
Written by S NAGARAJAN
Date: 20 June 2017
Time uploaded in London:- 5-17 am
Post No.4017
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
by ச.நாகராஜன்

அஹிம்ஸா பரமோ தர்ம: என்பது ஹிந்து மதத்தின் உயிரான கொள்கைகளில் ஒன்று.
எந்த மிருகத்தையும் கொல்லாதே என்பது அற நூல்கள் நமக்குத் தரும் அறிவுரை.
கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்பது வள்ளுவர் வாக்கு.
பசு, பிராம்மணன் – கோ, ப்ராஹ்மண் – ஹிந்து மதம் மிகச் சிறப்பாகக் கூறும் பிறவிகள்.
இதன் காரணம் பசுவும் பிராம்மணனும் தன் நலம் இன்றி பிறர் நலத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டதே தான்!
கோ ஹத்யா – பசுக் கொலை பாவம் என்கிறது வேதம்.
கோ அஹத்யா – பசுவைக் கொல்லாதே என்று வேதம் நூறு தடவைகளுக்கு மேல் கூறுகிறது.
பசுவையும் விருந்தினர்களையும் அது இணைத்துப் பல முறைகள் கூறுகிறது.
அதிதி தேவோ பவ: – விருந்தினர்கள் தேவர்களே என்று கூறும் வேதம் பய பாயஸம் வா என்று கூறுகிறது.அவர்களை அருமையான பாயஸத்துடன் உபசரி – என்று பால் கலந்த இனிப்பைத் தரச் சொல்கிறது. பசுவின் பால் விருந்தினர்களுக்குத் தர உகந்த அற்புதமான வரவேற்புப் பொருளாம்!

சம்ஸ்கிருதம் கற்காதே என்ற தற்கொலைக் கொள்கையால் அறிவுச் செல்வம் நம நாட்டில் வறள ஆரம்பித்தது.அரைகுறை படிப்பாளிகளும் கிறிஸ்தவ மதத்திற்கு நாட்டையே அடகு வைத்து கிறிஸ்தவமாக மாற்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட் ஆங்கிலேய “மெக்காலே” அறிவாளிகளும் வேதம் உட்பட்ட பல நூல்களுக்குத் தங்கள் கோணல் பார்வையாலும் அரைகுறை அறிவாலும் வியாக்யானம் அல்லது விரிவுரை தர முற்பட்டனர்.
அதனால் வந்தது கோளாறு பெரிது!
பசு மாமிசத்தை வேத காலத்தில் சாப்பிட்டனர் என்று உள்நோக்கத்தோடு எடுத ஆரம்பித்தனர்.
எடுத்துக்காட்டாக ஒரே ஒரு விஷயத்தை இங்கு பார்க்கலாம்:
மூன்று அல்லது நான்கு விருந்தினர்கள் வீட்டிற்கு வந்து விட்டால் அவர்களை அரிசியை சாதமாக சமைத்து அத்துடன் கொஞ்சம் உக்ஷ அல்லது ருஷவத்தையும் தருமாறு அற நூல்கள் பகர்கின்றன.
உக்ஷ என்பது சோமலதா. ருஷவ என்பது ஒரு வகை மூலிகைச் செடி.ஊட்டச் சத்து நிறைந்த இவற்றைத் தந்து அவர்களை உபசரி என்பது அறிவுரை.
இந்தச் செடிகள் எருதின் கொம்பு போல பெரிதாக இருக்கும். ரிஷவம் என்பதற்கு இன்னொரு அர்த்தம் ஏழு இசை ஸ்வரங்களில் ஒன்றாகும். இது எருதின் சப்தத்தை ஒத்து இருக்கும்.

ஆனால் அரைகுறை சம்ஸ்கிருத அறிவாளிகளும் பாரத நாட்டைக் கெடுப்பதில் குறியாக இருந்த ஆங்கிலேய அதி மேதாவிகளும் இதை எருதின் மாமிசம் என்று எழுதி விட்டனர்; சந்தோஷப்பட்டனர்.
பெரிய ராக்ஷஸர்கள் – ஆங்கிலேய ராக்ஷஸர்கள் கூட சில எருதுகளைக் கொன்ற மாமிசத்தைச் சாப்பிட முடியுமா? சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த அளவு முட்டாள்களா, அதிதிகளை உபசரிக்கும் வழிகளைக் கூறும் அறவோர்?!
எதை வேண்டுமானாலும் எழுதலாம் – அதுவே பத்திரிகை சுதந்திரம் என்று மார் தட்டும் மதியீனர்களை சுதந்திரத்தின் பேரால் சகித்துக் கொள்ள வேண்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா?!
மேலை நாடுகளிலும் – இந்த அரைகுறை அறிவாளிகள் கூற்றுப்படி நமது நாட்டிலும் கூட பசு வதை செய்யப்படும் போது வெளிப்படும் மீதேன் வாயு நூறு சதவிகிதம் கார்பன் டை ஆக்ஸைடு வெளிப்பாட்டை விட அதிகம் என்பதாவது இவர்களுக்குத் தெரிகிறதா?
செலக்டிவ் அம்னீஷியா எனப்படும் வேண்டுமென்றே மறப்பது இவர்களுக்குக் கை வந்த கலை.

சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு என்று பல இடங்களில் அரசியலுக்காக ஆதாயம் தேடி கிளர்ச்சியில் ஈடுபடும் கம்யூனிஸ தோழர்களும், ஹிந்து மத செகுலர் விரோதிகளும் வேண்டுமென்றே இந்த சுற்றுப்புறச் சூழல் கேட்டை மனதில் கொள்ள மாட்டார்கள் – பசுவதை செய்யாதே என்ற சட்டத்தை அமுல் படுத்து என்று அரசும் ஹிந்து மத அறவோரும் சொல்லும் போது!
பசுவதையால் ஏற்படும் பொருளாதாரச் சீர்கேட்டையும் பிரபலமான பொருளாதார மேதைகள் – செகுலரிஸ்டுகள் – மறந்து விடுகின்றனர் என்பது வேதனையான விஷயம்.
நன்கு சீர்தூக்கிப் பார்த்து நியாயமான முறையில் ஆய்வை நடத்தும் எவரும் பசுவை வதைக்காதே என்று சொல்வதோடு இந்த விஷமிகளின் தவறான கொள்கையையும் வெளிப்படுத்த முனைய வேண்டும்.
தாமதமாக இருந்தாலும் கூட பசு வதை நிறுத்தபட்டே ஆக வேண்டும். நிறுத்தப்படும்.
தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – சில காலம் தான் கவ்வ முடியும்.
மறுபடி தர்மமே வெல்லும்!
****