எனது மூன்றாவது மனைவி!(Post No.2858)

are-three-wives-better1

Article written by S.NAGARAJAN

 

Date: 1 June 2016

 

Post No. 2858

 

Time uploaded in London :–  6-17 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

எனது மூன்றாவது மனைவி!

ச.நாகராஜன்

 

எனக்கு மூன்று மனைவிகள். மற்ற இரண்டு மனைவிகளும் என்னை விட்டாலும் விடுவார்கள், மூன்றாவது மனைவி என்னை ஒருபோதும் விட்டுப் பிரியவே மாட்டாள்!

கவிஞரின் இந்தச் சொற்களைக் கேட்டதும் மனம் திடுக்கிடுகிறதல்லவா?

 

 

ஒரு மனைவியை வைத்துக் கொண்டே சம்சார சாகரத்தில் படும் பாடு போதாதா, மூன்று மனைவிகளா. அடடா..

மனம் பரிதாபப்பட அந்த மூன்று மனைவிகள் யார் என்ற கேள்வியும் உடன் எழுகிறது.

 

 

கவிஞர் உடனே பதிலைச் சொல்கிறார். அதைக்  கேட்டு நமக்குச் சிரிப்பு தான் வருகிறது.

ஏனெனில் நம் ஒவ்வொருவருக்குமே இந்த மூன்று மனைவிகள் உண்டு.

 

அதிலும் இந்த மூன்றாவது மனைவி என்றுமே பிரியாதவள்.

99.9 சதவிகிதம் பேர்களை விட்டு அவள் பிரியவே மாட்டாள் என்பது உண்மை!

சரி விஷயத்திற்கு வருவோம்!

 

 

“பசி

தாகம்

ஆசை

ஆகிய இவர்களே எனது மூன்று மனைவிகள்!

நான் உயிரோடு இருக்கும் வரை இவர்கள்  யாரிடமும் போக மாட்டார்கள்.

 

இந்த மூன்று பேரில் வேறு யார் என்னை விட்டுப் போனாலும் எனது மூன்றாவது மனைவி என்னை விட்டு ஒருபொழுதும் நீங்கவே மாட்டாள்!”

 

 

பாரவியின் அற்புதக் கவிதை இது. கிராதார்ஜுனீயம் என்ற காவியத்தில் வருவது இது!

 

முதலில் எஸ்.பி. நாயரின் ஆங்கில மொழியாக்கத்தைப் படித்து விட்டுப் பின்னர் சம்ஸ்கிருத கவிதையைப் பார்ப்போம்.

 

Hunger, thirst and desire are my three wives who never go to anybody else, as long as I live; among them desire is the most faithful one that never quits me ( S.B.Nair)

 

ஷுத்தூடாஷா: குடும்பின்யோ மயி ஜீவதி நான்யகா: I

தாஸாமாஷா மஹாசாத்வி கதாசினி மாம் ந முஞ்சதி  II

 

சார்தூலவிக்ரீதிதா சந்தத்தில் அமைந்துள்ள இதை விரும்பாவதர்களே இருக்க முடியாது.

 

 

கவிதையைப் படித்தவர்கள் அனைவரும் பாரவியின் கட்சியில் சேர்ந்து விடுவார்களோ!

 

–Subham–