பழைய பத்திரிகை சம்பவங்கள் – புதிய நினைவுகள் ! (Post No.9238)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9238

Date uploaded in London – –7 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பழைய பத்திரிகை சம்பவங்கள் – புதிய நினைவுகள் ! (Post No.9238)

பழைய மஞ்சரி மாத (1957) இதழ்களில் வந்த விஷயங்கள் இங்கே  உள்ளன.

‘தன்னைத் திருத்திக் கொண்டால் உலகம் திருந்தும் என்கிறது’ ஒரு பழமொழி. திண்ணையில் உட்கார்ந்துகொண்டு அரசாங்கத்தைக் குறைகூறுவோர் தன்னைப் பற்றி முதலில் எடைபோடவேண்டும் .

XXXXXX

இந்தத் துணுக்கு தர்ம புத்திரன் என்று அழைக்கப்படும் யுதிஷ்டிரனுக்கும் பொறாமையே உருவாக அவதரித்த துரியோதனனுக்கும் இடையே நடந்த போட்டியை நினைவுபடுத்தும். உலகிலேயே மிக நல்லவன் ஒருவனையும், உலகிலேயே மிகவும் கெட்டவன்    ஒருவனையும் கண்டு பிடிக்க கிருஷ்ண பரமாத்தமா உத்தரவிட்டார். இருவரும் திரும்பி வந்தனர்

துரியோதனன் சொன்னான் – உலகில்  ஒரு நல்ல பயல் இல்லை. எல்லோரும் அயோக்கியர்கள் என்று. யுதிஷ்டிரன் சொன்னான்- கிருஷ்ணா, ஒரு கெட்டவனையும் காணவில்லையே. எல்லோரிடமும் நற்குணங்களே மிகுதியாக உள . நான் எந்த கெட்ட மனிதனையும் காணவில்லையே என்று. மனம்போல மாமாங்கல்யம் .

தன்  குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்பிற்பின்

என்  குற்றமாகும் இறைக்கு – திருக்குறள் 436

வெள்ளத்   தனைய மலர் நீட்டம் . மாந்தர்தம் உள்ளத்   தனையது உயர்வு (595) என்று வள்ளுவன் சும்மாவா சொன்னான்.

XXXXXXXXXXXXX

துக்ளக் சோ-வின் ரேடியோ அண்ணா ஜோக் நினைவுக்கு வருகிறது !

ரேடியோ அண்ணா கதை சொன்னார் ஆம பியாவுக்கு (ராமப்ரியா)

ஓயு ஊருல ஓயு காக்கா இருந்தது. அது பாட்டிக்கிட்ட போய் நின்னது. அவ அந்தப் பக்கம் திரும்பினபோது ஒரு வதையை தூக்கிட்டு பறந்து போச்சு . அப்ப  அந்தப்பக்கமா ஒரு நயி வந்தது.

குழந்தை ராமப்ரியா சொன்னாள் —

தாத்தா குழந்தை மாதிரி தத்துப்பித்து என்று உளறாதே ; ஒழுங்கா கதை சொல்லு.

ரேடியோ அண்ணா திடுக்கிட்டுப் போனார்!!

xxx

xxx

xxx

tags – பத்திரிகை சம்பவங்கள் , நினைவுகள்,