


நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா (Post No.9745)
GEORGE BERNARD SHAW 1856-1950
Post No. 9745
Date uploaded in London – –17 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
அயர்லாந்து நாட்டின் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட்ஷா . இவர் ஐம்பதுக்கும் மேலான நாடகங்களை இயற்றியுள்ளார். 1925ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர். கேலி, கிண்டல், நக்கல், பகடி , நகைச்சுவைகள் நிரம்பியது இவரது படைப்புகள்.
ஷா ஒரு வெஜிட்டேரியன் – மரக்கறி உணவு மட்டுமே சாப்பிடுவார் .
ஷா குடி , மதுபானத்தை எதிரி.
ஷா பாரதி போலவே பெண்ணுரிமைக்குப் போராடியவர்.
ஷா ஒரு சிந்தனைச் சிற்பி.
பிறந்த தேதி – 26 ஜூலை 1856
இறந்த தேதி- நவம்பர் 2, 1950
வாழ்ந்த ஆண்டுகள் – 94
ஷா , அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில்(Dublin) பிறந்தார்.
இவருடைய தந்தை மஹா குடிகாரன் . இதனால் தாய் கோபித்துக்கொண்டு லண்டனுக்குப் போய்விட்டாள். அங்கே சங்கீதம் சொல்லிக்கொடுத்தார் ஷா கற்றதெல்லாம் சமயம் தொடர்பான கல்வி. இது இவரது படைப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இருபது வயதானபோது லண்டனில் அம்மாவுடன் வசிக்கத் தொடங்கினார். அப்போது முதல் சங்கீத, இலக்கிய விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார்.
நார்வே நாட்டு நாடக ஆசிரியர் இப்சனின் (Ibsen) நாடகங்கள் இவரை மிகவும் கவர்ந்தன. அதன் தாக்கத்தை இவரது நாடகங்களிலும் காணலாம்.
36 வயதான போது முதல் நாடகத்தை எழுதினார். அதைத் தொடர்ந்து எழுதிய நாடகங்களிலும் மற்றவர்களால் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் கதாபாத்திரமாகக் கொண்டார்.
இவர் ஒரு சோஷலிஸ வாதி. பேபியன் சொசைட்டி (Fabian Society) என்பதை நிறுவினார். இதன் மூலம் மனித குலத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட முடியும் என்று நம்பினார்.
ஷாவின் நாடகங்களில் மிகவும் புகழ் பெற்றவை பிக்மாலியன் , செயின்ட் ஜோன் .
பிக்மாலியன் நாடகத்தின் மூலம் பிரிட்டிஷ் சமூகத்திலுள்ள வர்க்கக் குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறார். செயின்ட் ஜோன் மூலம் கிறிஸ்தவ மதக் குறைபாடுகளை எடுத்துக் காட்டினார். இவரது நாடகங்கள் திரைப்படங்களாக மிளிர்ந்தன . பிக்மாலியன் , My Fair Lady மை பேர் லேடி திரைப்படமாக வந்து இவருக்குப் புகழ் சேர்த்தது.
பெர்னார்ட் ஷாவின் முக்கியப்படைப்புகள்-
1891- THE QUINTESSENCE OF IBSENISM
1892- WIDOWER’S HOUSES
1894- ARMS AND THE MAN
1902- MRS WARREN’S PROFESSION
1903- MAN AND SUPERMAN
912 – PYGMALION
1913 – ANDROCLES AND THE LION
1919- HEARBREAK HOUSE
1921- BACK TO METHUSELAH
1923- ST. JOAN
ஷா எழுத்தாளர் மட்டுமல்ல. நல்ல பேச்சாளரும் கூட. சிந்தைனையைத் தூண்டும் வகையில் பேசுவார்.
10-8-1990-ல் நான் பி.பி.சி. தமிழோசையில் அளித்த பதிலில் (வினவுங்கள் விடைதருவோம் நிகழ்ச்சி) உள்ள சில விஷ்யங்களையும் கூறுகிறேன் :-
ஷா முதலில் வேலைக்குச் சேர்ந்த இடம் ஒரு நில விற்பனை அலுவலக ம் .
28 வயதில் சோஷலிஸ இயக்கத்தில் ஈடுபட்டு அவரைப் போலவே அந்த இயக்கத்தில் ஆர்வம் கொண்ட ஒரு (Charlotte Payne- Townsend) பெண்ணை மணந்தார் ஷா.
‘விடோவர்ஸ் ஹவுஸஸ்’ என்ற நாடகத்தில் நிலச் சுவான்தார்களைத் தாக்குகிறார். புதியதோர் உலகம் செய்வோம்; கெட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம் என்பது அவரது கொள்கை. போர் செய்வது எவ்வளவு மடைமை என்பதை ‘ஆர்ம்ஸ் அண்ட் தி மேன்’ நாடகம் விளக்குகிறது.
முதல் உலகப் போருக்குப் பின்னர் ஷா எழுதிய நாடகங்கள்தான் இவரது படைப்புகளில் முன்னனியில் நிற்கின்றன. ஜோன் ஆப் ஆர்க்கின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் செயின்ட் ஜோன் , ஜூலியஸ் சீஸர் – அழகி கிளியோபாட்ராவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஸீஸர் அண்ட் க்ளியோபாட்ரா ஆகியன சிறப்பானவை .
நீண்ட காலம் வாழும் மனிதர்களை பற்றிய ‘பேக் டு மெதூசலா’ என்ற நாடகமும் குறிப்பிட்டது தக்கது.
பிரிட்டனில் பதவிக்கு வந்த தொழிற்கட்சி இவருக்கு பிரபு பட்டம் கொடுக்க முன்வந்தது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்
74 வயதில் இந்தியா , சீனா , ஆப்ரிக்க நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றுக்கு உலகப் பயணம் மேற்கொண்டார்.
93 வயதிலும் எழுதிக்கொண்டே இருந்தார். ஏராளமான செல்வம் சேர்த்தபோதும் தன்னை அசல் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டார்.மக்களைச் சிரிக்கவைத்த அதே நேரத்த்தில் சிந்திக்கவும் வைத்தார்.
மேலை நாடுகள் மீது என்றோ ஒரு நாள் ரஷியா படை எடுக்கும் என்று மேலை நாடுகள் அஞ்சின. ஆனால் ரஷியாவுக்குள்ள சொந்தப பிரச்சினைகளால் இதை அது எண்ணிக்கூட பார்க்காது என்று ஷா கூறினார். அது இன்று வரை சரியாகவே உளது.
நானும் தமிழ் திரைப்பட நடிகை ராதிகாவும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று லண்டனில் நடித்த பிக்மாலியன் (Pygmalion) பி பி. சி தமிழோசையில் ஒளிபரப்பாகியது
Written by London Swaminathan, 17 June 2021
ஷா பற்றிய முந்தைய கட்டுரைகளில் இந்த விஷயங்களைக் காண்க:—
பெர்னார்ட் ஷா | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ப…
26 Jul 2015 — Article No.2019. Written லண்டன் சுவாமிநாதன். Swami_48@yahoo.com. Date : 26 July 2014. Time uploaded in London :7-07. 1.இசாடொரா டங்கன் என்ற பெண்மணி, புகழ்பெற்ற …
பெர்னார்ட் ஷா துணுக்குகள் | Tamil …
https://tamilandvedas.com › tag › ப…
1.
26 Jul 2015 — Article No.2020. Written லண்டன் சுவாமிநாதன். Swami_48@yahoo.com. Date : 26 July 2014. Time uploaded in London :7-16. ஷா தொடர்பான முதல் ஐந்து சுவையான …
சம்பவங்கள் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ச…
1.
27 Apr 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. FIRST PART OF THIS TALK WAS … (எனக்கும் பெர்னார்ட் ஷா நாடகங்களுக்கும் தொடர்பு உண்டு. லண்டனில் பி.பி.
நடந்தவை தான் நம்புங்கள் – 4 (Post No …
https://tamilandvedas.com › நடந்…
1.
25 Jan 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. நடந்தவை … பேரறிஞர் பெர்னார்ட் ஷா புத்திகூர்மை உள்ளவர் மட்டுமல்ல; உடனுக்குடன் பதில் …







tags–ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, பெர்னாட் ஷா