
Post No. 8843
Date uploaded in London – – –23 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
குறிப்பு : இது வரை நாம் பார்த்த தலங்கள் (இந்தக் கட்டுரையில் உள்ள தலங்கள் உட்பட) 2380 தலங்கள் ஆகும். சில தலங்கள் சிறப்பியல்புகளின் காரணமாக வெவ்வேறு தலைப்புகளிலும் இடம் பெற்றிருக்கக் கூடும். அவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஐயடிகள் காடவர் கோன் அருளிய க்ஷேத்திர வெண்பாவில் உள்ள 21 ஸ்தலங்கள் !
ச.நாகராஜன்
35. க்ஷேத்திர வெண்பாவில் குறிப்பிடப்படும் சிவ தலங்கள்
ஐயடிகள்காடவர் கோன் என்பவர் ஒரு பல்லவ மன்னன். இவர் சிறந்த சிவ பக்தர். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். க்ஷேத்திர வெண்பா என்ற நூலை இவர் பாடி அருளியுள்ளார்.
இது 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.
இது சிவத்தளி வெண்பா என்றும் அழைக்கப்படுகிறது. பதினொன்றாம் திருமுறையில் ஐந்தாவது நூலாக இது அமைந்துள்ளது.
இந்த நூலில் 24 வெண்பாக்கள் உள்ளன.
இதில் இடம் பெற்றுள்ள 21 தலங்கள் வருமாறு:-
- சிதம்பரம் (தில்லை)
- குடந்தை,
- ஐயாறு (திருவையாறு),
- ஆரூர் (திருவாரூர்),
- திருத்துருத்தி,
- திருக்கோடிகாவல்,
- பாண்டவாய்த் தென்னிடைவாய்,
- திருநெடுங்களம்,
- குழித் தண்டலை (தற்காலத்திய பெயர் குளித்தலை)
- ஆனைக்கா,
- மயிலை,
- சேனைமாகாளம்,
- வளைகுளம்,
- சாய்க்காடு,
- திருப்பாச்சிலால் சிராமலை,
- திருமழபாடி,
- திரு ஆப்பாடி,
- காஞ்சிபுரம்,
- திருப்பனந்தாள்,
- திருக்கடவூர்,
- திருவொற்றியூர்
“இறக்கும்போது எவ்விதத் துன்பமும் அடையாமல் இறப்பதற்கு இன்னின்ன தளிகளில் (தளி – தலம் – ஷேத்திரம் என்று பொருள்) வாழும் சிவனை நினைத்துக் கொள் மனமே” என்று மனத்திற்கு அறிவுறுத்துவதாக இது அமைந்துள்ளது.
36. திருஞானசம்பந்தர் பாடியருளிய திரு க்ஷேத்திரக் கோவை – 131 தலங்கள்

திருக்ஷேத்திரக்கோவை (ஆரூர் தில்லை அம்பலம் எனத் தொடங்கும் பதிகம்) இரண்டாம் திருமுறை – 2.39
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இதில் வரும் தலங்கள்:
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம், வடகச்சி, அச்சிறுபாக்கம், கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி, கழிப்பாலை, நின்றியூர், குன்றியூர், குருகாவையூர், நாரையூர், கானப்பேரூர், நெய்த்தானம்
(17 தலங்கள்)
அண்ணாமலை, ஈங்கோய், அத்தி முத்தாறு, முதுகுன்றம், கொங்குன்றம், கழுக்குன்றம், கயிலை, கற்குடி, காளத்தி, வாட்போக்கி, பரங்குன்றம், பருப்பதம் (12 தலங்கள்)
அட்டானம் 8 தலங்கள், துறைகள் 8, கா 9, குளம் 3, களம் 5, பாடி 4, பாழி 3, பாசூர் (41 தலங்கள்)
அறப்பள்ளி, அகத்தியான்பள்ளி, அமர்காட்டுப்பள்ளி, சிறப்பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி, திருநனிபள்ளி, இடைப்பள்ளி, சக்கரபள்ளி,
(9 தலங்கள்)
ஆறை, வடமாகறல், அம்பர், ஐயாறு, பெருவேளூர், விளமர், தெங்கூர், சேறை, துலை, புகலூர் (10 தலங்கள்)
ஆலவாய், இடைமாமருது, இரும்பைப்பதி மாகாளம், வெற்றியூர், கருகாவூர், நல்லூர், பெரும்புலியூர் (7 தலங்கள்)
மாட்டூர், பாச்சிலாச்சிராமம், மயிண்டீச்சுரம், வாதவூர், வாரணாசி, காட்டூர், கடம்பூர், ஒற்றியூர், உறையூர், கோட்டூர், திரு ஆமாத்தூர், கோழம்பம், கொடுங்கோவலூர், குணவாயில் (14 தலங்கள்)
பரிதிநியமம், தென்புறம்பயம், பூவணம், பூழியூர், காற்றூர் (5 தலங்கள்)
நெற்குன்றம், ஓத்தூர், நெடுவாயில், திருநற்குன்றம், வலம்புரம், நாகேச்சரம், சேனைமாகாளம், வாய்மூர், கல்குன்றம், குடமூக்கு (10 தலங்கள்)
குத்தங்குடி, வேதிகுடி, குருத்தங்குடி, தேவன் குடி, அத்தங்குடி, வண்குடி (6 தலங்கள்)
மொத்தம் 131 தலங்கள் : இந்தப் பதிகத்தில் சில வரிகள் சிதைவு பட்டுள்ளன.
இப்பதிகத்தில் வரும் குன்றியூர், இடைப்பள்ளி, மாட்டூர், வாதவூர்,
வாரணாசி, கோட்டூர், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம்,
நெடுவாயில், உஞ்சேனைமாகாளம், குத்தங்குடி, குருந்தேவன்குடி,
மத்தங்குடி, திருவண்குடி இவைகட்குத் தனித்தனித்
தேவார மில்லாமையால் வைப்புத்தலமென்று சொல்லப்படும்.
37. அருணகிரிநாதர் திருப்புகழ் சுட்டிக் காட்டும் ஆறு தலங்கள்
‘நாவேறு பாமணத்த’ என்ற திருப்புகழ் சுட்டிக்காட்டும் ஆறு ஆதார ஸ்தலங்கள் வருமாறு:
ஆதாரம் ஆதாரத் தலம் ஆதாரக் கடவுள் மூலாதாரம் திருவாஊர் (தியாகேசர் தலம்) விநாயகர் சுவாதிட்டானம் திருவானைக்கா (ஜம்புநாதர் தலம்) பிரமன் மணிபூரகம் திருவண்ணாமலை (அருணாசலேசர் தலம்) திருமால் அனாகதம் சிதம்பரம் (சபாபதி தலம்) ருத்திரன் விசுத்தி திருக்காளத்தி (காளத்தீசர் தலம்) மகேசுரன் ஆஞ்ஞை காசி (விசுவேசர் தலம்) சதாசிவன் பிரமரந்திரம் – கைலை ; துவாதசாந்தத் தலம் – மதுரை
Tags- பாரத ஸ்தலங்கள் – 12 , ஐயடிகள் காடவர் கோன்
***