கொரானா பற்றிய அறிய வேண்டிய சில உண்மைகள்! (Post No.9831)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9831

Date uploaded in London – 9 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் மாத இதழான ஹெல்த்கேர், ஜூலை 2021 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

கொரானா பற்றிய அறிய வேண்டிய சில உண்மைகள்!

ச.நாகராஜன்

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரானா பற்றி ஏராளமான தவறான தகவல்களை ஊடகங்கள் வாயிலாகப் பெறுகிறோம். பயப்படுகிறோம்.ஆகவே அதிகாரபூர்வமான அறிவியல் தகவல்களை மட்டுமே அதற்குரிய ஆதாரத்துடன்  அறிந்து கொள்ள வேண்டும்; இதர தகவல்களை ஒதுக்க வேண்டும்.

  1. தடுப்பூசி போடுவது நல்லது. கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.

நமது ஊடகங்கள் தடுப்பூசி போடுவது பக்க விளைவை ஏற்படுத்தும் எனு தவறான செய்தியை ஆதாரமின்றிப் பரப்பியது வருந்தத் தக்க ஒரு விஷயம். தடுப்பூசி போட்டால் உயிருக்கு ஆபத்து என்பது போன்ற தகவல்களை, பழைய போட்டோக்களை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்டவற்றை வெவ்வேறு காரணங்களினால் இறந்தவரைச் சித்தரித்து, கொரானா பற்றிய செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தன. போட்டோக்களில் உள்ளவர்கள் கொரானாவினால் இறந்தது போன்ற ஒரு மாயத் தோற்றம் சிருஷ்டிக்கப்பட்டது.

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தடுப்பூசியை ஆதரிக்கின்றன; அறிவியல் அறிஞர்கள் அனைவரும் இதைக் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டுமென்று பரிந்துரை செய்கின்றனர்.

அமெரிக்காவிலேயே தப்பான தகவல்களை 25 சதவிகித அமெரிக்கர்கள் பரப்புகின்றனர் என்றால் நமது நாட்டில் 100 சதவிகிதம் உடனுக்குடன் வதந்திகளைப் பரப்புவதைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.

ஒரு தகவலை எப்படி உண்மையா, தவறா என அறிவது? விஞ்ஞானிகள் கூறும் வழி இது.

  1. எந்த ஊடகம் இதைக் கூறியது (Check the Source) 2) யார் கூறியது (Check the author 3)  என்ன சொல்லப்பட்டிருக்கிறது (Check the content) இந்த மூன்றையும் நன்றாக ஆய்வு செய்யுங்கள். பின்னர் நம்புங்கள்.

பிரபல அறிவியல் இதழான ‘ஸயிண்டிபிக் அமெரிக்கன்’ தரும் அறிவுரை இது : தவறான தகவல்களை நம்பாதீர்கள். இப்போது ஒரு தகவல் சரியா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உண்மை அறியும் தகவல் தளங்கள் உள்ளன. அவற்றை உடனடியாகப் பயன்படுத்துங்கள். மற்றவரையும் பயன்படுத்தத் தூண்டுங்கள். தவறான செய்திகளைத் தவறு என்று அனைவருக்கும் தெரிவிப்பதோடு அப்படிப்பட்ட ஊடகங்களைப் பார்க்காதீர்கள்; அவற்றைப் பற்றி அனைவருக்கும் அறிவித்து அப்படிப்பட்ட ஊடகங்களின் செல்வாக்கை (அதாவது டி.ஆர்.பி.ரேடிங்கை) குறையுங்கள். ஸயிண்டிபிக் அமெரிக்கன் தரும் உண்மை அறியும் தளங்கள் இவை:

       Fact-checking organizations such as PolitiFact and FactCheck.org 

  • தடுப்பூசியுடன் முக கவசம் அணிதல் வேண்டும்; சமூக இடைவெளியை இன்னும் சிறிது காலம் கடைப்பிடிக்க வேண்டும்.
  • ஊசியைப் போட்டுக் கொண்ட லக்ஷக்கணக்கானோரில் பத்து சதவிகிதத்திற்கும் கீழானோருக்கு அபாயமில்லாத சாதாரண ஜுரம் வந்திருக்கிறது. இரண்டு டோஸ்கள் ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு 95%க்கும் மேலாக பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இரண்டாவது ஊசியை முதல் ஊசி போட்டுக் கொண்ட 40 நாட்களுக்குப் பின்னர் போட்டுக் கொள்வது அதன் தடுப்புத் திறனை அதிகரிக்கிறது.
  • போலந்து நாட்டு விஞ்ஞானிகள் ஊசி போடுவதற்கு முன்னால் நன்கு உறங்கி, உரிய முறையில் உணவை உட்கொண்டு, சரியானபடி நீரை அருந்தி தக்க உடல்நிலையுடன் செல்வது சிறப்பாகும் என்று அறிவுறுத்துகின்றனர். இது நமது தடுப்புத் திறனை சாதாரணமாகவே அதிகரிக்க வைக்கிறது. பெயின் ரிலீவர் (Pain Reliever) மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பது அவர்கள் தரும் இன்னொரு அறிவுரை. கோவிட்-19 தடுப்பூசி போடும் போது இன்னொரு தடுப்பூசி – ஃப்ளூ போன்றவற்றிற்கானவை- போடுதல் கூடாது.
  • பக்க விளைவு எதுவும் வராது. அப்படி அபூர்வமாக ஒருவருக்கு வருவது என்றால் அது ஊசி போட்ட முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் தெரிய வரும். ஆகவே இருபது நிமிடங்கள் ஊசி போட்ட மருத்துவ மனையில் இருந்து விட்டுப் பின்னர் அங்கிருந்து திரும்பலாம்.

இவ்வளவு சொல்லியும் நீங்கள் சாலையை எட்டிப் பாருங்கள். முக கவசம் அணிவதில்லை. கூட்டம் கூட்டமாகப் போகின்றனர். தடுப்பூசி பற்றி கவலைப்படுவதுமில்லை.

அரசையும் மருத்துவ மனைகளையும் குறை கூறிப் பயனே இல்லை; நாம் உரிய விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நமது வீட்டாரையும் அண்டை அயலாரையும் கடைப்பிடிக்க வற்புறுத்த வேண்டும்.

கோவிடை வெல்வோம்; ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்!

***

tags –  கொரானா , உண்மைகள், முக கவசம், தடுப்பூசி

ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்-1(Post No.3788)

Written by S NAGARAJAN

 

Date: 5 April 2017

 

Time uploaded in London:-  6-22 am

 

 

Post No.3788

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளி வரும் மாத பத்திரிகை ஹெல்த்கேர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்! – 1

 

by ச.நாகராஜன்

 

திருப்பித் திருப்பிச் சொல்லப்பட்டிருப்பதால் நாம் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ள சில தகவல்கள் உண்மையில் தவறுதலான தகவல்களே!

 

இதை மருத்துவ அறிஞர்கள் விளக்குகின்றனர்.

சில தகவல்களின் இன்றைய உண்மையான நிலையை அறிந்து கொண்டால் பயப்படாமல் வாழலாம்; பிறரை பயமுறுத்தாமலும் வாழலாம்!

 

 

  • தடுப்பூசி பற்றிய தவறான தகவல்

 

தடுப்பூசி போட்டுக் கொள்வது ஃப்ளூவை உண்டாக்கும் என்பது தவறான தகவல் என்பது ராக்கேல் வ்ரீமேன் தரும் உண்மைச் செய்தி!

‘அரைகுறை உண்மைகளை நம்பாதீர்கள்’ என்ற நூலை இன்னொருவருடன்  இணைந்து எழுதியுள்ளார் டாக்டர் ராக்கேல் வ்ரீமேன் (Don’t Swallow your Gum! Myths, Half Truths and outright lies about your Body and Health, Dr Rachel Vreeman , Co-author of the book.)

 

 

தடுப்பூசி ஆடிஸம் என்ற வியாதியையும் உருவாக்கும் என்ற செய்தி பரப்பப்பட்டுள்ளது. அதுவும் தவறு தான் என்கிறார் இவர்.

எட்டுக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் தான், அவர்களுக்கு ஆடிஸம் எனப்படும் மனச்சிதைவு நோய் உருவானது என்று கூறியுள்ளனர்.

இதனால் ஏகப்பட்ட் வதந்திகள் பரவலாயின. ஆனால் 2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு மிகப் பெரிய ஆய்வில் இது உண்மை இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

 

 

இந்த ஆய்வுக்காக 530000 பேர்கள் ஆமாம் ஐந்து லட்சத்து முப்பதினாயிரம் குழந்தைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். தடுப்பூசிக்கும் மனச்சிதைவு நோய்க்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது இந்த ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்றாலும் வதந்தி வதந்தி தானே! விடாமல் பரவுகிறது!!

  • விட்டமின் துணை உணவு பற்றிய தவறான தகவல்

 

விட்டமின் துணை உணவுகள் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது தவறான தகவல். இதை நம்பவே கூடாது. இது பொய் என்பது ஒரு புறமிருக்க உண்மையில் இந்த துணை உணவுகள் உண்மையில் மகா ஆபத்தானவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

ஒரு பிரம்மாண்டமான ஆய்வு 25 வருடங்களாக நடத்தப்பட்டு வந்தது.2015ஆம் ஆண்டில் ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதிகமாக விடமின்களை சாப்பிடுவது சில சமயம் கான்ஸரில் கொண்டு போய் விட்டு விடும்! நான்கு வயது பையன் ஒருவன் இப்படி விடமின்களைச் சாப்பிட்டதால் விடமின் டி நச்சுநோய்க்கு ஆளானான்.

இதற்குப் பதிலாக விடமின்கள் உள்ள நல்ல உணவைச் சாப்பிடுவதே நலம் என்கின்றனர் மருத்துவர்கள்!

 

 

  • குளிர்கால பருவநிலை பற்றிய தவறான நம்பிக்கை

 

குளிர்கால பருவநிலை உங்களுக்கு நோயைக் கொடுத்து விடும் என்பது தவறான நம்பிக்கை!

வ்ரீமேன் லைவ் சயின்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், வெறும் குளிரானது குளிரைத் தருவது உண்மை தான் என்றாலும் இப்படிப்பட்ட உஷ்ணநிலை மட்டும் வைரஸ் தாக்குதலைத் தந்து விட முடியாது என்கிறார்.

 

தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற பத்திரிகை இதை விரிவாக வெளியிட்டுள்ளது.

ஒரு இதமான உஷ்ணநிலையில், குளிர் கிருமிகளைத் தும்மும் போது ஏற்படும் நோயை விட, நிச்சயமாக ஐஸ் பாத் எடுப்பதாலோ அல்லது குளிர் அறையில் நடுங்குவதாலோ நோய் வர வாய்ப்பில்லை என்பது தான் உண்மை!

 

ஆனாலும் கூட குளிரான சூழ்நிலை விஷக்கிருமிகளை எப்படித் தாக்குகிறது என்பது தெரியவில்லை.

 

சில விஞ்ஞானிகள் குளிர் காலத்தில் எல்லோரும் வீட்டில் அதிக நேரம் இருப்பதாலும் ஒருவருட்ன் ஒருவர் அதிகமாக ஊடாடுவதாலுமே கிருமிகளின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர் என்கின்றனர்!

 

 

  • மூளைத் திறனைப் பயன்படுத்துதல் பற்றிய தவறான தகவல்

 

பல ஆண்டுகளாகத் திருப்பித் திருப்பிச் சொல்லப்படும் ஒரு தகவல் நாம் நமது மூளைத் திறனில் பத்து சதவிகிதமே உபயோகப்படுத்துகிறோம் என்பது!

 

தன்னம்பிக்கை ஊட்டும் மோடிவேஷனல் பேச்சாளர்களுக்கு இப்படிப் பேச்சை ஆரம்பிப்பது ஒரு வழக்கமான ஆரம்பம். 1907இலிருந்தே இவர்கள் உங்கள்  மூளையில் பத்து சதவிகிதமே நீங்கள் பயனப்டுத்துகிறீர்கள் என்று சொல்லி வருகின்றனர். ஆனால் இது உண்மை இல்லை.

 

வரீமேனும் இந்தியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆரான் கரோலியும் ஒரு புத்தகத்தையே இப்படிப்பட்ட மூட நம்பிக்கையைப் போக்க எழுத வேண்டியதாயிற்று!.

இன்று மூளையை ஸ்கேன் செய்து அதன் இயக்கத்தை எந்த ஒரு நேரத்திலும் பார்க்கும் விஞ்ஞானிகள் இந்தத் தவறான த்கவலை நினைத்துச் சிரிக்கின்றனர்!

 

இது ஜனரஞ்சகமான உணமை, அவ்வளவு தான்! நாம் நமது மூளையின் முழுத் திறனை எட்டவில்லை என்று நம்பும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் பரப்பப்படும் தகவ்ல் இது என்கிறார் வ்ரீமேன்!

 

  • இனிப்பு எனர்ஜியை அதிகமாக்கி பிரச்சினை தரும் என்பது பற்றிய தவறான தகவல்

 

 

ஜீனி அல்லது இனிப்பைச் சாப்பிடும் குழந்தைகள் ‘லிட்டில் பிசாசுகளாக’ மாறிக் கொண்டாட்டம் போடுகின்றனர் என்பது எல்லாப் பெற்றோரின் நம்பிக்கையாக இருக்கிறது.

கூல் எய்ட் என்ற சர்க்கரை இனிப்பில்லாத ஒரு மருந்தை குழந்தைகளுக்குக் கொடுத்தனர் ஆய்வாளர்கள். ஆனால் அதில் இனிப்பில்லை என்ற தகவல் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

பெற்றோர்களோ தங்கள் குழந்தைகள் இனிப்பைச் சாப்பிட்டதால் அதிக எனர்ஜியுடன் ஓவர்-ஆக்டிவ் ஆக இருப்பதாகப் புகார் செய்தனர்!

 

1994இல் ஜர்னல் ஆஃப் அப்நார்மல் சைல்ட் சைக்காலஜி என்ற பத்திரிகையில் இந்த வேடிக்கையான ஆராய்ச்சியின் முழு விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

  • தலையில் அடிபட்டு விட்டால் அது மிகவும் ஆபத்து என்ற நம்பிக்கை

 

தலையில் அடிபட்ட ஒருவர் சுயநினைவுடன் இருக்க வைக்கப்பட வேண்டும் பொதுவாக அனைவரிடமும் உள்ள ஒரு நம்பிக்கை.

தலையில் அடிபட்டுவிட்டால் உடனடியாக மருத்துவ உதவி தேவை என்பது சரி தான்! ஆனால் இது உடனடியாக உயிரைப் பறித்து விடும் என்பது தவறு! ஒரு குறிப்பிட்ட விதமான விதத்தில் தலையில் பட்ட அடியை வைத்துக் கொண்டு பொதுவாக இந்த நம்பிக்கையைப் பரப்பி விடுகிறார்கள் அனைவரும்!

 

எந்த ஒரு அடியானது மூளையில் இரத்தக் கசிவை ஏற்படுத்துகிறதோ அது தான் ஆபத்தான ஒன்று! இவர்களுக்கு ல்யூசிட் பீரியட் (Lucid Period) என்பதைத் தொடர்ந்து கோமா நிலையோ அல்லது சில சமயம் மரணமோ சம்பவிக்கும். ஆனால் இது மிகவும் அசாதாரணமான ஒன்று. சாதாரணமாக இது எளிதில் சம்பவிக்காது. என்கிறார் வ்ரீமேன்.

டாக்டரைப் பார்த்துவிட்டு அவர் இது சாதாரணமான அடி தான் என்று சொல்லி விட்டால் கவலைப்பட ஏதுமில்லை என்பது வ்ரீமேனின் ஆறுதலான செய்தி!

 

  • இன்னும் சில தவறுதலான நம்பிக்கைகள் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்!

*************

 

ஆதாரம் : லைவ் ஸயின்ஸ் இதழ்

நன்றி: லைவ் ஸயின்ஸ்