
WRITTEN BY S NAGARAJAN
Date: 4 October 2018
Time uploaded in London – 5-52 AM (British Summer Time)
Post No. 5504
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
அற்புத தத்துவ ஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி!
ச.நாகராஜன்
நம்முடைய காலத்திலேயே வாழ்ந்து நமக்கு சுருக்கமான வார்த்தைகளில் பெரிய அரிய உண்மைகளை விண்டுரைத்தவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜே.கிருஷ்ணமூர்த்தி.
பெருத்த சிந்தனையாளர். தத்துவ ஞானி. ஆன்மீகத்தை அள்ளித் தந்தவர். மனம், தியானம், உலகியல் வாழ்வு, சமூக மாற்றம் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை எளிமையாக விளக்கியவர்.
அவரது சொற்களிலேயே அவரது தத்துவம் இது தான்:

உன்னை மாற்றிக் கொள் (CHANGE YOURSELF)
நீயே தான் உலகு (YOU ARE THE WORLD)
1895ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி மதனபள்ளியில் தெலுங்கு அந்தணர் குடும்பத்தில் பிறந்த ஜே.கே. தியாஸபி இயக்கத்தில் ஈடுபட்டு பெரும் புகழ் பெற்றார். அவரது உயரிய ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்பதே ஒரு அனுபவம் என்ற நிலையில் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் அவரது உரைகளைக் கேட்டு இன்புற்றனர்; பயனுற்றனர்.
1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் நாள் அவர் மறைந்தார். அவரது வாழ்வு திடுக்கிடும் திருப்பங்கள் நிரம்பிய ஒன்று. பரபரப்பூட்டும் சம்பவங்கள் அடங்கியது. வியப்பூட்டும் உயரிய தியாகங்கள் நிறைந்தது.
90 வயது வாழ்ந்த அவரது நீண்ட வாழ்வில் அவர் எழுதிய நூல்கள் பல. ஆற்றிய உரைகள் பல. அவரது அனைத்துச் சொற்பொழிவுகள், எழுத்துக்கள் 17 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 1933 முதல் 1967 முடிய உள்ள காலகட்டத்தில் அடங்குபவை இவை.
இது 50 தொகுதிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17 தொகுதிகளின் விவரம் இதோ:-

- Volume 1 (1933–1934): The Art of Listening(1991).
- Volume 2 (1934–1935): What Is the Right Action?(1991)
- Volume 3 (1936–1944): The Mirror of Relationship(1991).
- Volume 4 (1945–1948): The Observer Is the Observed(1991)
- Volume 5 (1948–1949): Choiceless Awareness(1991)
- Volume 6 (1949–1952): The Origin of Conflict(1991).]
- Volume 7 (1952–1953): Tradition and Creativity(1991).
- Volume 8 (1953–1955): What Are You seeking?(1991).
- Volume 9 (1955–1956): The Answer is in the Problem(1991).
- Volume 10 (1956–1957): A Light to Yourself(1991).[
- Volume 11 (1958–1960): Crisis in Consciousness(1991).
- Volume 12 (1961): There is No Thinker, Only Thought(1991).
- Volume 13 (1962–1963): A Psychological Revolution(1992).
- Volume 14 (1963–1964): The New Mind(1992).
- Volume 15 (1964–1965): The Dignity of Living(1992).
- Volume 16 (1965–1966): The Beauty of Death(1992)
- Volume 17 (1966–1967): Perennial Questions(1992)

இந்தப் பதினேழு தொகுதிகளும் சுமார் 5500 பக்கங்கள் கொண்டவை. ஜே.கே எழுதியவை 2412 நூல்களில் அடங்கும் என்றும் சுமார் 4580 வெளியீடுகளைக் கொண்டது என்றும் இவை 53 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிகிறது. 46822 நூலகங்களில் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. அவரது படைப்புகள் சுமார் இரண்டு கோடி வார்த்தைகளை உள்ளடக்கியது. 75 புத்தகங்கள், 700 ஆடியோகேஸட், 1200 வீடியோ கேஸட் உள்ளிட்டவை இப்போது கிடைக்கின்றன. 2010இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின் படி 22 மொழிகளில் இவரது படைப்புகள் சுமார் 40 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. இப்போது நிகழ்நிலை – ஆன் லைன் – மூலம் படிக்கவும் இவரது நூல்கள் கிடைக்கின்றன.
இவரது சிந்தனையால் கவரப்பட்ட அறிஞர்கள், கவிஞர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரின் பட்டியல் மிக நீண்டது. இடம் கருதி சிலரை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.
George Bernard Shaw, Henry Miller, Anne Morrow Lindbergh, Alan Ginsburg, Federico Fellini, Khalil Gibran, Pandit Jawaharlal Nehru, Indira Gandhi, Erick Fromm, Prof. David Bohm, Charlie Chaplin, Greta Garbo, John Kenneth Galbraith, Svetlana (Stalin) Peters, Dalai Lama.
இவரது உரையைக் கேட்ட அல்டஸ் ஹக்ஸ்லி,”புத்தரின் உரையைக் கேட்பது போல இருக்கிறது. அப்படிப்பட்ட வலிமை, நுட்பம், அதிகாரபூர்வமான கருத்துக்கள்” என்றார்.
ஜே.கேயின் கருத்துக்கள் உண்மை ஒளியைக் காண விழைவோருக்கான ஒரு அபூர்வ பொக்கிஷமாகும்.
படிப்போம்; உயர்வோம்!
***