
Compiled by london swaminathan
Date: 13 March 2016
Post No. 2627
Time uploaded in London :– 9-35 AM
(Thanks for the Pictures; they are taken from various sources)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

ஆண்ட்ரூ கார்னிஜி (Andrew Carnegie) என்ற செல்வந்தர் வீட்டுக்கு ஒரு சோஷலிசப் பிரமுகர் (Socialist leader) வந்தார். வந்தவர் சாப்பிட்டுவிட்டுப் போகக்கூடாதோ! நீண்ட சொற் பொழிவாற்றினார். ஒரே மனிதனிடம் பணம் குவிந்திருப்பது – அக்கிரமம், அநியாயம். செல்வத்தை எல்லோருக்கும் பகிர்வதே சமத்துவ சமுதாயம்” – என்று பேசிக்கொண்டே இருந்தார்.
பணக்காரப் பிரமுகர் தனது காரியதரிசியை (secretary) அழைத்து, குத்து மதிப்பாக என் சொத்து-சுகங்களின் மதிப்பை விரைவில் கணக்கிட்டு வாருங்கள் என்றார். அதே நேரத்தில், மேஜை மீதிருந்த உபகரனங்கள், நூல்களை எடுத்து நாட்டின் ஜனத் தொகை எவ்வளவு என்றும் கணக்கிட்டார்.
காரியதரிசி வந்து, அவருடைய சொத்தின் மதிப்பைக் கொடுத்தவுடனே, அதை நாட்டின் ஜனத்தொகையால் வகுத்துப் பார்த்ததில் ஒரு ஆளுக்கு 16 செண்ட் (16 cents) என்று தெரிந்தது.
உடனே காரியதரிசியை அழைத்து, “வந்திருந்த கனவானிடம் 16 செண்ட்டுகளைக் கொடுத்து, என் சொத்தில் அவருக்குச் சேர வேண்டிய பங்கு அது” – என்று சொல்லு என்றார்! தமிழ் மொழியாக்கம்-லண்டன் சுவாமிநாதன்.
Xxx

திருடர்களின் தெய்வம் புதன்/மெர்குரி
ரோமானியர் கடவுள்களின் குழுவில் ‘மெர்குரி (Mercury)’ எனப்படும் ‘புதன்’ தான் திருடர்களுக்குத் தெய்வம். அதே கடவுள்தான், வியாபாரிகளுக்கும், வணிகத் துறைக்கும், பேச்சாளர்களுக்கும் தெய்வம். இதற்கு அவர்கள் ‘வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பது போல’ அழகாக ஒரு காரணத்தையும் சொல்லுவார்கள்.
வியாபாரமும் ஒரு வகைத் திருட்டு என்றும், மேடைப்பேச்சும் ஏமாற்று வித்தை என்றும் சொல்லி அதனால்தான், திருடர்கள், பேச்சாளர்கள்,வணிகர்கள் ஆகிய அனைவரும் ஒரே தெய்வத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன ரென்றும் கூறுவர்.
பழங்கால ரோமானிய சாம்ராஜ்யத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் தேதி அவர்கள் ஒரு கூட்டம் போட்டு, மெர்குரியின் கோவிலுக்கு ஊர்வலம் போவார்கள். அதையும் ரோமானியர்கள் கிண்டல்/நக்கல்/பகடி செய்வார்கள். முந்தைய ஆண்டு அவர்கள் சொல்லிய பொய்களுக்கும், செய்த மோசடிகளுக்கும் மன்னிப்புக் கேட்கவே இந்த வழிபாடு என்பர்.தமிழ் மொழியாக்கம்- லண்டன் சுவாமிநாதன்
(ரோமானியர்கள், நம்ம ஊரை வந்து பார்க்கட்டும். இது கிண்டல் அல்ல; முழு உண்மை என்பதை அறிவர்!!)
Xxx
You must be logged in to post a comment.