இமயமலை பனிப்பாறைகள் உருகும் அபாயம்! (Post No.7810)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7810

Date uploaded in London – – 11 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில்

எட்டாவது உரை

(8-3-2020 அன்று ஒலிபரப்பானது)

இமயமலை பனிப்பாறைகள் உருகும் அபாயம்!

PICTURES FROM FACEBOOK POSTS BY RADHIKA BALAKRISHNAN

நாளுக்கு நாள் உலகின் வெப்ப நிலை கூடிக் கொண்டே போவதால் இயற்கைச் செல்வம் அழிந்து வருவது கண்கூடு.

பெரும் அரணாக பாரதத்தின் வடக்கே அமையும் இமயமலையும் இதற்கு விதிவிலக்கல்ல.

வெப்பமயமாதலால் இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் கனத்தை இழந்து மெல்லியதாக ஆகி ஐஸை இழந்து வருகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இமயமலையில் உள்ள 128 பனிப்பாறைகளும் நாளுக்கு நாள் உருகி தமது பழைய நிலையை இழந்து வருவதால் பெருமளவில் நீர் வளம் பாதிக்கப்படும் என்கிறது ஆய்வறிக்கை.

வெப்பமயமாதலுக்குக் காரணமாக அமையும் வாகன நச்சுப்புகையின் வெளிப்பாடு வளிமண்டலத்தில் கலப்பதைத் தடுப்பது நமது தலையாய கடமையாக அமைகிறது.

அண்டார்டிகாவின் மேற்குப் பகுதி கடற்கரை அருகில் உள்ள மிகப்பெரும் பனிப்பாறையும் பெரிய துளை ஏற்பட்டு உருகும் அபாயம் ஏற்பட்டிருப்பதை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தத் துளை மன்ஹாட்டன் (Manhattan) நகரின் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு அளவு இருப்பதாக அவர்கள் கூறுவது திகைப்பையும் அச்சத்தையும் ஊட்டுகிறது.

இதே போல பல்வேறு கடற்கரைகளும் அழியும் அபாயமும் உருவாகிறது. வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்ந்து கடலோரப் பகுதிகள் அழியும் அபாயத்தை விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கடற்கரையில் உள்ள மண்வளத்தைத் தோண்டி எடுத்து பெரும் கட்டிடங்களை அமைக்க முயல்வதன் மூலமும் கடற்கரைகள் அழிந்து வருகின்றன. அத்துடன் கடற்கரையில் ஒதுங்கும் கடல் ஆமைகளும் இதனால் அழிந்து வருகின்றன.

கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யவும் கரையில் வந்து தங்கவும் இயலாத இந்த நிலையை மாற்றி கடற்கரைகள் காப்பாற்றப் பட்டால் அருகி வரும் கடல் ஆமைகள் இனத்தைக் காத்தவர்கள் ஆவோம்.

மிக நீண்ட கடலோரப் பகுதியைக் கொண்ட நமது நாட்டில் ஆங்காங்கே கடற்கரை ஓரப் பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருந்து மரங்களை வெட்டுவது மண்ணைத் தோண்டி எடுத்துச் செல்வது போன்ற சட்டத்திற்குப் புறம்பான செய்கைகள் இடம் பெறாமல் கண்காணித்து அரசின் நிர்வாகத்திற்கு உதவ முன் வரவேண்டும்; இதனால் இயற்கை வளம் பெரிதும் நல்முறையில் காக்கப்படும்.

Script by S.Nagarajan (ச.நாகராஜன்)

TAGS – இமயமலை, பனிப்பாறைகள்

–SUBHAM —