‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’- ஞான சம்பந்தர் உறுதி மொழி (Post No.4000)

Thank you for reading our 4000 posts!

‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’- ஞான சம்பந்தர் உறுதி மொழி (Post No.4000)

 

Written by London Swaminathan
Date: 14 June 2017
Time uploaded in London- 11-02 am
Post No. 4000
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

 

நம்முடைய முன்னோர்கள், தெய்வத்தின் மூலமாக, பெரிய நம்பிக்கை உணர்வை ஊட்டினர். வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்பது நாம் அறிந்ததே; கோடீஸ்வர்களுக்கும் மனத்துயரம் உண்டு; பயம் உண்டு; உடல் உபாதைகளும் உண்டு; சாலையில் வசிக்கும் ஏழைகளுக்கும் இன்பம் உண்டு. எல்லோரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று உறுதிபடக் கூறுகிறார் திருஞான சம்பந்தர். இதை அவர் சொன்னபோது அவருக்கு 16 வயத்துக்கும் குறைவு. இறைவனின் உரையை தனதுரையாக வழங்கியவர் சம்பந்தர். ஆகையால்தான் அதை நாம் வேத வாக்கியம் என்கிறோம்; தமிழ் மறை என்கிறோம்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
 

 

சமயச் சொற்பொழிவாற்றுவோர் எல்லோரும் “லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து” என்னும் ஸ்லோகத்தைச் சொல்லி முடிப்பர். நல்ல மழை பெய்யட்டும்; நாடு செழிக்கட்டும்;

Thank you for supporting my two blogs

உயிரினங்கள் எல்லாம் சுகமாக வாழட்டும்; அரசர்கள் நன்முறையில் ஆட்சி செய்யட்டும்; உலகம் முழுதும் — மக்கள் யாவரும் – வாழ்க வளமுடன்! – என்று சொல்லி முடிப்பர். என்ன அருமையான சிந்தனை.

 

 

உலகில் காக்கை, குருவி, பசு, நாய் போன்ற ஏனைய உயிரினங்களுக்கும் சேர்ந்து பிரார்த்தனை செய்வர் இந்துக்கள்!

மறையவர் வாழி வேத மனுநெறி வாழி நன்னூல்

முறைசெயும் அரசர் திங்கள் மும்மழை வாழி மெய்மை

இறையவனிராமன்   வாழி இக்கதை கேட்போர் வாழி

அறைபுகழ்ச் சடையன் வாழி அரும்புகழ் ராமன் வாழி

–யுத்தகாண்டம், விடைகொடுத்த வாழ்த்து

 

இந்து மதம் விஞ்ஞான முறையில் அமைந்த மதம்; பாம்புகளும், வாழ்ந்தால்தான் எலிகள் குறையும்; அறுவடை பெருகும் என்ற அறிவியல் உண்மை அவர்களுக்குத் தெரியும் ஆதலால் அதற்கு நாக பூஜையும் செய்வர்; அதையும் தினமும் வாழ்த்துவர்.

கம்பன் ஆறு காண்டங்களிலும் இக்கருத்தைப் பல முறை பாடியிருப்பதால் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

இதற்கு முன்னரே சம்பந்தர் (வாழ்க அந்தணர்

…), அதற்கும் முன்னரே இளங்கோ (சில ப்பதிகாரம்), ஓரம் போகியார் (ஐங்குறு நூறு) ஆகியோர் இவ்வாறு பாடியுள்ளனர்.

 

இதைத்தான் கம்பனும் சொல்லி வைத்தான்; இது பேரறிஞர் வையாபுரிப்பிள்ளை, கம்ப ராமாயண ஏட்டுப் பிரதிகளில் இருக்கிது; ஆனால் அச்சுப்பதிப்பில் இல்லை என்று காட்டிய பாடல் (காண்க- தமிழ் சுடர் மணிகள்)

Thank you all for your four million hits!

தொல்காப்பியர் அவரவர் குலதெய்வம் காப்பாற்றும் வாழ்த்து ஒன்றைத் தொல்காப்பிய பொருளாதிகாரத்தில் பாடுவார்:

 

‘வழிபடு தெய்வம் நின் புறங்காப்பப்
பழி தீர் செல்வமொடு வழி வழி சிறந்து,
பொலிமின்’ என்னும் புறநிலை வாழ்த்தே;
கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ

-1367, பொருள் அதிகாரம்

 

“வழிபடும் தெய்வம் உன்னைக்  காப்பாற்றட்டும்;  நிறைய செல்வத்துடன் இன்பமாக வாழ்வாயாக! – என்பது இதன் பொருள்.

 

‘ஆருயிர்கட்கெலாம் நான் அன்பு செயல் வேண்டும்’ என்பது வள்ளலாரின் வேண்டு கோள்.

 

“நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”- என்பது திருமூலரின் ஆசை.

 

‘இன்பம் இடயறாது ஈண்டும்’ (குறள் 369)

‘மன்னுயிர்க்கெல்லாம் இனிது’ (குறள் 68) என்பது வள்ளுவன் வாழ்த்து. எல்லா உயிர்களும் என்பது இந்து சிந்தனை; வேறு எங்கும் காண முடியாது.

 

“இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும் ஒன்றென்று கொண்டால்” என்பது பாரதியின் உறுதி.

 

“இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை”  என்பது அப்பர் பெருமான் அடித்துக் கூறும் உண்மை.

 

இப்படி எங்கு நோக்கினும் “எல்லோரும் வாழ்க, இனிதாக வாழ்க” என்று தினமும் பிரார்த்தனை செய்கிறோம்.

 

 

உங்கள் ஆதரவினால்  4000 கட்டுரைகளை இந்த பிளாக்குகளில் ஏற்ற முடிந்தது! அனைவருக்கும் நன்றி.

எல்லோரும் வாழ்க; இனிதே வாழ்க!

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக! நன்றி.

 

–Subham–