
Post No. 8608
Date uploaded in London – –1 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மச்ச கன்னியும், மங்கையர் திலகமும்
By Kattukutty

ஜோதிடர்- சார், உங்க உள்ளங் கையில் எவ்வளவு பெரிய
மச்சம்!!!! அடா அட்டடா என்ன அதிஷ்டம் பாருங்க !!!
உங்களுக்கு அன்பான மனைவி வாய்க்கும், அதுமட்டுமில்ல
விதம் விதமா சமச்சும் போடுவா…….
கையை காட்டினவர்- ஐயா இது மச்சமில்லை….சரியா
சமைக்கல்லன்னு என பொண்டாட்டி வச்ச சூடு அய்யா சூடு. !!!
முந்தாநாள் ஒரு சிறுமி, மாமா எனக்கு நன்னா பாடணும்மனு
ஆசையா இருக்கு…….
இப்பவே நீ நன்னா பாடுவையே……
எப்படி மாமா கண்டு பிடிச்சேள்???
நாக்கின் மேலே மச்சத்தைப் பார்த்தேன் சொன்னேன்
எல்லோரும் என்னைப் பார்த்து மச்ச கன்னி நீ கெட்டது சொன்னா
பலிக்கும். கன்னா பின்னான்னு தின்பே…..அப்படி எல்லாம் சொல்லி
கேலி பண்றா மா மா…..
ஐய்யய்யோ அத்தனையும் பொய்….. உன்னை எனக்கு தெரியாது
ஆனா நீ நன்னா படுவேன்ன்னு சொல்லலைய்யயா???
எங்கே ஒரு பாட்டு பாடு….. என்ன அருமையான குரல்!!!
கலை வாணி…. தோற்றாள் போங்கள்
பிரமாதமாய் பாடினாள்!!! பின்னால் பெரிய பாடகியாகப்போகிறாள்!!!

முதலில் தாய் குலத்தை ஆராய்வோம்
பெண்களின் கண்களுக்கு புருவ மத்தியில் மச்சமிருந்தால்
வாழ்க்கைக்கு தேவையான எல்லா பொருள்களும் கிடைத்து
சுகமாய் வாழ்வாள்
நெற்றியின் நடுவே மச்சமிருந்தால் ராணியாக வாழ்வாள்
அவளே மங்கையர் திலகம்!!!
மூக்கின் மேல் மச்சமிருந்தால், எண்ணிய எண்ணமெல்லாம்
நிறைவேறி சௌபாக்யவதியாக வாழ்வாள்
உதட்டில் மச்சம்- எல்லா போகங்களையும் அனுபவிப்பாள்
வலது முலையின் /இடது பக்கம் மச்சமிருந்தால்-எல்லா வசதிகளையும் பெறுவாள். தெய்வ பக்தியோடு வாழ்வார்கள்.
மோவாய் கட்டில் மச்சம்- கண் நிறைந்த கணவன் சகல
செல்வத்தோடு வாழ்வாள்
இடது தாடையில் மச்சம் பலர் போற்றும் வாழ்க்கை,அழகு,
பல வசதி


குறியில் மச்சம்- பட்டத்தரசி, வேலையாட்கள் எல்லா வசதிகளும்
உயர் குலம். மக்கள்.
வலது தொடையில் மச்சம்- மனதிறகேற்ற கணவன் சகல வசதி.
இடது பாதத்தில் மச்சம்-அன்பான கணவன் நல்ல குழந்தைகள்
நல்ல பண்பு, தவம் செய்யும் மனத்தினாள்.
ஆண்கள்
நெற்றியில் வலது பக்கம் மச்சம்- பெரும் புகழ் எதிர் பாராத
தன ப்ராப்தி
தலையின் வலது பக்கம் மச்சம்- அதிகார பதவி
ஆண் குறி-எதிர்பாராத தன லாபம் வியாபாரத்தில பெரும் வெற்றி
ஆள் காட்டி விரல் அல்லது நகத்தில் வெண் புள்ளி-பட்டம், பதவி உயர்வு திடீர் தன லாபம்
சுண்டு விரலில் மச்சம்- எடுத்த காரியங்களில் வெற்றி
மூக்கின் வலது பக்கம் மச்சம் காரிய வெற்றி தன லாபம்
வலது கண்ணில் மச்சம்-சகல வசதிகள், சுக போகங்கள்
தெய்வ பக்தி


இரண்டு காதுகளிலும் மச்சம்- செல்வக் குடி பிறப்பு மேலும்
மேலும் செல்வச் சேர்க்கை, பெரும் பாக்கியசாலி
காதுகளின் பின் புறம்-சகல வாழ்க்கை வசதிகள், செல்வ மிக்க
மனைவி,!நீ ண்ட ஆயுள்!!! எஞ்சாய் ராஜா!!!
வலது புருவம்-வாழ்க்கை முழுக்க மகிழ்ச்சி
முதுகு எலும்பின்கீழ் – நீண்ட ஆயுள், நீண்ட ஆரோக்கியம்
வலது தோளில் மச்சம்-அனைத்து வசதிகளும் சுக போகங்களையும் அனுபவிப்பார்.
கழுத்தில் மச்சம்-நீங்கள் கவர்ச்சிக் கண்ணன்!!.,
நெஞ்சில் மச்சம்-மனைவி மூலமாக சொத்துக்கள் சேரும்!!!
நெஞ்சின் வலது பக்கம்-நீங்கள் ஒரு தியாகி. மற்றவர் நலத்திற்காக
பாடு படும் உழைப்பாளி…..
நெஞ்சின் இடது பக்கம் – வசதியான வாழ்க்கை, பிறர் பாராட்டுக்கள்
நெஞ்சுக்குக் கீழே-.மனைவியால் உதவி, செம்மையான வாழ்க்கை.
வலது கன்னம்- செல்வச் சீமான், அறிவாளி, எந்த காரியத்தையம்
திறம்பட செய்து முடிப்பவன்
வயிற்றில் மச்சம் – விதம் விதமான சாப்பாடு!!!
மன வருத்தமும், பிறர் கேலிக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக
சில இடங்களில் உள்ள மச்சங்களையும் பலன்களையும் குறிப்பிடவில்லை. அன்பர்கள் மன்னிக்கவும். உதாரணமாக
“கைகளில் ரோமம் உடையவர்களுக்கு காம வெறி அதிகம்”
என சிலர் புத்தகத்தை படித்து கையை பிடித்து செருப்படி
வாங்கிய கதையெல்லாம் உண்டு.
(கண்டிப்பாக அப்படி இல்லை. ரோமம் இருப்பது சில குடும்ப பரம்பரை ஜீன்ஸை பொருத்தது)
இவைகள் மச்ச சாஸ்திர புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டவை.
நன்றி . வணக்கம்



TAGS — மச்ச சாஸ்திரம்,மச்ச கன்னி,மங்கையர் திலகம்