

Post No. 8716
Date uploaded in London – –21 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காசு பணம் மணி துட்டு துட்டு காசு பணம் மணி துட்டு! Kattukutty – ( கத்து குட்டி தொகுத்தது ) எந்த நாட்டுக்காரர்களும், எந்த மதத்துகாரர்களும், எந்த இனத்துக்காரர்களும் எந்த ஜாதிக்காரர்களும் நாஸ்திகர்களும் ஆஸதிகர்களும் விழுந்து விழுந்து கும்பிடும் ஒரே சாமி…… காசு பணம் மணி துட்டு “பாய் விரித்து படுப்பவரும் வாய் பிளந்து தூங்ககிறார் பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை” ஏன்??.ஏன்???ஏன்??? கையில டப்பு இல்ல நைனா………. உலகத்தையே “கட்ரோல்” பண்ணக்கூடிய ஒரே தெய்வம்!!! கைக்கு கை மாறும் பணமே, உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே, நாம் தேடும் போது வருவதில்லை, போகும்போது சொல்வதில்லை, உலகத்தில் பல பேர் பலவிதமாகக் கும்பிடும் கடவுளை நாம் “மகா லட்சுமி “என்கிறோம். இவ்வளவு தேவைப்படுகிற பணத்தைப் பற்றி 20 கேள்விகள். எங்கே பதில் சொல்லுங்கள் பார்ப்போம்??? 1)மகா லட்சுமி பிறந்த இடம்??? சமுத்திரம் (முதல் கேள்வி கஷ்டமாக இருந்தால் போட்டிக்கு வரமாட்டீர்கள்) 2)மகா லட்சுமியின் மகனின் பெயர் என்ன?… 3)மகா லட்சுமின் வாகனம் எது??? 4)மகாலட்சுமியைப் பற்றி வள்ளுவர் கூறும் குறள் என்ன??? 5) மகாலட்சுமி வசிக்கும் 13 இடங்கள் எவை எவை.?? ![]() என்ன சார் 5 கேள்விக்கே மூச்சு திணறுதா………. இன்னும் 15 இருக்கே……… சரி இனிமே கொஞ்சம் சுலபமா கேட்கிறேன்……….. 6)மகாலட்சுமிக்கு ஈடாக ஒரு தெய்வத்தை சொல்கிறோம் அவர் யார்??? 7.மகா லட்சுமியின் அக்கா பெயெரென்ன??ஒரு பெயர்ஜேஷ்ட தேவி மற்ற நான்கு பெயர்களைக் கூறு?? ஜேஷ்டா தேவி பிறந்த இடம்??? பிடித்தது???? ஜேஷ்டா தேவியின் கணவர் பெயரென்ன???? ஜேஷ்டாதேவியின் கொடியில் உள்ள பறவை எது??? ஜேஷ்டாதேவின் வாகனம் எது? போங்க சார் நீங்க லட்சுமித்தான் கேட்கப் போகிறீர்கள் என் நினைத்து வந்தோம் நீங்க அக்காளை பற்றியே கேடகிறீர்கள் நான் எப்படி பார்த்தேன் என்றால், இவளை புரிந்து கொண்டு இவளை தவிர்தால் இவ தங்கசியைப் பிடித்து விடலாமல்லவா??? ![]() 12).மகா லட்சுமி வசிக்கும் மிருகத்தின் பெரென்ன???? எங்கே??? 13)மகா லட்சுமி சுமங்கலிகளிடம் எங்கே வசிக்கிறாள்??? 14)மகாலட்சுமி உதித்த மாதம் நட்சத்திரம் என்ன??? 15)மகா லட்சுமிக்கு உகந்த நாள் எது??? 16)வீட்டு வாசப் படி மேலே வைக்கப்படும் லட்சுமியின் பெயரென்ன?? 17)மகா லட்சுமியின் அப்பா பெயெரென்ன??? (இது கொஞ்சம் ட்ரிக்கான கேள்வி ஆனா பதிலிருக்கு) மகாலட்சுமிக்கு பிடித்த இலை எது??? இந்தியாவில் மகா லட்சுமிக்கு இருக்கும் பெர்ய கோவில் எங்கே உள்ளது 20.. மகா லட்சுமி வதம் செய்த அரக்கனின்பெயரென்ன??? ஒவ்வொன்றுக்கும் 5 மார்க் படப்போக்கிறீர்களா???? தேவையே இல்லை…. நீங்கதான் பதில் தெரிந்து கொண்டு விட்டீர்களே…….உங்கள் அனைவருக்கும் 100 / 100 !!! நீங்கள் மகா லட்சுமியின் பூரண அருள் பெற்று நீடூழி வாழ்க!!! நீங்கள் செய்ய வேண்டிய உதவி —இதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து……….. எப்படி??? tamilandvedas -ல் பங்கு பெறச்செய்து அவர்களையும் மகா லட்சுமியின் அருளுக்குப் பாத்திரமாகுமாறு செய்க!!! ****** ![]() Answers 1.சமுத்திரம், 2. சிக்லீதர் (One of her 18 sons) चिक्लीत Chiklita ॐ चिक्लीताय नम:। Om Chiklitaya Namah। 3. ஆந்தை 4.அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் (குறள் எண் 84) 5. தாமரையின் மத்தியில். யானையின் மத்தகத்தில், பசுவின் பின் புறம், வில்வ இலையின் பின்புறம், கோமுகியில், சுமங்கலியின் நெற்றி வகிட்டில், வலம்புரிசங்கில், பசுஞ்சாணத்தில், கோ மூத்திரத்தில், வெண்ணிற ஆடைகளில், தீப விளக்கில், கோ குளம்பு தூசியில், வெண் புறாவிடம் 6. குபேரன் 7.தவ்வை, தன்துரா, முகடி, மூதேவி. 8. பாற்கடல் சகதியில். பச்சை மிளகாயும் எலுமிச்சம் பழமும் வீட்டு வாசலில் அதை சாப்பிட்டு அப்படியே போய் விடுவாளாம் மூதேவி 9. கபிலர் 10.காகம் (காக்கா) 11.கழுதை 12. பசு. அதன் பின் புறம் 13.நெற்றிக்கு மேல் தலை வகிட்டில் 14.பங்குனி உத்திரம் 15.வெள்ளிக்கிழமை 16. கஜ லட்சுமி 17.சமுத்திர ராஜன் 18.வில்வ இலை 19.கோலாபூர் (Kolhapur) 20.கோலாஹான் –subham— ![]() tags — காசு பணம் மணி துட்டு ,மகா லட்சுமி கேள்வி-பதில் *** |



