ் க்ரீன் (James Green, NASA Director of Planetary Sciences) இதற்கு முன்னர் நாம் நினைத்தது போல செவ்வாய் கிரகம் வறண்ட கிரகம் அல்ல; அங்கு நீர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளார்.
நாஸா ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் பல அதிசய விஷயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அங்கு ஆறுகள் ஜீவ நதி போல பெருகி வரும் நீருடன் ஓடிக் கொண்டிருந்தனவாம்.
வாழ்க்கை வாழ்வதற்கான சகல வாய்ப்புகளும் செவ்வாயில் உண்டாம்.
ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த கிரகவியல் விஞ்ஞானி ஜேண்ட்ரா ஓஜா (Lujendra Ojha , Planetary Scientist of Georgia Institute of Technology) செவ்வாய் கிரகம் பற்றி எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்து அங்கு நீர் இருப்பதை உறுதி செய்துள்ளார்.
ஆக நாஸா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் இருந்திருக்கக் கூடும் என்ற முடிவுக்கு இப்போது வந்துள்ளனர்.
இந்த சமயத்தில் ‘செவ்வாய் பையன்’ போரிஸ்காவின் பேட்டி பரபரப்பான ஒன்றாக அமைகிறது!
மறு ஜென்மம் பற்றி பூமியில் பல இடங்களில் வாழ்ந்ததாக குழந்தைகள் குறிப்பிட்ட கேஸ்கள் பல உண்டு. அவற்றின் மீது ஆய்வு மேற்கொண்டு அவை உண்மை தான் என்பதை விஞ்ஞானிகள் கண்ட விவரமும் உண்டு.
ஆனால் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படும் விவரம் கொண்ட கேஸ் முதல் முதலாக இது தான்! இதை யார் தான் சரி பார்க்க முடியும்!
விஞ்ஞானிகளைத் திகைக்க வைக்கும் சிறுவன் போரிஸ்கா புதிய பரிமாணம் கொண்ட ஒரு புத்தறிவுக்கு வழி வகுக்கும் பாலகனா?!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பிரான்ஸை சேர்ந்த தத்துவ ஞானியும் கணித மேதையும் விஞ்ஞானியுமான டெஸ்கார்டஸ் ( தோற்றம் 31-3-1596 மறைவு 11-2-1650) இன்று ரொபாட் (Robot) என்று பிரபலமடைந்திருக்கும் தானியங்கி இயந்திரங்களுக்கான முதல் வழிகாட்டியுமாவார்.
அவர் இளவயதில் ஐந்தே வயதில் மறைந்த தனது பெண் குழந்தை பிரான்ஸின் போலவே ஒரு தானியங்கி பொம்மை ரொபாட்டை அமைத்தார்.
அவருக்கு 1649ஆம் ஆண்டில் ஸ்வீடன் மஹாராணி கிறிஸ்டினாவிடமிருந்து அழைப்பு வரவே கப்பலில் தன் பொம்மையையும் எடுத்துச் சென்றார். கப்பல் காப்டனிடம் தன் குழந்தையை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கண்டிப்பான் உத்தர்வைப் போட்டிருந்தார் அவர். கப்பலில் அவர் மேல் தளத்தில் இருக்கும் போது பலத்த புயல் ஒன்று வரவே காப்டன் ஓடோடி வந்து அவரது மகளைக் காப்பாற்ற விழைந்தார். ஆனால் அவர் கண்டது ஒரு பெட்டியைத் தான். பெட்டியைத் திறந்தவுடன் ‘உயிருள்ள பொம்மை’ ஒன்றைக் கண்டார்.
இளம் பெண் கண்ணை அகல விரிப்பது போல பொம்மை தன் கண்களள அகல விரித்துப் பார்த்தது. அரண்டு போன காப்டன் அது பேயோ பிசாசோ என்று எண்ணி அதை, கப்பலிலிருந்து கடலில் தூக்கி எறிந்தார். நிஜமான தன் ஐந்து வயது மகளை இழந்த டெஸ்கார்டஸ் இப்போது தனது இயந்திர மகளையும் இழந்தார். மிகவும் வருத்தமடைந்த அவர் அதிலிருந்து மீளவே இல்லை ஸ்வீடனுக்கு வந்த அவர் நியுமோனியாவினால் பாதிக்கப்பட்டு .இறந்தார்.
முதல் ரொபாட்டை வடிவமைத்த பெருமை டெஸ்கார்டஸையே சேரும்!.

–சுபம்–
You must be logged in to post a comment.