குக்கூ என்றது கோழி- பெண்களின் மாத விலக்கு பற்றி சுவையான பாடல் (Post 7773)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7773

Date uploaded in London – 2 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குக்கூ என்றது கோழி- பெண்களின் மாத விலக்கு பற்றி சுவையான பாடல் (Post 7773)

குக்கூ என்றது கோழி; அதன் எதிர்

துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம் —

தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.

–அள்ளூர் நன்முல்லை (MISS SUKUMARI)

–குறுந்தொகைப் பாடல் 157

சுகு மாரி என்பது மல்லிகை, முல்லை, பிச் சி பூவகையில் ஒன்று)

பாடலின் பொருள்-

கோழி குக்கூ  என்று கூவியது. அதற்கு நேராக எம் தோளைத் தழுவும் காதலரைப் பிரியச் செய்யும் வாளைப் போன்ற விடியற் காலைப் பொழுது வந்தது. எனது தூய நெஞ்சம் அதனால் அச்சத்தை அடைந்தது

கருத்து

பூப்புக்காலத்தில் (MENSTRUATION)  தலைவனைப் பிரிந்திருக்க அஞ்சிய தலைவி தன் உண்மை நிலையை மறைத்தது .

(இது மாதவிலக்கு (MENSES) பற்றிய இந்து நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் பாடல் )

இதைப் பாடியவர் ஒரு பெண். பொதுவாகப் பெண்கள் மாதவிலக்கு பற்றிப் பகிரங்கமாகப் பேசமாட்டார்கள். பேசினாலும் மகளிற்கிடையே மட்டும் சம்பாஷிப்பார்கள் ; கணவனிடம் நான் வீட்டில் இல்லை; அல்லது ‘சாமி படம், விளக்குக்கு அருகில் இன்று போக முடியாது’ என்று குறிப்பால் உணர்த்துவர். இது மாதவிலக்கு பற்றிய ஒரு அரிதான பாட்டு. நாலே  வரிகளில் 40 விஷயங்களைச் சொல்லிவிடுகிறார்.

“அடடா , இன்னும் மூன்று நாட்களுக்கு கணவனைக் கட்டித் தழுவ முடியாதே” என்று வருத்தப் படுகிறார்.

இப்போதெல்லாம் நாம் என் நெஞ்சு படபடத்தது. ‘திக் திக்’ என்று அடித்தது ; ‘பக் பக்’ என்று சத்தம் கேட்டது என்றெல்லாம் சொல்கிறோம். அக்காலத்தில் மிஸ் சுகுமாரி ,மிஸ் மாலதி அல்லது மிஸ் மல்லிகா — அதாவது திருமதி முல்லை — அழகாக பாடியிருக்கிறார்.  ‘துட்’ என்றது என்று பாடிவிட்டார்.

உ.வே.சாமிநாதைய்யர் இப்பாடல் விமர்சனத்தில் — அதாவது உரையில் இன்னும் பல விஷயங்களைச் செப்புகிறார் .

‘அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்’ – தொல்காப்பியம் 2-442 என்பது விதியாதலின் தலைவி தான் பூப்பெ ய்தியதை வெளிப்படையாகக் கூறாதொழிந்தாள்.

துட்கு – அச்சம்

தலைவனைத் தவிர வேறு  எதுவும் நினையாதாலால் தூய நெஞ்சம் ஆயிற்று.

பூப்புக் காலமாகிய மூன்று நாளும்  தலைவியின் சொற் கேட்கும் அணிமையில்  இருத்தலையன்றி, அளாவளாவுதல் அறநெறியன்று ஆதலின் பூப்பு, தலைவனைத் தோள் தோயாமற் பிரிப்பதாயிற்று.

பூப்புக் காலத்தில் கணவனும் மனைவியும் நெருங்கி வாழ்ந்தால் என்ன ஆகும் என்கிற பழைய உரைப் பாடல்களையும் உ.வே.சாமிநாதைய்யர் எடுத்துக் காட்டுகிறார்.

முன்நா ளுங்கூடி உறையப்படுங் குற்றமென்னோவெனின் பூப்புக்

புறப்பட்ட ஞான்று நின்ற கரு வயிற்றில் அழியும் ; இரண்டாம் நாள்

நின்ற கரு வயிற்றிலே சாம் ; மூன்றாம் நாள் நின்ற கரு குறு வாழ்க்

கைத் தாம் ; வாழினும் திருவின் றாம் ;அதனாற் கூடப்படாதென்பது ;

‘பூப்பு முதன் முந் நாட் புணரார் புணரின் யாப்புறு மரபினையரு மமரரும்

யாத்த கரண மழியுமென்ப’

எனப்  பிறரும் ஓதினராகலான் அமையாதென்பது’ (இறை.43 உரை) -என்பதனால் பூப்பு நாட்களிற் கூட்டமின்மை உணரப்படும்.

இது சாமிநாதையர் எழுதிய உரை

இந்தப் பாடலில் வாள் போல் வைகறை என்று ஒரு வரி வருகிறது. அது பற்றித்  தனியாக எழுதுகிறேன்

என் கருத்து

மாதவிலக்கு நாளில் கணவன்- மனைவி சேர்ந்து படுக்கக்கூடாது. கருவுற்றாலும் அது அழியும் .கர்ப்பம் கலையும் ; தப்பித் தவறி குழந்தை பிறந்தாலும் அது ஆரோக்கியமாக வாழாது என்பது இந்துக்களின் நம்பிக்கை .

மல்லிகை, முல்லை, பித்திகம் (பிச்சி) முதலிய எல்லாப் பூக்களும் தாவரவியல் கணக்குப் படி ஜாஸ்மினியம் (JASMINIUM) தான் . சம்ஸ்க்ருதத்தில் நூற்றுக்கணக்கான சொற்கள் ஜாஸ்மினியம் (JASMINE ஜாஸ்மின் ) பூக்களுக்கு உண்டு. தமிழர்கள் மாலதி, மல்லிகா, சுகுமாரி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொள்வர். இவற்றில் நன் முல்லை என்பது சுகுமாரி என்ற சம்ஸ்கிருதப் பெயர் ஆகும். “சு” என்ற முன்னொட்டுடன் (PREFIX) நுற்றுக்கணக்கான பெண்கள் பெயர் சம்ஸ்க்ருதத்தில் உண்டு-  சுமதி, சுமலதா, சுகுமாரி, சுகந்தி , சுகன்யா ……..

தமிழில் இதற்கு இணையான “ந” – முன்னொட்டாக வரும்.

நக்கீரன், நன்முல்லை, நப்பின்னை , நக்கண்ணை (சுலோசனா)

 காமக்கண்ணியார் என்ற சங்கப் புலவரை காமாட்சி என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் (1894-1994) , உவே.சா. வும் செப்புவர். நிற்க.

மிஸ்  (MISS) என்பதை திருமணம் ஆன , ஆகாத இருவருக்கும் பயன்படுத்தலாம்.

hen hitch hiking

மிஸ் சுகுமாரியின் சங்க இலக்கியப்பாடலைப் பார்த்தவுடன் எனக்கும் கவிதை எழுதும் ஆசை வந்துவிட்டது அட, வைரஸ் பட்டு, வண்ண தோசை போன்ற கவிஞர்கள் சினிமாவுக்கு எழுதியது போல எனக்கும் எழுத ஆசை பிறந்தது. இது என்றோ ஒரு நாள் தமிழ் சினிமாவில் இடம்பெறும் –

குக்கூ என்றது கோழி

டிக்டிக்  என்றது என் ரிஸ்ட் வாட்ச் (WRIST WATCH)

திக் திக் என்றது என் மனம்

பட் பட் என்று அடித்தது ஹார்ட் (HEART)

டொக் டொக்  என்றது டோர் -ல் (KNOCKING AT DOOR)

ஸார் மில்க்  என்றான் பால் காரன் (MILK MAN)

பரிட்சை நாள் என்பதால் பயம் (EXAM DAY MORNING)

(லண்டன் சாமிநாதையர் பரீக்ஷை நாள் அன்று காலையில் எழுதிய கவிதை)

சாமிநாதையர் , கவிதை, நன்முல்லை, மாத விக்கு, பூப்பு, குக்கூ , கோழி, Menses, Menstruation, குறுந்தொகை, பாடல் 157

–SUBHAM–