
Post No.7876
Date uploaded in London – 24 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
தள தள என்று மின்னும் உடம்பு. இப்போதுதான் கல்யாணம் ஆன மாதிரி முகத்தில் ஒரு ஜொலிப்பு. இதைப் பார்த்தவுடன் காதல் ஜோடிக்கு கொழுப்பு! புதியவளான ஒரு பரத்தையும் , அவளுடன் வந்த வெற்றுவேட்டு காமுகனும் கண்ணகி – கோவலன் ஜோடி மன்மத – ரதி ரூபத்தில் நிற்பதைக் கண்டு நக்கல் தொனியில், கிண்டல் பாணியில், கேலி செய்யும் தொனியில், கவுந்தி அடிகள் என்ற சமண மத பெண்துறவியைப் பார்த்து அம்மையாரே உங்கள் கூட நிற்கிறார்களே ஒரு அழகு சுந்தரியும் உலக மஹா ஆண் அழகனும் ; அவர்கள் யாரோ? என்று வினவினர். உண்மையில் கவுந்தி அடிகளின் அருகில் நின்றது பணக்கார குடும்பத்தில் பிறந்த கண்ணகியும் கோவலனும் ஆகும். பூம்புகார் நகரிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் !

உலகையே ஒரு குடும்பமாகப் பார்ப்பது பாரத நாட்டுத் துறவிகளின் பிறவிக்குணம். ஆகையால் அந்த அர்த்தத்தில் சமண மத பெண் துறவி கவுந்தி அடிகளாரும் இவர்கள் என் குழந்தைகள் என்று பதில் கொடுத்தார். எதிரே நின்ற அந்த காதல் ஜோடிக்கு எக் காளச் சிரிப்பு பொத்துக் கொண்டுவந்தது.
அம்மையாரே, ஒரே குடும்பத்தில் பிறந்த இருவர் கணவன் மனைவி ஆனதை இப்பத்தான் கேக்கறோம் ; இப்பத்தான் பாக்கறோம் ; ஹா, ஹ்ஹா , ஹா, ஹா … என்று வயிறு புடைக்கச் சிரித்தனர் இதைக்கேட்டவுடன் கண்ணகி காதுகளைப் பொத்திக்கொண்டு, நடு நடுங்கி கணவன் பக்கம் சென்றாள் .
;
அம்மையாருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. உடனே,
“பிடி, சாபம் ! நீங்கள் இருவரும் இந்தக் காட்டில் நரியாய் போகக்கடவது”–
என்று சபித்தார்
உடனே அந்த இருவரும்
என்று ஊளை இட்டுக்கொண்டு நரியாக மாறி ஓடினர்.
கண்ணகியோ உலக மஹா உத்தமி. தென்னாட்டு அருந்ததி என்று இளங்கோ புகழும் கற்புக்கரசி. பேரழகி. மாதவியுடன் வாழப்போய் , திரும்பி வந்த கணவனுக்கும் வாழ்வளித்த கருணைக் கடல். அவளுக்கு கணவன்- மனைவி வாழ்வு எவ்வளவு முக்கியம் என்று தெரியும். ஆகவே கருணை கொப்புளிக்க கவுந்தி அதிகளிடம் மன்றாடினார்.
இவர்களுக்கு சாப விமோசனம் கொடுங்கள் என்று.
இந்துக்கள் சத்தியத்தை வழிபடுபவர்கள். ஆகையால் ஒரு சொல்லைச் சொல்லிவிட்டால் அதை மாற்ற மாட்டார்கள். கடவுளும் கூட சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர். அதே கொள்கையை இளங்கோ அடிகள், கவுந்தி விஷயத்திலும் காட்டுகிறார்.
சாபத்தை கடவுளே வந்தாலும் திரும்பப்பெற முடியாது. ஆனால் சிறிது காலத்துக்குப் பின்னர் மாற்றலாம். ஆகையால் கண்ணகி கெஞ்சியதால் அவ்விரு தம்பதிகளும் ஓராண்டுக்குப் பின்னர் மனித உரு எய்துவர் என்று சாப விமோசனம் கொடுத்தார். இதன் பின்னர் நரிகள் காட்டுக்குள் ஓடின. கோவலன் கண்ணகி , கவுந்தி அம்மையார் மூவரும் அறம் மிகு உறையூருக்குள் நுழைந்தனர்.
இதோ இந்த சம்பவத்தை இளங்கோ அடிகள் வருணிக்கும் அழகைப் பாருங்கள்—
“வம்பப் பரத்தை வருமொழியாளனோடு
கொங்கு அலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர்
காமனும்தேவியும் போலும் ஈங்கு இவர்
ஆர் எனக் கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே
………………….. ஆர் என வினவ
மக்கள் காணீர் , மனித யாக்கையர்;
பக்கம் நீங்குமின்; பரிபுலம்பினர் என
உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
காட்டுவதும் உண்டோ கற்றறிந்தீர் என
தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
காதலன் முன்னர் கண்ணகி நடுங்க
எள்ளுநர் போலும் இவர் எம் பூங்கோதையை
முள் உடைக் காட்டின் முது நரி ஆக எனக்
கவுந்தி இட்ட தவம் தரு சாபம்
கட்டியது ஆதலின் பட்டதை அறியார்
குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு
………………….
நாடு காண் காதை, புகார்க்கண்டம், சிலப்பதிகாரம்
குறுநரி நெடுங்குரல் கூவிளி = ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

tags – சிலப்பதிகாரம், நரிக்கதை
வாழ்க இளங்கோ! வளர்க தமிழ்!!