

Post No. 9929
Date uploaded in London – 3 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
எழுத்தாளர்களுள் பலர் உலகப் புகழ் பெறுகின்றனர். ஆனால் அவர்களுடைய சுய வாழ்வோ சுகப்படுவதில்லை. வறுமை வாட்டும் அல்லது மன வெறுமை வாட்டும். அப்படிப்பட்டவர்கள் பட்டியலில் பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜான் ரஸ்கினும் (JOHN RUSKIN) ஒருவர். கலைகள் பற்றி எழுதி புகழ் அடைந்தவர் அவர்.
19ம் நூற்றாண்டு பிரிட்டனில் கலை பற்றியும் சமுதாயம் பற்றியும் எழுதி புதிய சிந்தனையை மலர வைத்தவர் ஜான் ரஸ்கின்.
அவர் லண்டனில் மத்திய தரக் குடும்பத்தில் பிறந்தார். அந்தக் குடும்பத்தில் அவர் ஒரே புதல்வர். வீட்டிலேயே ஆரம்பக் கல்வி கற்ற அவர், பின்னர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பயின்றார். அங்கு அவர் கவிதை எழுதி ஒரு பரிசும் பெற்றார். அவருக்கு கலை விஷயங்களில் அதிக ஆர்வம் இருப்பதை அறிந்த பெற்றோர்கள் அவரை அழகான ஆல்ப்ஸ் மலை வாசஸ்தலங்களுக்கு அனுப்பினார்கள். அங்கே இயற்கை அழகில் அவர் சொக்கிப்போனார் .
அவர் தற்கால ஓவியர்கள் (MODERN PAINTER) பற்றி ஐந்து தொகுதிகள் வெளியிட்டார். அதில் முதல் தொகுதி 24 வயதிலேயே வந்தது குறிப்பிடத் தக்கது. பிரிட்டிஷ் ஓவியர் டர்னர் (TURNER) மற்றும் ரபேலுக்கு முந்திய கால ஓவியர்களின் (PRE-RAPHAELITE) சிறப்பை வருணிக்கும் புஸ்தகங்கள் இவை.
ரஸ்கினுக்கு கட்டிடக்கலையிலும் ஈடுபாடு உண்டு. இதனால் மத்திய கால கட்டிடக்கலையின் சிறப்புகளையும் தனி புஸ்தகங்களாக எழுதினார் . ‘கட்டிடக் கலையின் ஏழு ஒளி விளக்குகள்’, ‘வெனிஸ் நகர் கல் ஓவியங்கள்’ முதலியன பலருடைய பாராட்டுதலையும் பெற்றன.
மத நம்பிக்கையால் உந்தப்பட்ட கல் வினைஞர்களும், சிற்பிகளும் மத்திய கால சர்ச்சுகளில் , கதீட்ரல்களில் அற்புதமான கலை வேலைப்பாடுகளை சமைத்தனர் என்பது அவரது துணிபு.
தொழிற்புரட்சியை அடுத்து உருவான நகரங்களின் அவலட்சணத்தை அவர் குறைகூறினார். அவை தவறான கட்டுமானங்கள் என்றும் இதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டது என்றும் கண்டித்தார். இந்த சிந்தனை அவர் சமுதாய விஷயங்களை எழுதவும் தூண்டின. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும், அவர்களுடைய ஊதியம் அதிகரிக்கப்படவேண்டும் என்றும் எழுதினார். கலைகள் பற்றி அவர் எழுதியதால் ஏற்பட்ட புதிய சிந்தனை, சமுதாய விஷயத்திலும் எதிரொலித்தது. இங்கிலாந்தில் தொழிலாளர்கள் முன்னேற்றம் குறித்து புதிய எண்ணங்கள் உதித்தன.
50 வயதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நுண் கலை கற்பிக்கும் பேராசிரியர் ஆனார். இவ்வளவு இருந்தும் சொந்த வாழக்கை பூஜ்யமானது; 35 வயதில் திருமணம் குலைந்தது . வாழ்க்கையின் கடைசி நாட்களில் மனத்தொய்வு ஏற்பட்டு முடங்கிப் போனார்.

ஜான் ரஸ்கின் பிறந்ததேதி – பிப்ரவரி 8, 1819
இறந்த தேதி – ஜனவரி 20, 1900
வாழ்ந்த ஆண்டுகள்- 80
அவர் எழுதிய நூல்கள்:–
1843- 1860- MODERN PAINTERS ( FIVE VOLUMES)
1849- THE SEVEN LAMPS OF ARCHITECTURE
1851-53 – THE STONES OF VENICE
1862- UNTO THIS LAST
1865- SESAME AND LILIES
1871- 1884 – FORS CLAVIGERA
1872- MUNERA PULVERIS
1880- A JOY FOR EVER
1885- 1889- PRAETERITA (UNFINISHED )
–SUBHAM–





tags—மண முறிவு, பிரிட்டிஷ் எழுத்தாளர் ,ஜான் ரஸ்கின், John Ruskin