பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல்- 1 (Post No.8830)

பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல்- 1 (Post No.8830)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8830

Date uploaded in London – – 20 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

லண்டனிலிருந்து 19-10-2020 அன்று இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஞானமயம்/GNANA MAYAM  நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதில் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.

FACEBOOK.COM/GNANAMAYAM

பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல், தேவாரம், சங்க இலக்கியம் போல நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதா? – 1

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். இன்று நமக்கு  முன் வந்துள்ள கேள்வி – பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல், தேவாரம், சங்க இலக்கியம் போல நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதா?

இதற்கான பதில், ஆம், பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல் அற்புதமாக நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.

இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழும் போதே ஆரிய என்ற சொல்லைத் தவறான பொருளில் பயன்படுத்துவோரும் உள்ளனர் என்பது மறைமுகமாகத் தெரிகிறது.

ஆம், உண்மை தான். இதற்கான மூலத்தை மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியரிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். 1823ஆம் ஆண்டு பிறந்த மாக்ஸ்முல்லருக்கு மிகுந்த வறிய நிலை இருந்தது. அவரது 22ஆம் வயதில் அவரது தாயாருக்கு 1845ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் அவர் எழுதினார் – ஒரு கப் சாக்லட்டிற்கு இரண்டு ஃப்ராங்க் கொடுக்க வேண்டியிருக்கிறது, இனி ஒரு போதும் இதைச் சாப்பிடக்கூடாது என்று நினைத்தேன். இரண்டு ஃபிராங்கிற்கு வக்கில்லாத நிலை.

அந்தக் கால கட்டத்தில் இந்தியாவை மொத்தமாக கபளீகரம் செய்ய நினைத்த மெக்காலேயை இரண்டாம் முறையாக 1855இல் அவர் சந்தித்தார்.  இந்தியரை மதமாற்றும் மெக்காலேயின்எண்ணத்தை அவர் புரிந்து கொண்டார். பிழைக்கும் வழியும் அவருக்குப் புரிந்து விட்டது. அந்த எண்ணத்திற்கு இணங்க சரியானபடி தாளம் போட்டார். வேதம் ஒரு குப்பை என்பது நிரூபணமாகி விடும் என்று தன் தாயாருக்கு எழுதினார். மற்றவருக்கு கிடைக்காத பெரிய தொகையான ஒரு தாளுக்கு 4 பவுண்ட் என்று அவருக்கு நிர்ணயிக்கப்பட்டது. அங்கு தான் வந்தது வினை.

ஆரியர் என்பது ஒரு தனி இனம், அது இந்தியாவில் புகுந்தது என்ற விஷ வித்தை அவர் ஊன்றினார். பின்னால் 1859இல் மெக்காலே இறந்தவுடன் அவர் பயம் போனது. வேதத்தைப் புகழ ஆரம்பித்தார். இந்தியாவின் அட்மைரர் ஆக மாற ஆரம்பித்தார். ஆனால் அவர் செய்ய வேண்டிய டாமேஜ் அனைத்தையும் செய்து விட்டார். அவர் வைத்த வித்து நச்சு மரமாக மாறி ஆரியன் என்பதற்கு ஏராளமான அர்த்தங்கள் தரப்பட்டன; அதையொட்டி இந்தியாவைப் பிளப்பதற்கான சதி ஆரிய வாதத்தால் அரங்கேற்றப்பட்டது. 1896இல் விவேகானந்தர் அவரை அவர் இல்லத்தில் சந்தித்த போது அவருக்கு வயது 73. அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் மட்டுமே அவர் உயிர் வாழ்ந்தார். அப்போது அவர் இந்தியாவை வெகுவாகப் புகழ்ந்தார்.

ஆரியம், திராவிடம் என்ற தவறான கொள்கைகள் பிறந்தது இதன் அடிப்படையில் தான்.

 மெக்காலேயின் இந்தியப் பண்பாட்டை ஒழித்துக் கட்டும் இந்தத் திட்டம் முழுதுமாக அவன் எண்ணப்படி நிறைவேறவில்லை என்றாலும் அந்த விஷமரத்தின் கனிகளைச் சாப்பிட்டவர்கள் அந்த ஆரிய வாதத்தால் ஆதாயம் தேட முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றனர்.

இந்தப் பின்னணியில் ஆரிய என்பதற்கான அர்த்தத்தை நம் இலக்கியங்களில் பார்ப்போம்.

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு எட்டுத் தொகை மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு ஆகிய நூல்களிலும் தொல்காப்பியத்திலும் ஆரிய என்ற சொல் இல்லை.

சிலப்பதிகாரத்தில் ஆரிய என்ற சொல்லை 15 இடங்களில் காண முடிகிறது. ஆரியமன்னர்ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்குவஞ்சி 25/162

அடும்தேர்தானைஆரியஅரசர்வஞ்சி 26/211

ஆரியஅரசர்அமர்க்களத்துஅறியவஞ்சி 26/217

ஆரியமன்னர்அழகுறஅமைத்தவஞ்சி 27/22

இப்படி வருகின்ற இடங்களில் ஆரிய மன்னர் என்று குறிப்பிடப்படுவது வட நாட்டில் ஆண்டுவந்த மன்னரைக் குறிக்கும் சொல்லாக வருகிறது.

மணிமேகலையில் ஒரே ஒரு இடத்திலும் சீவக சிந்தாமணியில் ஒரே ஒரு இடத்திலும் வரும் ஆரிய என்ற சொல்லும் நல்ல பொருளிலேயே வருகிறது.

அடுத்து கம்பராமாயணத்தை எடுத்துக் கொள்வோம். இதில் 240566 சொற்கள் உள்ளன. இவற்றில் 8 இடங்களில் ஆரிய என்ற சொல் வருகிறது.  

ஆடுஇயல்பாணிக்குஒக்கும்ஆரியஅமிழ்தபாடல்கிட்:10 32/3 தேர்முன்நடந்தேஆரியநூலும்தெரிவுற்றீர்கிட்:17 14/4

ஆரியற்கு என்ற சொல் 3 இடங்களில் வருகிறது.

அளவு_இல்சேனைஅவிதரஆரியற்குஇளையவீரன்சுடுசரம்ஏவினான்.

ஆரியற்கு இளைய வீரன் இலக்குவன்.

அடுத்து ஆரியன் என்ற சொல் 35 இடங்களில் வருகிறது. ஆரியன் என்பது இராமனையே குறிக்கிறது.

எடுத்துக்காட்டாக ஒரு நான்கு இடங்களைப் பார்ப்போம்:

ஆரியன் இளவலை நோக்கி ஐய நீ – அயோ:5 45/1

ஆரியன் அனைய கூற அன்னது தன்னை நோக்கி – ஆரண்:11 59/1

ஆரியன் தேவியை அரக்கன் நல் மலர் – ஆரண்:13 56/3

அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்  –

அடுத்து சம்பந்தர் முதல் மூன்று திருமுறைகளில் உள்ள .பதிகங்கள் 385 பாடல்களின் எண்ணிக்கை 4169 மொத்த அடிகள் 16501.

சொற்கள் மொத்தம்  108252

இவற்றில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆரியத்தொடு என்ற வார்த்தை வருகிறது!

சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமைசேர் 


கந்துசேனனும் கனகசேனனும் முதலாகிய பெயர்கொளா 


மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா 


அந்தகர்க்கு எளியேன் அலேன் திருவாலவாய் அரன் நிற்கவே.

இங்கு ஆரியம் என்பது வடமொழியைக் குறிக்கிறது. 

அப்பர் தேவாரத்தில் (4,5,6 திருமுறையில்) 312 பதிகங்கள் உள்ளன. 3066 பாடல்கள் உள்ளன. 12256 அடிகள் உள்ளன. 83730 சொற்கள் உள்ளன.

ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆரியம் என்ற சொல்லும் ஒரு இடத்தில் ஆரியன் என்ற சொல்லும் ஒரு இடத்தில் ஆரியனை என்ற சொல்லும் வருகிறது.

ஆரியம் தமிழோடு இசை ஆனவன் – தேவா-அப்:1246/1

இங்கு ஆரியம் வடமொழியைக் குறிக்கிறது.

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/3

செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட – தேவா-அப்:2552/3

இங்கு ஆரியன் சிவனைக் குறிக்கிறது.

சுந்தரர் தேவாரத்தில் ஒரு சொல் கூட ஆரிய என்று இல்லை.

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தில் 51 அதிகாரங்களில் 3438 அடிகள் உள்ளன. 21798 சொற்கள் உள்ளன.

அவற்றில் இரண்டே இரண்டு சொற்கள் சிவபிரானைக் குறிக்கும் படியாக ஆரியன், ஆரியனே என்று வருவதைக் காண்கிறோம்.

அந்தம்_இல் ஆரியன் ஆய் அமர்ந்தருளியும் – திருவா:2/22

பாசம் ஆம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே.

ஓரளவு இப்படி சங்க இலக்கியத்தையும் பக்தி இலக்கியத்தையும் பார்த்து விட்டோம்.

இந்தப் பின்னணியில் பாரதியாருக்கு வருவோம்.

                          ***         அடுத்த கட்டுரையுடன் முடியும்

tags- பாரதியார் பாடல், ஆரிய , சொல்