
Written by S NAGARAJAN
Date: 27 May 2017
Time uploaded in London:- 5-16 am
Post No.3944
Pictures are taken from different sources such as Face book, Wikipdia, Newspapers etc; thanks.
contact: swami_48@yahoo.com
பெங் சுயி உண்மையா, பொய்யா? உண்மை என்றால் நிரூபணம் என்ன?
ச.நாகராஜன்

பெங் சுயி என்பது சீன வாஸ்து சாஸ்திரம். பெங் என்றால் காற்று; சுயி என்றால் நீர். பெங் சுயி சாஸ்திரம் குறைந்த பட்சம் 5000 ஆண்டுகள் பழமையானது.
ஆற்றலை எப்படி வழிப்படுத்தி பாயச் செய்து நமக்கு நல்லனவற்றை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதைச் சொல்வதே பெங் சுயி!
சரி, இது உண்மையா, பொய்யார்? உண்மை என்றால் அதற்கு ஏதாவ்து நிரூபணம் இருக்கிறதா?
ஒரு உண்மை சம்பவத்தைப் பார்க்கலாம்.
மேலை நாடுகளில் கடந்த 16 வருடங்களாக பெங் சுயி மீது அபார மோகம் ஏற்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் பெங் சுயி.
ஹான்ஸ் ஸ்னூக் என்பவர் பிரபல் ஆரஞ்சு நிறுவனத்தின் உரிமையாளர். இங்கிலாந்தில் பிறந்தவர். படிப்பை முடிக்க முடியாமல் பல்கலைக் கழகத்திலிருந்து பாதியில் வெளியேறியவர்.
கனடா சென்று அங்கு ஹோட்டலில் பணியாற்ற ஆரம்பித்தார். பின்னர் ஹாங்காங் சென்று அங்கு டெலிகாம் கம்பெனி ஒன்றில் பணியாற்றி தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டார். 1994இல் இங்கிலாந்திற்குத் திரும்பிய அவர் ஒரு மொபைல் கம்பெனியை ஆரம்பித்தார்.
அந்த வியாபாரத்திலோ கடும் போட்டி நிலவியது. வணிகத்தில் வெற்றி பெற பெங் சுயி நிபுணர் ஒருவரை நாடினார்.

அபார வெற்றி!
அவருக்கு பெங் சுயியின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் முடிவுகள் அவர் நம்பிக்கையைப் பொய்யாக்கும் வண்ணம் இருந்தன.
பெங் சுயி மாஸ்டர் சொன்னதை எல்லாம் செய்தார். 12 மாதங்களில் உங்கள் கம்பெனி அமோகமாக வளரும் என்று அவர் சொன்னது அப்படியே பலித்தது. ஏராளமான பணம் சேர்ந்தது. தனது கம்பெனியை பல மில்லியன் பவுண்டுக்கு விற்றார்.
இதே போல உலகெங்கும் உள்ள வணிகர்கள் பெங் சுயி வழிப்படி வெற்றி பெறுகின்றனர்.
உதாரணமாக சென்னை உள்ளிட்ட உலகப் பெரும் நகரங்களில் பெரும் நிறுவனங்கள் மற்றும் மால்களுக்கு முன்னால் நீரூற்று, அரவானா மீன் உள்ள தொட்டிகள், சிறிய நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட பல பெங் சுயி வழிமுறைகளைக் காணலாம்.
மைஹோட்டல் கம்பெனி என்ற ஒரு பெரும் தொடர் ஹோட்டல் நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்ட்ரூ த்ராஸிவோலூ. அவர் ஒரு பெரிய கட்டிடக் கலை நிபுணர்.
லண்டனில் தனது பெரிய ஹோட்டல் பெங் சுயி முறைப்படி இல்லை என்பதால் அதை பெங் சுயி படி மாற்றி அமைத்தார்.
76 அறைகள் கொண்ட ஹோட்டலில் வாயிலுக்கு முன்னால் இருந்த மாடிப்படியை இடித்து வேறு இடத்தில் ஆற்றலின் போக்கு பாஸிடிவாக அமையும் படி அமைத்தார். கூர்மையான கைப்பிடிகளின் முனைகள் மாற்றப்பட்டு உருண்டையாக மாற்றப்பட்ட்ன. காஷ் ரெஜிஸ்டரின் முன்னால் அதிர்ஷ்டத்தை அழைக்கும் ஒரு மீன் தொட்டி வைக்கப்பட்டது.
இப்படியாக பணத்தைக் கொட்டி அனைத்து மாறுதல்களையும் செய்தார். விளைவு, அவரது வணிகம் அமோகமாக வளர்ந்து வெற்றியைத் தந்தது. இப்படி ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம்.
இப்போது ஒரு கட்டிடக்கலை நிபுணருடன் ஒரு பெங் சுயி நிபுணரையும் சேர்த்து வேலைக்கு அமர்த்துவது பெரிய நிறுவனங்களின் பேஷனாக ஆகி விட்டது. எதற்காக கட்டிடத்தை இடிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே பெங் சுயி படி அமைத்து விடலாமே, அதற்காகத் தான்!
ஹிந்து சாஸ்திரங்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படியே அனைத்து கட்டிடங்களும் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. மயன் அமைத்த சாஸ்திரமே நமது வழி.
இத்துடன் பெங் சுயியையும் சேர்த்து இரட்டை வெற்றியை அனைவரும் அடையத் தொடங்கி விட்டனர்.
ஸ்விட்சை போட்டால் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் மின்சக்தி பாய்ந்து பல்ப் எரிகிறது. அது போலவே நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெங் சுயியின் ஆற்றல் பாய்ச்சல் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும், வெற்றியையும் தருகிறது.
பெங் சுயி மற்றும் வாஸ்து வழி முறைகள் சுலபமானவை; அவ்வளவாக செலவில்லாதவை!
முயன்று பார்த்து கடைப்பிடித்தால் முன்னேறலாமே!
****