
Written by London swaminathan
Date: 18 November 2015
POST No. 2339
Time uploaded in London :– 14-47
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
சம்ஸ்கிருதம் அழகான மொழி! அற்புதமான ஒரு மொழி! அதில் பேசப்படாத விஷயங்களே இல்லை. வாக்கிங் ஸ்டிக் (கைத்தடி) பற்றி சரக சம்ஹிதையில் ஸ்லோகம் இருக்கிறது; ஊழல் பற்றி கௌடில்யர் அர்த்தசாஸ்திரத்தில் ஸ்லோகம் இருக்கிறது; காலப் பயணம் பற்றி மஹாபாரதத்தில் ஸ்லோகம் இருக்கிறது; செண்ட் செய்வது பற்றி வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதாவில் ஸ்லோகம் இருக்கிறது.பல்லாயிரம் பழமொழிகளும், நீதி மொழிகளும் உள்ளன.
சேவல் பற்றியும் புத்தகப் பாதுகாப்பு குறித்தும் சம்ஸ்கிருத தனிப்பாடல் திரட்டு கூறுவதானது:-
யுத்தம் ச ப்ராதருத்தானம் போஜனம் சஹ பந்துபி:
ஸ்த்ரியமாபத்ரதாம் ரக்ஷெச்சது: சிக்ஷதே குக்குடாத்
–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 162/403
சேவற்கோழி கற்பிக்கும் பாடம் நான்கு:
1.யுத்தம்= சண்டை போடுவது எப்படி?
ப்ராதருத்தானம் = அதிகாலையில் எழுந்திருத்தல்
போஜனம் = அனைவருடனும் உண்ணல்
ஸ்த்ரீ ரக்ஷணம் – பெண்களைப் பாதுகாத்தல்

நூல் பாதுகாப்பு
தைலாத் ரக்ஷேத் ஜலாத் ரக்ஷேத் ரக்ஷேத் சிதிலபந்தனாத்
மூர்க்கஹஸ்தே ந தாவ்யமிதம் வததி புஸ்தகம்
தைல – எண்ணெய்
ஜல – தண்ணீர்
சிதில பந்தனாத் – சரியாகத் தொகுத்துக் கட்டாத பக்கங்கள்
மூர்க்க ஹஸ்த தான- படிக்க விருப்பமில்லாத வர்களிடம் அளித்தல்
மேற்கூறிய நான்கிடமிருந்தும் புத்தகங்களைப் பாதுகாக்க வேண்டும்; நீரும், எண்ணையும் நூல்களை நாசம் செய்யுமல்லவா?
(மூடர்களிடம் கொடுத்தால் அவன் பக்கோடா, பஜ்ஜி கட்ட அந்தப் பக்கங்களைப் பயன்படுத்துவான்!!!)
தமிழும் சம்ஸ்கிருதமும் படியுங்கள்! அறிவை வளருங்கள்!!
You must be logged in to post a comment.