
Written by London swaminathan
Date: 10 APRIL 2017
Time uploaded in London:- 22-12
Post No. 3806
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
தண்ணீரைப் போற்றும் பழமொழிகளை முன்னொரு கட்டுரையில் தந்தேன். தண்ணீர் பற்றிய உலகின் பழமையான பாடல் ரிக் வேதத்தில் உள்ளது. ரிக் வேதம் சுமார் 6000 ஆண்டுப் பழமையானது என்று ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் கி.மு.1200 க்கு மேல்– அதற்கும் மேல் 5000 ஆண்டு வரை — பழமையுடையதாக இருக்கலாம் என்று மாக்ஸ் முல்லரும் கூறினர். அத்தகைய வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் ஒன்பதாவது பாடல் ஆபஸ் (தண்ணீர்) பற்றியது. அதைப் பாடியவர் சிந்துத்வீப மகரிஷி. அவர் அம்பரீசன் என்ற மன்னரின் மகன். இவருடைய பெயரிலிருந்து இவர் சிந்து சமவெளி நாகரீகப் பகுதியில் வசித்தவர் என்று தெரிகிறது. இதை பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லுவர்.
நீருக்கு மருத்துவ குணம் உண்டு என்பதை வேத கால மக்கள் அறிந்திருந்தனர் என்பது இந்த மந்திரத்தின் (கவிதையின்) பொருளைப் பார்த்தாலேயே புரியும்:-
ஆபோஹிஷ்டா மயோ புவஹ
தாந ஊர்ஜே ததாதன
மஹேரணாய சக்ஷஸே
யோவசிவதமோ ரஸஹ
தஸ்யபாஜயதேஹ நஹ
உசதீரிவ மதரஹ
தஸ்மா அரம் கமாம வஹ
சந்நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோரபிஸ்ரவது நஹ
ஈசானாவார்யாணாம் க்ஷயந்தீஸ்சர்ஷனீனாம்
ஆபோ யாசாமி பேஷஜம்
அப்ஸு மே சோமோ அப்ரவீதந்தர்விஸ்வானி பேஷஜா
அக்னிம் ச விஸ்வசம்புவம்

பொருள்:
நீருக்குத் தேவதைகளாக உள்ள நீங்கள் உயர்ந்த ஆரோக்கியத்துக்கு காரணமாக இருக்கிறீர்கள்;
அப்படிப்பட்ட நீங்கள் எங்களுக்கு மகிமை பொருந்தியதும் ரமணீயதுமான ஞானக் கண்ணின் பொருட்டு சக்தியை அளியுங்கள்.
உங்களிடமுள்ள பேரின்ப ரசத்துக்கு, அன்பு சுரக்கும் தாய்மார்களைப் போல, எங்களை உரியராக்குங்கள்;
எந்த ரசத்தை நிலையாக வழங்கும் பொருட்டு நீங்கள் இன்ப வடிவாய் விளங்குகிறீர்களோ, அந்த ரசத்துக்காக உங்களை ஆர்வத்தோடு நாடுகிறோம். வம்சம் விருத்தி அடையட்டும்
ஜல தேவதைகளாகிய நீங்கள் எங்களை ஞானத்தால் புனித மாக்கி அருள்வீராக.
எங்கள் பாதுகாப்புக்கும் குடிப்பதற்கும் அருள் புரி; எங்களுக்குப் பேரானந்தத்தைக் கொடு.
மதிப்புமிக்க பொருட்களையும் மனிதர்களையும் ஆளும் தண்ணீரே
எங்களைக் குணப்படுத்தும் மருந்தாக இரு.
நீரில்தான் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது என்று சோமரசம் சொல்கிறது; அக்னி என்னும் வெப்ப சக்தியும் இருக்கிறது”
xxx

இது ஒரு அற்புதமான மந்திரம். தீட்டு முதலியன ஏற்படும்போது அது விலகி தூய்மை அடையவும் இம் மந்திரத்தைச் சொல்லி தண்ணீர் தெளிப்பர். அந்தணர்கள் தினமும் மும்முறை இம்மந்திரத்தைச் சொல்லி தலையில் தண்ணீரை ப்ரோக்ஷித்துக் கொள்வர் (விரல்களால் தெளித்துக் கொள்வர்)
தண்ணீருடன் மந்திர சக்தியைச் சேர்த்து அதை ஆயுதங்களாகவும், குணப்படுத்தும் மூலிகைகளாகவும், சபிக்கும் சாபங்களாகவும், வரமளிக்கும் காமதேனுவாகவும்பயன்படுத்தும் உத்தியை—வலிமையை– முன்காலத்தில் அறிந்து வைத்திருந்தனர். இப்பொழுது அது வெறும் சடங்குகளுக்கும் தானம் வழங்கவும் (கன்னிகா தான) மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.
–subham–