
Post No. 8530
Date uploaded in London – 18 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம் பஞ்சாங்கம் !
Kattukutty
பஞ்சாங்கம் நம்வாழ்க்கையின் ஒரு அங்கம்
நமது முன்னோர்கள் தினசரி இதைப் பார்த்துத் தான் தங்கள் அன்றாட வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தினார்கள்.
விதை விதைப்பதிலிருந்து அறுவடை, மற்றும் உழைத்த மாட்டுக்கு
விழா, உழைக்கும் கருவிகளுக்கு விழா என பஞ்சாங்கத்தைப் பார்த்து
பார்த்து வாழ்க்கை வாழ்ந்தனர்.
உயரமாக மரம் வளர மேல்நோக்கு நாள்!
பூமிக்குள்ளே நன்றாக வளர கீழ் நோக்கு நாள்!
கொடி படர படர் நாள்….. எல்லாம் அந்தப் பஞ்சாங்கத்தில்!!!
ஏன் நல்ல நாள் பாரக்கக் கூட ஐயரைத் தேடி ஓட வேண்டாம்
இன்று கரி நாள் சுபம் விலக்கவும்.
இன்று நல்ல நாள் கல்வி ஆரம்பிக்க…….
இதையெல்லாம் விளக்குமாறு திரு.சாமிநாதன் கேட்டுகொண்டதற்கிணங்க
“பஞ்சாங்க ரகசியங்கள்”
என்ற இந்தத் தொடரை 2 நாளைக்கு முன்பு
ஆரம்பித்திருக்கிறேன். இந்த அருமையான சந்தர்ப்பத்தை உங்கள் நணபர்களிடமும்
பகிர்ந்து கொண்டு அவர்களையும் இந்த பிளாக்கில் சேர்த்து
இந்தத் தமிழ் சமுதாயம் பயனடைய வேண்டுகிறேன்.
உங்கள் சந்தேகம் எது வேண்டுமானாலும் கேளுங்கள்.
பதில் கூறுகிறேன். எனக்குத் தெரியாதவற்றை தெரிந்து கொண்டு உங்களுக்குத் தெரிவிக்கிறேன்
நேற்று பஞ்ச அங்கங்களாகிய வாரம், நடசத்திரம், திதி, யோகம்
கரணம் எனபதைப் பற்றி விளக்கினேன்.
நமது சமுதாய சாஸ்திரப்படி ஒரு நாள் என்பது, இன்று காலை சூரியோதயம் முதல் நாளை காலை சூர்யோதயம் வரை உள்ள நாளாகும்.
(முஸ்லீம்களுக்கு ஒரு நாள் என்பது சூரியாஸ்தமனத்திலிருந்து
மறு நாள் சூரிய அஸ்தமனம் வரை ஆகும்)
உதாரணமாக 15-08-2020 அன்று காலை 4.30க்கு ஒரு ஆண் குழந்தை பிறப்பதாக வைத்துக் கொள்வோம்
ஜாதகம் எழுதும் ஜோதிடர்
‘உயர்திரு ……..அவர்களுக்கும் திருமதி ……….அவர்களுக்கும்
14-08-2020 அன்று இரவு 4.30க்கு ஆண்குழந்தை
சுப ஜனனம்’ என்றே எழுதுவார், அந்தக்காலத்தில்.

தற்சமயம் 15-08-2020 அன்று காலை 4.30 க்கு ஆண்
குழந்தை சுப ஜனனம் என்று எழுதுவார், இந்தக்காலத்தில்.
உத்தராயணம் – தை மாதம் முதல் ஆனி முடிய உத்தராயணம்
என்று சொல்கிறோம்.
சூரியன் வடக்கு நோக்கிப் போகிறான்.
இது தேவர்களுக்கு பகல் காலம். அன்பர்களுக்கு ஒரு குறிப்பு
காலையில் சூரியன் தென்கிழக்கே உதயமாவதைக் காணலாம்
நமக்கும் வெய்யில் கொளுத்துகிறது.
தட்சிணாயணம் – ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய
பஞ்சங்கத்தில் வரும் “ஆடிப் பட்டம் தேடிவிதை”- மழை காலம்,
குளிர் காலம்……….பயிர் செய்ய, அறுவடைக்குத் தயாராகிறோம்.
சூரியன் தெற்கு நோக்கி பயணிக்கிறான்.
இது தேவர்களுக்கு
இரவுக்காலமாகும். அன்பர்களுக்கு ஒரு குறிப்பு சூரியன் வடகிழக்கே உதயமாவதைக் காணலாம்.
அயனம் என்ற சொல்லுக்கு சலனம் அல்லது இடம் விட்டு இடம் பெயர்தல் எனப் பொருள்
இந்த 12 மாதங்களை ஆறு பருவங்களாக பிரித்தனர் தமிழர்.
சித்திரை, வைகாசி – இளவேனில்
ஆனி, ஆடி – முதுவேனில்
ஆவணி, புரட்டாசி -கார்காலம்
ஐப்பசி, கார்திகை -கூதிர்காலம்
மார்கழி, தை – முன்பனிக்காலம்
மாசி, பங்குனி – பின்பனிக்காலம்
அகஸ்-பகல் நேரம். இதிலிருந்து இரவு நேரம் கண்டு பிடித்து
மாந்தி நேரம் கண்டு பிடிக்க உபயோகப்படுகிறது.
அவமா அல்லது – மூன்று திதியாவது, மூன்று நட்சத்திரமாவது
அவமாகம்- மூன்று யோகமாவது ஒரே நாளில் வருவது.
உதாரணம்-சார்வரி வருடம் பாம்பு பஞ்சாங்கம் ஆனி மாதம்
12தேதி வெள்ளிக்கிழமை மூன்று திதி ஒரே நாளில் வருகிறது
திரு தினஸ் ப்ருக்- ஒரு நட்சத்திரமாவது ஒரு திதியாவது,
ஒரு யோகமாவது மூன்று நாளில் வருவது.
உதாரணம்-சார்வரி வருடம் பாம்பு பஞ்சாங்கம் ஆனிமாதம்
1-ம் தேதி தேதியும், ஆனி மாதம் 2 ம்தேதியும் வைகாசி 32ம்
தேதியிலும் தசமி திதி வருவது கவனிக்கவும்.
தியாஜ்ஜியம்- ஒவ்வொரு நாளும் விலக்கப்பட்ட நேரம்
3.3/4 நழிகை ஆகும். இது லக்கின தியாஜ்ஜியம்,நட்சத்திர
தியாஜ்ஜியம் என இரு வகைப்படும்
அபசவ்யம் – இடது புறம்
நேத்திரம்- ஒரு கண் நாள்- ஞாயிறு, திங்கள்
இரு கண் நாள்-புதன்,வியாழன் வெள்ளி
மேற்கண்ட நாடகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம்
குருட்டு நாள்- செவ்வாய், சனி எதையும் செய்ய கூடாது.
ஜீவன்-சூரியன் இருக்கும் நட்சத்திரத்திறகு முன்/ பின் உள்ள
நட்சத்திரங்கள் ஜீவன் இல்லாத நட்சத்திரங்கள்
சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 3,4,5.6.7.8.உள்ள
நட்சத்திரங்கள்,1/2 ஜீவன். மத்திமம்- நல்லவை
சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 9-13 ஒரு ஜீவன் உள்ளவை.
மிக நல்லவை.

வைநாசிகம்-அல்லது வைநாசிக பாதம்-ஜன்ம நட்சத்திரத்திற்கு
88 வது பாதம் அதாவது 22 வது நட்சத்திரம். இதில் கண்டிப்பாக
திருமணம் செய்யக் கூடாது.
அபிஜித்- உத்ராட நட்சத்திரத்தின் முடிவில் உள்ள 15 நாழிகையும்
திருவோண நட்சத்திரத்தின் முதல் நான்கு நாழிகையும் சேர்ந்தது
இந்த அபிஜித் என்ற நல்ல நேரம்.
தற்சமயம் இந்த நாழிகை வைத்து பெருக்கிக் கொண்டிருப்பதில்லை
பகல் 11.30 முதல் 12.30 முடிய அபிஜித் வேளை என குறிப்பிட்டு
விடுகிறார்கள்.
இது எதற்காக என்றால் எந்த ஒரு முக்கிய நல்ல காரியம்,
அன்று கரிநாள், செவ்வாய் கிழமை, சனிக்கிழமை ஆகாமா, திருதினஸ்
ப்ருக் என்று பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறது என்றாலும்
அந்த நல்ல கார்யத்தை நீங்கள் செய்யலாம் இந்த அபிஜித்
வேளையில் !!!
விஞ்ஞானிகள் சொல்கிறார்கள், இப்படி ஒரு நட்சத்திரம்
இருந்தது. காலப்போக்கில் அழிந்து விட்டது. கவனிக்க
ஒரு காலத்தில் 28 நட்சத்திரம் இருந்தது. தற்சமயம் 27……..
அர்த்தோதயம்-தை மாசி மாதங்களில் அமாவாசை நாள்
ஞாயிற்றுக்கிழமை வந்து உதய காலமும் வந்து வியதீ பாதமும்
திருவோணமும் கூடினால் அர்த்தோதயம் !!!!
மகோதயம்- இதே மேற்கண்ட காம்பினேஷன்
திங்கள் கிழமை வந்தால் மகோதயம் !!!
இந்த இரண்டு நாட்களும் மிக மிக முக்கிய நாள்
60 வருடத்திற்கு ஒரு முறையே வரும். இதற்காக முனிவர்கள்,பெரியோர்கள் காத்துக் கொண்டிருப்பார்களாம்…
1000 சமுத்திர ஸ்னானம் கிரகணத்தன்று செய்த புண்ணிய பலனாம்.
நன்றி வணக்கம்.
***
தொடரும்
tags – பஞ்சாங்கம்-2, ரகசியங்கள்-2