
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9020
Date uploaded in London – – –11 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
டிசம்பர் 11. பாரதியாரின் பிறந்த தினம். அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது!
ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரின் இசை ஞானம் மிக அற்புதமானது.
கவி பாட வல்லவராக இருந்த அவர் தனது பாடல்களுக்கு உரிய ராகங்களைக் கண்டு இசை அமைப்பவராகவும் திகழ்ந்தார்.
பாஞ்சாலி சபதம் நூலுக்கு அவர் எழுதிய முகவுரையில்,
“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிது கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்” என்று குறிப்பிடுகிறார்.
புகழ் பெற்ற ஒரு கவிதை அல்லது பாடல் எப்படி இருக்க வேண்டும், அதன் சந்தம், மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய அவரது கண்ணோட்டம் இதிலிருந்து புலப்படுகிறது.
இதை ஒரு வரையறுப்பு (Definition) வாக்கியமாகவே கொள்ளலாம்.
அவரது பாடல்களுக்கு அவர் தேர்ந்தெடுத்த ராகங்கள் அவரை ஒரு இசை மேதை என்பதைச் சுட்டிக் காட்டும்.
இங்கு சில பாடல்களுக்கு அவர் தந்துள்ள ராகங்களைக் காணலாம்.
1)வந்தே மாதரம் என்போம் என்ற பாடல்
தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு
ராகம் – நாதநாமக்கிரியை தாளம் – ஆதி
2)வந்தே – மாதரம் – ஜய
வந்தே மாதரம் என்ற பாடல்
ராகம் – ஹிந்துஸ்தானி பியாக் தாளம் – ஆதி
3) சுதேச வந்தனம் – எந்தையுந் தாயும் பாடல்
ராகம் – காம்போதி தாளம் – ஆதி
4) பாரத நாடு – பாருக்குள்ளே நல்ல நாடு பாடல்
ராகம் – ஹிந்துஸ்தானி தோடி தாளம் – ஆதி
5) பாரத தேசம் – பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்
ராகம் – புன்னாகவராளி பியாக்
6) எங்கள் நாடு
ராகம் – பூபாளம்
7) பாரத மாதா – முன்னை யிலங்கை
சந்தம் – தான தனதந்தன தான தனதந்தன
தானனத் தானானே
8) பாரத தேவியின் திருத்தசாங்கம்
நாமம் – காம்போதி
நாடு – வஸந்தம்
நகர் – மணிரங்கு
ஆறு – சுருட்டி
மலை – கானடா
ஊர்தி – தன்யாசி
படை – முகாரி
முரசு – செஞ்சுருட்டி
தார் – பிலகரி
கொடி – கேதாரம்

9) மாதாவின் துவஜம் – தாயின் மணிக்கொடி பாரீர்!
தாயுமானவர் ஆனந்தக் களிப்பு வர்ணமெட்டு
10) எங்கள் காவடிச் சிந்து – தொன்று நிகழ்ந்த தனைத்தும்
காவடிச்சிந்தில் ஆறுமுக வேலவனே என்ற வர்ணமெட்டு
11) தொண்டு செய்யும் அடிமை – தொண்டு செய்யும் அடிமை
நந்தனார் சரித்திரத்திலுள்ள “மாடு தின்னும் புலையா – உனக்கு மார்கழித் திருநாளா” என்ற பாட்டின் வர்ணமெட்டு
12) மேத்தா திலகருக்குச் சொல்வது – ஓய் திலகரே நம்ம ஜாதிக்கடுக்குமோ
சிதம்பர பதவியாகிய முக்தியிலே, நந்தனார் அடங்காத தாகம் கொண்டிருந்தார். அது அவரை அடிமை கொண்டிருந்த ஆண்டைக்கும் மனமில்லை. அவன் நந்தனாரைப் பலவித இம்சைகளுக்கு உட்படுத்தினார்; அதுவுமின்றிச் சேரியிலிருந்த நிதானப் பறையர்கள் பலர் நந்தனார் சிதம்பரத்தைப் பற்றி நினைக்கலாகாதென்று போதனை செய்தார்கள். அந்த நிதானஸ்தர்களிலே ஒருவர் பாடிய பாட்டின் கருத்தையும் வர்ணமெட்டையும் தழுவிப் பின்வரும் பாடல் செய்யப்பட்டிருக்கிறது. (ஓய் நந்தனாரே, நம்ம ஜாதிக்கடுக்குமோ, நியாயந்தானோ, நீர் சொல்லும்” என்ற வர்ணமெட்டு
13) நிதானக்கட்சியார் சுதேசியத்தைப் பழித்தல் – நாமென்ன செய்வோம், தலைவரே
ராகம் – புன்னாகவராளி தாளம் – ரூபகம்
14) ஆங்கிலேயன் ஒரு தேசபக்தனுக்குக் கூறுவது – நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை ஊட்டினாய்
தண்டகம் – ஆதி தாளம்
15) பாரத தேவியின் அடிமை – அன்னியர் தமக்கடிமை யல்லவே
நந்தன் சரித்திரத்திலுள்ள “ஆண்டைக் கடிமைக் காரனல்லவே” என்ற பாட்டின் வர்ணமெட்டையும் கருத்தையும் பின்பற்றி எழுதப்பட்டது.
16) சுதந்திரப் பள்ளு (பள்ளர் களியாட்டம்) – ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ராகம் – வராளி தாளம் – ஆதி
17) ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம் – என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
ராகம் – கமால் தாளம் – ஆதி
18) விடுதலை – விடுதலை! விடுதலை! விடுதலை!
ராகம் – பிலஹரி
19) பாரத ஸமுதாயம் – பாரத ஸமுதாயம் வாழ்கவே!
ராகம் – பியாக் தாளம் – திஸ்ர ஏகதாளம்
20) பாரத ஜனங்களின் தற்கால நிலைமை – நெஞ்சு பொறுக்குதிலையே
நொண்டிச்சிந்து
21) பிஜித்தீவிலே ஹிந்து ஸ்திரீகள் – கரும்புத் தோட்டத்திலே
ஹரிகாம்போதிஜன்யம்
ராகம் – ஸைந்தவி திஸ்ரசாப்பு தாளம்
22) பெண்கள் விடுதலைக் கும்மி – பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
கும்மிப் பாட்டு
23) தமிழ்த் தாய் ஆதிசிவன் பெற்று விட்டான்
தாயுமானவர் ஆனந்தக் களிப்பு சந்தம்
24) தமிழ் மொழி வாழ்த்து – வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொடி
தான தனத்தன தான தனத்தன்
தான தந்தன
மேற்கண்ட பாடல்களிந்ன் ராகங்கள், சந்தம், வர்ண மெட்டு ஆகியவை தேசீய கீதங்கள் (பகுதி 1) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் 58 பாடல்கள் உள்ளன. இது 1936ஆம் ஆண்டு ஐந்தாம் பதிப்பைக் கண்டது. முதல் நான்கு பதிப்புகளில் 9000 பிரதிகளும் ஐந்தாம் பதிப்பில் 1000 பிரதிகளும் அடிக்கப்பட்டன.
மிகத் தெளிவாக ராகம், தாளம், வர்ணமெட்டு, சந்தம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதை இதில் காணலாம்.
பல ராகங்களும் மெட்டுகளும் பாரதியாரிந்ன் இசைத் திறமையை நன்கு உணர்த்துகின்றன.
இனி அடுத்த பகுதியைப் பார்ப்போம்.
*** தொடரும்

tags – பாரதி, ராகங்கள்,



































































You must be logged in to post a comment.