
Written by S Nagarajan
Date: 4 March 2016
Post No. 2595
Time uploaded in London :– 8-55 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
நாட்டு நடப்பு
பத்திரிகையில் புல்லுருவிகள்
ச.நாகராஜன்

ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை. இதன் சுதந்திரத்தைக் காக்க அஞ்சாமல் பல கஷ்டங்களை மேற்கொண்டவ்ர்கள் பலர்.
எடுத்துக்காட்டாக ராம்நாத் கோயங்காவைச் சொல்லலாம்.
இந்தியாவில் அநியாயமாக எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டது. ஏராளமான தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் உண்மை நிலை எதையும் வெளியிட முடியாத் நிலை உருவாயிற்று. தணிக்கை முறை அமுலுக்கு வந்தது.
ஆனால் அஞ்சா நெஞ்சர் கோயங்கா கடுமையாக அவசர நிலையை எதிர்த்தார். இந்தியந் எக்ஸ்பிரஸ்,தினமணி உள்ளிட்ட பத்திரிகைகளில் தலையங்கம் தீட்டினால் அது தடை செய்யப்பட்டது. அந்த இடம் முழுவதும் கறுப்பால் நிரப்பப்பட்டது -எதிர்ப்பைத் தெரிவிக்கும் வண்ணம்.
கோயங்காவிற்கு நெருங்கியவர்கள் மற்றும் அரசுக்கு ஆதரவானவர்கள் அவரிடம் ஆலோசனை கூறினர்.
“எதற்காக இந்த எதிர்ப்பு? அந்த அம்மையாரின் ஆட்கள் உங்களிந் வேட்டியை உருவி விட்டு விடுவார்கள்” என்றனர்.
சிரித்தார் கோயங்கா. மற்றவர்கள் திகைத்தனர்.
“நான் எப்படி உருவானவன் தெரியுமா? உடுக்க ஒன்றுமில்லாமல் தெருவில் அலைந்து திரிந்து கிடைத்ததைச் சாப்பிட்டவன். இதெல்லாம் என் கடிந உழைப்புக்கும் நேர்மைக்கும் கிடைத்த பரிசு. எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. வேட்டியை உருவி விட்டால் பழைய நிலை வந்தது என்று சந்தோஷப்படுவேன்” என்றார்.
அனைவரும் அவரது தீரமான வார்த்தைகளைக் கேட்டுத் திகைத்தனர்.
அவசரநிலை காலத்தில் ஒவ்வொரு செய்தியையும் அவரே பார்த்துப் பார்த்து வெளியிட்டார். அஞ்சவில்லை.
இப்படிப்பட்ட பத்திரிகையாளர்களாளும், தேச பக்தர்களாலும், தேசீயத் தலைவர்களாலும் அவசர நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.
தேசம் பிழைத்தது.

தேர்தல் வந்தது. இந்திரா காந்தி அவமானகரமாகத் தோற்றார். தன் தவறை உணர்ந்ததாக அவர் கூறினார்.
அதற்குக் காரணங்களுள் ஒன்று: இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ப்த்திரிகைகள் என்பதை வரலாறு இன்று வரை கூறுகிறது. நாளையும் கூறும்.
ஆனால் இன்றைய நிலை?
இந்தியாவிற்கு எதிராக நினைத்ததை எழுதும் சூழ்நிலை. தேசத் துரோகிகளுக்குத் துணை போவது, தேசத்தின் ந்லனுக்கு உகந்தவற்றைத் தெரிவிக்காமல் மறைப்பது, முஸ்லீம்களைத் திருப்திப் படுத்த செய்திகளை மிகைப்படுத்தல், ஹிந்துக்களை கேவலப்படுத்த காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் அவர்களின் பாதிப்புகளை வெளியிடாமல் இருத்தல், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய நிலைக்கு எதிராக பகிரங்கமாக ஆதரவு அளித்தல், இத்யாதி இத்யாதி!
இவற்றையெல்லாம் பணத்திற்காகவும் அல்லது ஒரு விஸ்கி பாட்டிலுக்காகவும் செய்வது அழகா? இந்தப் புல்லுருவிகளை மக்கள் இனம் காண்பது ஒரு புறம் இருக்கட்டும்; அரசும் உச்ச நீதி மன்றமும் ஏதாவது செய்ய வேண்டாமா?
கருத்துச் சுதந்திரம் என்பது பேணி வள்ர்க்கும் தேச சுதந்திரத்தை பலி கொடுக்க பயன்படுத்தக் கூடாது.
இப்படிச் செய்பவர்களை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே தாமாகவே முன் வந்து வழக்கைப் பதிவு செய்து உரிய தண்டனைய அவர்கள் குற்றம் நிரூபிக்கும் பட்சத்தில் விதிக்கலாமே!
நாங்கள் தான் பத்திரிகை மற்றும் டிவி சானல்கள் பற்றி குறைகள் இருந்தால் அதைத் தெரிவிக்க வடிகால் அமைத்திருக்கிறோமே என்பது போதாது.
உடனடி நடவடிக்கையை அரசும் போலீசாரும், நீதி மன்றமும் உடனே எடுக்க வேண்டும்.
இதுவே உண்மையான ஜனநாயகவாதியாகவும் தேச சுதந்திரத்தில் அக்கறையுமுள்ள் ஒவ்வொரு இந்தியனின் எண்ணமாக இருக்கிறது.
நண்பர்கள் அனைவரும் ஃபேஸ் புக் உள்ளிட்ட பதிவுகளில் வெகு ஜன எழுச்சியாக இந்த பத்திரிகைகள், டி வி சானல்கள் பற்றி நிறைய உண்மையான செய்திகளைப் பரப்பி விட்டால் இவர்களின் முகத்திரை கிழியும்.
ஆனால் இவர்களைப் பற்றிய உண்மையான செய்திகளை ஆதாரங்களுடன் தருதல் மிக முக்கியமானது. செய்வோம்; சுதந்திரம் காப்போம்! தேச துரோகிகளுக்கு இங்கு இடமில்லை என்பதைத் தெளிவு படுத்துவோம்.
அடுத்த கட்டுரையில் மகாத்மா காந்திஜி பத்திரிகையாளர்களை கலவரங்கள் நடந்த சமயத்தில் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்போம்.
மாமனிதர் கோயங்காவின் நினைவுக்கு அஞ்சலியோடு இந்தக் கட்டுரையை முடிப்போம்
******
You must be logged in to post a comment.