
WRITTEN BY S NAGARAJAN
Date: 8 May 2016
Post No. 2791
Time uploaded in London :– 5-36 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)
ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்..
சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.
நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 5
ச.நாகராஜன்

ஏகாதசி – சிந்தாமணி என்ற காவேரியில் ஏகாதசியில் ஸ்நானம்.
ஜம்புகேஸ்வரம், மாத்ருபூதம் ரங்கநாதர் இம்முவர்களுடைய வீக்ஷண்யம் இருப்பதால் சிந்தாமணி என்று பெயர் வந்தது. எல்லா ஏகாசதியும் விசேடமே. மார்கழி ஏகாதசி மிகவும் விசேடம். சிதம்பரம் வடமேற்கில் ஏகாதசி விசேடம்
துவாதசி – ஐம்பு தீர்த்தம், ஸ்ரீரங்கம் லட்சுமி ஸந்நிதானத்தில் உள்ள தீர்த்தம்
திரயோதசி – கோகர்ணம் கோடி தீர்த்தம்
சதுர்த்தசி – கோகர்ணம், ஸ்ரீகாளஹஸ்தி, கேதாரம்,காசி, மத்யார்ச்சுனம், திருவையாறு, மாயூரம் ஆகிய தலங்களில் சிவராத்திரி சதுர்த்தசி தவிர மாயூரத்திலும் கேதாரத்திலும் நாக சதுர்த்தசி விசேடம். தீபாவளியோடு கேதார பூஜை முடிவு பெறும்.
திருவையாறு: காவேரி வடகரையில் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இதற்கு தக்ஷிண கைலாஸம் என்று பெயர்.பஞ்சநத க்ஷேத்திரம். தர்மஸம்வர்த்தனி சமேத பஞ்சநாதேசுவரர் ஆலயம். அப்பருக்கு கைலாஸ தரிசனம் கொடுத்த தலம்.இந்திரன், வாலி ஆகியோரும் பூஜித்த தலம்.
மாயூரம்: காவேரி தென்கரையில் ஒரு மைல் தூரத்தில் உள்ள தலம். ஒரு அசுரன் காவேரி ஜலத்தைக் குடிக்க ஆரம்பித்தான். பரமசிவன் அவனை வதம் செய்து, தான் அந்த தீர்த்தத்திலேயே வசித்தார். மயூர நாதர் கோவில் உள்ளது. தேவி மயில் ரூபம் எடுத்து ஈஸ்வரனை பூஜித்த தலம்.இந்திராணியும் இங்கு பூஜித்தாள்.
அமாவாசை, பௌர்ணமி – காளத்தி, மல்லிகார்ஜுனம் (சிவராத்திரி) அமாவாசை, பௌர்ணமி. ஸகலதீர்த்தம், மாயூரம், அர்த்தோதயம். மஹோதயம்.
வாரங்கள் பூஜித்த தலங்கள்
ஞாயிறு: திருநாகேஸ்வரம், ஸ்ரீ வாஞ்சியம், திருத்தானமுடையார் கோயில், சாயாவனம்
திங்கள்: திருக்கடையூர்,(திருக்கடவூர்), சிவபுரம், திருவாலவாய், காசி

செவ்வாய்: வைத்தீசுவரன் கோவில், அத்திப்புலியூர், இலந்துறை
புதன்: வெண்காடு (சந்திர புஷ்கரணி)
வியாழன்: பெருஞ்சேரி, திருக்கொண்டீசுவரம், கச்சி, கழுக்குன்றம்
வெள்ளி: காஞ்சி (வாமதீர்த்தம்)
சனி: திருநள்ளாறு, ஆரூர்
மாதங்களும் பர்வங்களும் பூஜை செய்த இடங்களை ஆகமங்கள் மூலம் அறியலாம்.
மேலே கண்ட குறிப்புகளை ஆழ்ந்து ஊன்றி கவனித்து அவரவர்கள் தங்கள் தங்களுக்குரிய தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.

தலங்கள் பற்றிய அபூர்வ புத்தகங்கள்
தல முறை பற்றி அபூர்வமான புத்தகங்கள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியாகி உள்ளன.
திரு இராமசுவாமிப் பிள்ளை அவர்கள் தலமுறைப் பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் பயனபடுத்தியது போலவே ஸ்ரீ உ.வே.சாவும் தொடர் எண்ணிட்டு தலங்கள், தீர்த்தங்கள், விமானங்கள் ஆகியவற்றின் சிறப்புகளைத் தொகுத்துள்ளார். 8135 என்ற தொடர் எண்ணை இவரது குறிப்புகளில் காணும் போது எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட எத்துணை விஷயங்களை இவர் சேர்த்திருக்கிறார் என்ற பிரமிப்பு ஏற்படுகிறது. ஆனால் அவை என்னவாயின?!! வருங்காலம் மீட்டுத் தருமா?
இது தவிர காசியைப் பற்றிய அபூர்வ விவரங்களை காஞ்சி பரமாசார்யாள் ஆசியுடன் தொகுத்துள்ளவர் திரு ரா.வீழிநாதன். (1987)
இன்னொரு தலங்களைப் பற்றிய குறிப்பிடத் தகுந்த அபூர்வமான புத்தகம் ஸ்ரீகாவேரி ரஹஸ்யம் (1962) என்ற நூலாகும்.காஞ்சி பரமாசார்யாள், தமது தொடர்ச்சியான முயற்சியின் மூலம் பல பக்தர்களிடமும் அரிய தல விஷயங்களைச் சேகரிக்குமாறு ஆணையிட்டார். இந்த அபூர்வமான குறிப்புகள் அனைத்தும் ஓய்வு பெற்ற கல்வி இலாகா அதிகாரியான ஸ்ரீ ஈ.வி. கோபாலையரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர் காவேரி நதியை ஒட்டி உள்ள வடபுற க்ஷேத்திரங்கள், தென்புற க்ஷேத்திரங்கள், காவேரி வளர்த்த மகான்கள், காவேரி ப்ரதக்ஷிண விதி, ஸ்நான முறை, காவேரி பற்றிய இலக்கியக் குறிப்புகள், புராணக் குறிப்புகள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களைத் தொகுத்து காவேரி கலைக் களஞ்சியமாக ஒரு நூலை வெளியிட்டார்.
ஆன்மீக அன்பர்கள் தல விசேடங்களைப் பற்றிய உண்மையான தொன்மக் குறிப்புகளை அறிய வேண்டுமெனில் இது போன்ற புத்தங்களையும் இது பற்றி நன்கு அறிந்த வல்லாரையும் நாட வேண்டும்.

Prime Minister of Japan Shinzo Abe and Indian Prime Minister Narendra Modi performing Ganga Arti at Dhashvmegh Ghat in Varanasi on saturday.Express photo by Vishal Srivastav 12.12.2015
வைக்கோல்போரில் ஊசியைக் கண்டெடுத்தவர்கள் நமது தேடலைச் சுலபமாக்கி விட்டார்கள். அவர்களுக்கு வரும் காலமெல்லாம் நன்றி சொல்லும்!
–Subham–
********
You must be logged in to post a comment.