
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9171
Date uploaded in London – –21 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
FIRST PART POSTED YESTERDAY
பாஸ்வரம் என்னும் மூலகத்தின்(ELEMENT) பயன்பாட்டை மேலும் காண்போம்.
கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட ஆங்கிலச் சொற்கள்…

PHOSPHORUS
BIS PHOSPHONATES FOR TREATING BONE CANCERS, OSTEOPOROSIS;
ENERGY MOLECULE – ATP- ADENOSINE TRI PHOSPATE;
MESSENGER MOLECULE – GMP- GUANOSINE MONOPHOSPHATE;
SODIUM, CALCIUM, POTASSIUM SALTS OF PHOSPHORIC ACID – USED AS FOOD ADDITIVES;
METAL PHOSPHIDES – INDIUM, GALLIUM PHOSPHIDES FOR LIGHT EMITTING DIODES;
DI SODIUM PHOSPATE FOR GLASS, CERAMIC, LEATHER INDUSTRIES;
ZINC PHOSPHIDES FOR RAT POISON;
MAGNESIUM PHOSPHIDES FOR WARNING FLARES IN MID SEA;
SODIUM TRI POLYPHOSPHATES FOR DETERGENTS AND DISHWASER POWDERS/ TABLETS;
PHOSPHORUS TRI CHLORIDE, PHOSPHORIC ACID- FOR INSECTICIDES, WEED KILLERS, FLAME RETARDANTS;
PHOSPHORIC ACID FOR FERTILIZERS;
PHOSPHORUS SULFIDES FOR OIL ADDITIVES, ‘STRIKE ANYWHERE’ MATCHES
RED PHOSPHORUS FOR SAFETY MATCHES;
GAS PHOSPHINE FOR FLAME PROOFING AGENTS, BIOCIDES;
CALCIUM HYDROGEN PHOSPHATES FOR TOOTH PASTE;
BLUE GREEN ALGAE- CYANO BACTERIA;
ZOO PLANKTONS
PHOSPHORUS CYCLE
மருத்துவத்தில் ………………………….

பாஸ்வரம் விஷ சத்துடையது. தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு, 19-ம் நூற்றாண்டில் பாஸ்வர தாடை(Phossy jaws) நோய் ஏற்பட்டது . முகத்தில் பெரிய வீக்கம் ஏற்பட்டு முகமே கோணலாகிவிடும். பின்னர் இதைத்தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இப்படி இருந்தபோதும் அக்கால மருத்துவ நூல்களில் பாஸ்பரஸ் மருந்துகள் என்று ஒரு அத்தியாயம் இருந்தது. இப்பொழுது பழைய மருந்துகள் கைவிடப்பட்டன .
தற்காலத்தில் BIS PHOSPHONATES பிஸ்- பாஸ்போனெட்ஸ் என்னும் ரசாயன உப்பு கலந்த மருந்துகள் எலும்பு புற்றுநோய்ச் சிகிச்சையிலும் ஆஸ்டியோபோரோசிஸ் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.
எல்லா உயிரினங்களுக்கும் பாஸ்பேட் என்னும் பாஸ்வர உப்பு தேவை. எலும்புகளில் கால்சியம் பாஸ்பேட் உளது. டி.என் .ஏ.யில் சிறிதளவு இது உளது. செல்களுக்கு இடையில் உள்ள திரவத்தில் இது இருப்பதால் உடலில் கால்சியம் பரவுகிறது. சக்தியூட்டும் ஏ. டி. பி. மற்றும் தூது போகும் ஜி .எம். பி ஆகியவற்றில் ஆர்கானோ பாஸ்பேட்ஸ் உப்பு இருக்கின்றது. ENERGY MOLECULE – ATP- ADENOSINE TRI PHOSPATE;
MESSENGER MOLECULE – GMP- GUANOSINE MONOPHOSPHATE;
நமது உடல் குளுக்கோஸ் என்னும் சர்க்கரைச் சத்தை உடைத்து ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒரு கிலோகிராம் ATP உற்பத்தி செய்கிறது. அது மீண்டும் பல பொருட்களாக மாறி மறுபடியும் பயன்படுகிறது. இதனால்தான் நமக்கு சக்தி கிடைக்கிறது.
நமது உடலில் எலும்புகள்தான் பாஸ்வர வங்கி (Source of Phosphorus) ஆகும். நாம் நினைக்கிறோம் – எலும்புகள் அப்படியே உரு மாறாமல் இருக்கும் என்று. அது தவறு. சதாசர்வ காலமும் கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது. அதாவது கொஞ்சம கரையும். பின்னர் அதன் மீது மேலும் எலும்பு படியும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நாளும் 800 மில்லிகிராம் பாஸ்வரம் தேவை . ஆயினும் நாம் தினமும் சாப்பிடும் பொருட்களிலிருந்து 1000 முதல் 2000 மில்லிகிராம் கிடைப்பதால் யாரும் இது பற்றிக் கவலைப்படத்தேவை இல்லை. இறைச்சி , பால், பாலடைக் கட்டி உணவு எண்ணெய் மூலம் கிடைத்துவிடும். சில குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சி இல்லாவிட்டால் டாக்டர்கள் பாஸ்பேட்டுகளை சாப்பிடச் சொல்லுவர். மருத்துவ ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடுவது கூடாது .
xxxx
பாஸ்வர குண்டு மழை


இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா, பிரிட்டன் முதலிய நேச நாடுகள் ஜெர்மனியின் மீது பாஸ்வர குண்டுகளை வீசி பல்லாயிரம் பொதுமக்களை எரித்துக் கொன்று குவித்தன. ஹாம்பர்க் என்னும் ஜெர்மானிய நகர் மீது வீசிய எரி குண்டுகளால் ஒரே நாளில் 25,000 பேர் எரிந்து கருகினர். எப்போது பார்த்தாலும் ஹிட்லர் செய்த அட்டூழியம் பற்றி மட்டும் பேசுவதால் எதிர்தரப்பு செய்த அக்கிரமங்கள் வெளியாவதில்லை ஒரே நேரத்தில் 25,000 எரி குண்டுகள் போடப்பட்டன. மொ த்தத்தில் ஜெ ர்மா னிய நக ரங்கள் மீது 2000 டன் பாஸ்வர குண்டுகள் வீசப்பட்டன.
Xxxx
பொருளாதாரத்தில்…………………………..
பாஸ்பேட் அடங்கிய பாறைத்தூளை கந்தக அமிலத்தில் கலந்தால் பாஸ்பாரிக் அமிலம் கிடைக்கும். அல்லது மின்சார உலையில் கரியுடன் எரித்தால் பாஸ்வரம் கிடைக்கும். பெரும்பாலும் விவசாய உரம் தயாரிக்கப் பயன்படுகிறது.
பாஸ்பரஸ் ட்ரை குளோரைட் என்பதை பூச்சி கொல்லி , களை கொல்லி திரவத்தில் பயன்படுத்துகிறார்கள்.
சோடியம் ட்ரைபாலி பாஸ்பேட் என்னும் உப்பை வாஷிங் பவுடரில் — சலவைத் தூள் — கலந்தது நல்ல பயன்தந்தது. இதனால் மில்லியன் டன் கணக்கில் இது உற்பத்தியானது.
தீக்குச்சசி , எஞ்சின் பாதுகாப்பு திரவம் ஆகியவற்றிலும் பாஸ்பைட் உப்பு பயன்படுகிறது.
துத்த நாக பாஸ்பைடு , எலிமருந்திலும், மக்னீஷியம் பாஸ்பைடு கடலில் எச்சரிக்கை தீ உண்டாக்குவதிலும், டை சோடியம் பாஸ்பேட் கண்ணாடி, பீங்ககான் , தோல் தொழிற்சாலைகளிலும், கால்சியம் ஹைட்ரஜன் பாஸ்பேட் பற்பசையிலும் பயன்படுகின்றன.
ஒளி உமிழும் டையோடுகளில் காலியம் , இண்டியம் உலோக பாஸ்பைடுகள் இருக்கும்.
டிஷ் வாஷர் எனப்படும் பாத்திரம் கழுவும் எந்திரத்துக்கான மாத்திரைகளிலும் பாஸ்வர உப்புகள் உள்ளன
xxx
புறச் சூழல் பாதிப்பும் பாஸ்வரமும்
பாஸ்வர சுழற்சி (Phosphorus Cycle) என்னும் வினோதம் நம்மை அறியாமலே நடந்து வருகிறது. ஏற்கனேவே எட்டு கோடி டன் பாஸ்வரம் கடலில் உளது. இத்தோடு ஆண்டுக்கு 20,000 டன் பாஸ்பேட் உப்புகளை மனிதர்கள் கலக்கிறார்கள். இதனால் பாசிகள் வளர்ந்து கடலை அசுத்தமாக்குகிறது என்று பலரும் கூச்சல் போட்டார்கள் .ஆயினும் சாக்கடை நீரிலிருந்து பாஸ்பேட்டுகளை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. அது மட்டுமல்ல கடலில் ஒரு வினோத சுழற்சி நடைபெறுகிறது. கடலில் சூரிய ஒளி சில மீட்டர்கள் வரைதான் ஊடுருவும். அதற்கு கீழே கும்மிருட்டுதான் . கடலுக்கடியில் பாஸ்பேட் உப்புகள் படிந்து ஒரு கடல் பாலை வனத்தை (Marine Desert) உருவாக்குகிறது. இதனால் பாஸ்பேட் காரணமாக வளரும் பாக்டிரியா, பாசி வகைகள் ஆழமான கடலை பாதிப்பதில்லை . ஆயினும் கடலின் அடி மட்டத்திலிருந்து வரும் வெப்ப நீரூற்றுகளும் கடல் நீரோட்டங்களும் பாஸ்பேட் உப்புக்களை மேலுக்கு கொண்டுவருவதால் பிளாங்க்ட்டான் (zoo planktons) என்னும் நுண்ணுயிர்கள் பெருகுகின்றன. உலகிலேயே மிகப்பிரிய மிருகங்களான திமிங்கிலத்துக்குக் கூட இவைதான் உணவு. ஆக மனிதர்கள் முதலில் கூச்சல் போட்டது போல பாஸ்பேட்டுகள் கடலை அசுத்தமாக்கவில்லை. அதற்கு நேர் மாறாக சிற்றுயிர்கள், வாழ உதவுகின்றன. அவை பேருயிர்கள் வாழ வகை செய்கின்றன.
எதிர்காலத்தில் நமக்குத் தேவையான பாஸ்பேட் முழுவதையும் டிஷ் வாஷிங், மற்றும் வாஷிங் திரவம் (Dishwashers and washing machines) பயன்படுத்தும் கழிவு நீரிலிருந்து எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை .

–subham—
tag–பாஸ்வரம்-2