
WRITTEN BY KATTUKKUTY
Post No. 8869
Date uploaded in London – – 29 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவீன ஞான மொழிகள் – 6

ஹாலிவுட் படங்களில் மது அருந்தும்போது எச்சரிக்கை வாசகங்கள் போடுவதில்லை ……….ஏன்???
பாரின் சரக்கு உடம்புக்கு ஒண்ணும் செய்யாது என்பதினால்!!!.,
xxx
நாவல் எத்தனை பக்கமாக இருந்தாலும் நமது தூக்கம் எத்தனாவது பக்கத்தில் இருக்கிறது என்று கண்டு பிடிப்பதில் தான் சுவாரஸ்யமே இருக்கிறது!!!!
xxx
முன்பெல்லாம் வெளியே கிளம்பும்போது சகுனம் பார்ப்பார்கள்……
இப்போது “சார்ஜ்” புல்லா இருக்கான்னு பார்கிறார்கள்………
xxx
கோடி ரூபாய் கொடுத்து வீடு கட்டினாலும் போனுக்கு டவர் இல்லையென்றால் வெளியேதான் வரவேண்டும்.
xxx
தோசைக்கல் உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்…..
வெளியே இருந்தா சாதா ஹோட்டல்……..
xxx
வாக்கிங் walking போறது எளிது தான்,
ஆனா வாக்கிங் போக எந்திரிக்கறதுதான் கஷ்டமானது!!!!
xxxx
உலகத்திலேயே ஸ்பீடு பிரேக் ஹம்ப் ஓரத்திலே ஒரு பாதையை
உண்டாக்கி அதுல வண்டி ஓட்டற டெக்னிக் நம்மாளுங்களைத்
தவிர வேறு யாருக்கும் வராது !!!!
xxxx
ப்யூட்டி பார்லர்ல beauty parlor போன மறுநாளே “ஐஸ்வர்ய ராய்” போல பீல்
பண்ணுவங்க பொண்ணுங்க !!!
ஜிம்முக்கு போன அன்னிக்கே ஆர்னால்டு போல “ஸ்டேடஸ்”
போடுவானுங்க நம்ம பசங்க………
xxxx
ஆபீஸ் போற அன்னிக்கெல்லாம் 9 மணி வரை தூக்கம் வரும்
சண்டே அன்னிக்கு மட்டும் 7 மணிக்கு மேல வராது…
xxxx
சில காயங்கள் மருந்தால் குணமாகும்
சில காயங்கள் மறந்தால் குணமாகும்
xxxx
கார் இருந்தால் ஆடம்பரமாக வாழலாம்!!!
சைக்கிள் இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்!!!
xxxx
மனிதனுக்கு பிரச்சினை என்றால் கடவுளுக்கு அர்ச்சனை!!!
xxxx
வறுமை வந்தால் வாடக் கூடாது, வசதி வந்தால் ஆடக் கூடாது!!!
xxxx

வீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை…..
xxxx
தவறான பாதையில் வேகமாக செல்வதை விட சரியான பாதையில்
மெதுவாகச் செல்வதே மேல்!!!
xxxx
நீ ரசிக்க அழகு என்னிடம் இல்லை, ஆனால்
நீ வசிக்க என்னிடத்தில் இதயம் இருக்கிறது!!!
xxxx
மனிதனுக்கு A B C D தெரியும், ஆனால் QUEUE வில் போகத்தெரியாது……..
எறும்புக்கு A B C D தெரியாது, ஆனால் QUEUE வில்
போகத் தெரியும் !!!
xxx
உண்மை எப்போதும் சுருக்கமாக பேசப்படுகிறது.
பொய் எப்போதும் விரிவாக பேசப்படுகிறது………
xxxx
கறுப்பு மனிதனின் ரத்தம் சிவப்பு தான்…..
சிவப்பு மனிதனின் நிழலும் கறுப்பு தான்…….
xxx
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை, மனித எண்ணங்களில்
உள்ளது வாழ்க்கை!!!!
xxx
தேவைக்காக கடன் வாங்கு, கிடைக்கிறதே என்பதற்காக
வாங்காதே!!!
xxx
கடினமாக உழைத்தவர்கள் முன்னேறவில்லை,
கவனமாக உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்!!!
xxx
வியர்வைத் துளிகள் உப்பாக இருக்கலாம், ஆனால்
அவை வாழ்க்கையை இனிப்பாக மாற்றும்!!!
xxxx
செலவு போக மீதியைச் சேமிக்காதே
சேமிப்பு போக மீதியைச் செலவு செய்!!!
xxx
கடனாக இருந்தாலும் சரி, அன்பாக இருந்தாலும் சரி,
திருப்பி செலுத்தினால் தான் மதிப்பு
xxx
உன்னை நீ செதுக்கிக் கொண்டே இரு, வெற்றி பெற்றால் சிலை,
தோல்வி அடைந்தால் சிற்பி !!!
—subham—
tags – நவீனஞானமொழிகள் – 6
