
Written by S. NAGARAJAN
Date: 11 October 2016
Time uploaded in London: 5-56 AM
Post No.3240
Pictures are taken from various sources; thanks
Contact :– swami_48@yahoo.com
ஹிந்துக்களின் வெற்றித் திருநாள் விஜயதசமி! ஆர்.எஸ்.எஸ். உதயமான தினம்! சிறப்புக் கட்டுரை
ஆர்.எஸ்.எஸ்: நான்யபந்தா வித்யதே!
By ச.நாகராஜன்

ஒரு முக்கியமான கால கட்டத்தில் ஹிந்துக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
ஹிந்து இனம் அடி வாங்கி வாங்கி உடம்பெல்லாம் இரத்தமயமான இனம்.இனி அடி வாங்க உடம்பில் இடமும் இல்லை. திராணியும் இல்லை!
ஹூண்ர்கள், முகலாயர்கள், கிறிஸ்தவர்கள் என்று இந்த ஹிந்துக்களை அடிக்காத இனமே இல்லை.
அடி வாங்குவதற்கென்றே பிறந்த “சபிக்கப்பட்ட இனமா” இது!
உலகின் தலைசிறந்த தத்துவங்களைத் தந்த ஹிந்துக்கள், எந்த மதமும் சம்மதம் என்று சொல்லும் ஹிந்துக்கள், சகல கலைகளிலும் முன்னோடிகளாக விளங்கிய ஹிந்துக்கள், வீரத்திலும் அறப் பண்பிலும் உலகிற்கே வழி காட்டிய ஹிந்துக்கள், தொன்று தொட்டு இன்று வரை எந்த இடம் என்று இல்லாமல் குக்கிராமங்களிலிருந்து பெரும் நகரங்கள் வரை ஆங்காங்கே ரிஷிகள், முனிவர்கள், மகான்கள், தபஸ்விகள், சித்தர்கள், ஞானிகள், கவிஞர்கள், வீரர்கள், பெரும் மேதைகள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள் என அனைத்துத் துறைகளிலும் விற்பன்னர்களைத் தொடர்ந்து தோற்றுவித்த ஹிந்து இனத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள்.. இப்படி அடி வாங்குவது காலத்தின் கோலமா? ஹிந்து இனத்தில் உள்ள குறைகளா?
இதை ஆராய்ந்தார் ஒரு மஹரிஷி போன்ற மனிதர்.
ஆபத்துக்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.
ஜிஹாத் என்று சொல்லி தீவிரவாத முஸ்லீம்கள் அடி அடி என்று ஹிந்துக்களை அடிக்கும் கோரம் ஒரு புறம்..
இந்தியாவில் உங்களுக்கு நல்ல அறுவடை இருக்கிறது, அவர்கள், மதத்தை மாற்றுங்கள், ஹிந்துக்களை அழியுங்கள், கிறிஸ்தவர்களாக்குங்கள் என்று பகிரங்கமாக அறைகூவல் விடும் கிறிஸ்தவ மேலிடம் ஒரு புறம்..
மதம் ஒரு அபின் அதை ஒழி என்று உலக் கோஷம் இட்டு விட்டு ஹிந்துக்களிடம் மட்டும (இஸ்லாம், கிறிஸ்தவத்தை மறந்தும் அணுகாமல்) அதை பிரசாரம் செய்யும் தேசபக்தியற்ற கம்யூனிஸ்டுகள் ஒரு புறம்.
ஹிந்துக்கள் சின்னாபின்னமாக இதை விட வேறு என்ன வேண்டும்?
இல்லை இல்லை, இன்னும் ஒன்றும் மிச்சம் இருக்கிறது. மேல் சொன்னவர்களின் கூட்டாளிக்ளாக அவர்களுடன் இணைந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தங்களை மேம்படுத்திக் கொள்ள ஹிந்துக்களைப் பழிக்கும் திராவிட தீய் சக்திகள் உள்ளிட்ட சொந்த இனத்து துரோகிகள் இன்னும் ஒரு புறம்.
மேல் சொன்ன நால்வரில் நான்காம் படை மிக மோசமானது,
இவர்களை எதிர்கொள்ள வேண்டுமே! ஹிந்து இனத்தின் குறைகள் யாவை?
இரண்டு!
- ஒற்றுமையின்மை 2) சமூகப் பொறுப்பின்மை
அஹிம்சை, பொறுத்துப் போதல் என்ற ஹிந்து மதத்தின் அருங்குணங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு தங்களை அடிக்கும் போதெல்லாம், தங்கள் மதத்தைத் துணிந்து அழிக்கும் போதெல்லாம், ஏன் தங்கள் உயர் தெய்வமான ராம்ரைச் செருப்பால் அடிப்பது உள்ளிட்ட தீய செயல்களைச் செய்யும் போதெல்லாம் ‘கடவுள் பாத்துக்குவார்’ என்று சொல்லும் கையாலாகாததனம் அவர்களது சமூகப் பொறுப்பின்மையைக் காட்டுகிறது.

ஆங்காங்கே ஹிந்துக்களுக்கு இழைக்கும் கொடுமைகளைத் தட்டிக் கேட்க ஒரு ஒற்றுமையுள்ள இனமாக ஹிந்து இனம் ஒன்று சேர்ந்து பாடுபட்டதில்லை. சமூகப் பொறுப்பினமையோடு ஒற்றுமையும் இல்லை!
இந்த இரு குறைகளைக் கண்ட மஹரிஷி போன்ற மனிதர் ஆழ்ந்து சிந்தித்தார். ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.
கண்டுபிடித்த மஹரிஷியின் பெயர் டாக்டர் கேசவபலிராம் ஹெட்கேவார்.
அவர் கண்டு பிடித்த வழி. ஒற்றுமையையும் ச்மூகப் பொறுப்பையும் கொண்ட ஒரு வலிமை வாய்ந்த ஹிந்து சமுதாயத்தை உருவாக்கி ஹிந்து ராஷ்ட்ரத்தை பாரதத்தில் நிர்மாணித்து ஹிந்து இனம் உலக அரங்கில் ஓங்கி உயர ஒரு சங்கத்தை அமைப்பது.
அவர் அமைத்த சங்கம் தான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்.
1925ஆம் ஆண்டு வெற்றித் திருநாளாலான விஜய தசமி அன்று சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இன்று கம்பீரமாக ஹிந்துக்களைத் த்லை நிமிரச் செய்கிறது.
ஹிந்து மதத்தை அழிக்க்வும் ஒழிக்கவும் நினைக்கும் ராக்ஷஸ சக்திகளை அழிக்க ஒவ்வொருவரும் ராமராக, கிருஷ்ணராக மாற வேண்டிய அவசியத்தை உணர்த்துவது ஆர்.எஸ்.எஸ்.
ஹிந்து மதம் என்றுமுள்ள மதமாக உலக அரங்கில் மிளிர ஒரே வழி ஆர் எஸ் எஸ் தான்.

உபநிடத வாக்கியத்தைக் கடன் வாங்கிச் சொல்வதென்றால்
நான்யபந்தா வித்யதே! (அன்ய பந்தா – வேறு வழி ந வித்யதே –இல்லை)
அதை விட்டால் வேறு வழி இல்லை!!
******
You must be logged in to post a comment.