உடலுக்கு மண் தேவையா? மண்ணின் மகத்தான சக்தி -2 (Post.9758)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9758

Date uploaded in London – –21 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

மணல் என்னும் மூலகத்தைப் பயன்படுத்தி பெண்கள் தங்கள் மார்பகங்களைப் பெரிதுபடுத்திக் கொள்வதை நேற்று கட்டுரையின் முதல் பகுதியில் கண்டோம். சிலிகோன் (SILICONES) எனப்படும் செயற்கை மார்பகங்கள் உடலுக்குள் ஒழுகினால் ஏற்படும் புற்றுநோய் முதலிய பிரச்சினைகள், வழக்கு வாய்தாக்களை உண்டாக்கி, கம்பெனிகளை திவால் ஆக்கியதால்,  சலைன் (SALINE) உப்புநீர்க் கரைசல் உடைய செயற்கை மார்பகங்கள் புழக்கத்துக்கு வந்தன. இவை உடைந்தோ பிரிந்தோ ஒழுகினாலும் சிலிகோன் போன்ற ஆபத்துக்கள் இதில் இல்லை.

மக்னீஷியம் சிலிகேட் உடைய ஆஸ்பெஸ்டாஸ் , புற்று நோயை உண்டாக்குவதால் மேலை நாடுகள் அதைத் தடை செய்ததையும் கண்டோம் .

இது தவிர  சிலிகோஸிஸ் (SILICOSIS) என்னும் ஒரு நோயும் இருக்கிறது; சுரங்கத் தொழிலார்கள், கல்லுடைக்கும் தொழிலில் உள்ளோர் ஆகியோருக்கு சிலிக்கோசிஸ் வரும். நுண்ணிய மணல் துகள் நுரையீரலில் படிந்து மூச்சு விடுவதை சிரமமாக்கும் நோய் இது.

சிலிகோன் (Silicone) என்னும் பொருளுக்கு வேறு சில பயன்களும் உண்டு. உடலில் இருந்து வெளியேறும் வாயுவைக்  (wind/ gas) கட்டுப்படுத்த சிலிகோன் மாத்திரைகள்  பயன்படும். நாம் சில வகைப் பொருட்களைச் சாப்பிட்டாலோ அல்லது வயிறு, குடலில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டாலோ இந்த வாயு (wind breaking)  உபாதை உண்டு. இதே போல பசுமாடுகளுக்கும் வரும். இவற்றைக் குணப்படுத்த சிலிகோன் உதவுகிறது. இந்த சிலிகோனை ப்ராஸ்டேட் கேன்ஸர் (Prostate cancer) எனப்படும் ஆண்களுக்கு வரும் புற்றுநோயைக் குணப்படுத்த பயன்படுத்தும் ஆய்வுகள்  சுவீடனில் நடைபெறுகின்றன.

***

பொருளாதார உபயோகங்கள்

சிலிகா எனப்படும் மணலினால் கிடைக்கும் பொருளாதார உபயோகங்கள் மிகவும் அதிகம். அவைகளைக் காண்போம் . அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதியில் மணல் என்னும் மூலகத்தை டிரான்சிஸ்டரில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் வளர்ந்தது. இத்தகைய டிரான்சிஸ்டர்கள் (Silicon  Chips)  நம் கம்ப்யூட்டருக்குள் உட்கார்ந்து கொண்டு மகத்தான வேலைகளை செய்கிறது. இது போன்ற புதுமையான கம்பெனிகள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வளரவே அந்த இடமும் அத்தொழிலும் சிலிகான் வாலி (SILICON VALLEY) என்ற பெயரைப் பெற்றது. இங்கு இந்தியர்கள் ஏரளாமானோர் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது

***

சூரிய ஒளித் தகடுகள் (Solar Panels)

இந்தியா போன்ற நாடுகளில் வெய்யிலுக்கு குறைவே இல்லை. அத்தகைய சூரிய ஒளியையும் வெப்ப சக்தியாக, மின்சார சக்தியாக, பயன்படுத்தும் தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருகிறது. சூரிய ஒளி விழும் இதயத்தில் சிலிகான் உடைய தகடுகளை (Solar Panels) வைத்தால் அவை நமக்கு மின் சக்தியையும், வெப்ப சக்தியையும் தரும் .அண்மைக்காலத்தில் கட்டப்படும் கட்டிடங்களின் கூரையில் சூரியத் தகடுகள் பொருத்தப்படுவதால்  காலை நேரத்தில் குளிப்பதற்கு வெண்ணீர் போடும் அவசியமே இல்லை. குளிர்காலத்தில் வீட்டை வெப்பமாக்கவும் இவை பயன்படும்; முதலில் மிகவும் விலை கொடுத்து வாங்க வேண்டியதை இப்போது மலிவு விலையில் விற்கின்றனர் . இந்தியாவில் தொலை தூர கிராமங்களிலும் மலை , காடுகளிடையே உள்ள குடிசைகளிலும் கூட சூரிய விளக்குகள், சூரிய அடுப்புகள் வந்துவிட்டன .

மணலை மிகவும் சுத்தபடுத்தி அத்துடன் வெவ்வேறு ரசாயனப் பொருட்களைக் கலக்கும்போது பல பயனுள்ள வசதிகள் கிடைக்கின்றன. சிலிகோன் பசை (putty) , சிலிகோன் ரப்பர் ஆகியன வீட்டுக்குள்ளேயே  பல இடங்களில் பயன்படுகிறது. கார்போரண்டம் (Carborundum)  என்ற வைரம் போன்ற கடினமான பொருள் சாண்ட் பேப்பர் (Sand Paper) என்னும் உப்புத் தாளில் பயன்படுகிறது .

சிமெண்ட்  மற்றும் கண்ணாடி செய்ய மணல் தேவைப்படுவதை எல்லோரும் அறிவர்.

குவார்ட்ஸ் (Quartz) எனப்படும் பொருள் கடிகாரங்கள், ரேடியோ , டெலிவிஷன் ஆகியவற்றில் அரிய வேலைகளை செய்கிறது

சோடியம் சிலிகேட் (Sodium Silicate) என்னும் பொருள் சுத்தப்படுத்தும் பவுடர்கள், திரவங்களில் (Detergents, Bleaching Powder) பயன்படுகிறது. எண்ணெய்க் கிணறுகளில் இருந்து உற்பத்தியை அதிகரிக்கவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

உலகெங்கிலும் மணல் இருந்தாலும் மற்ற ரசாயனப் பொருள்களுடன் கலந்து சிலிக்கேட் உப்புக்களாகக் கிடைக்கும் இடத்தில் அவற்றைத் தோண்டி எடுக்கும் சுரங்கப் பணிகளும் நடக்கின்றன.

இந்தியா இத்தாலி, ஆஸ்ட்ரியா , ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா , கனடா , அமெரிக்கா , பிரேசில் முதலிய நாடுகளில் டாக்Talc , மைக்கா Mica முதலிய ரூபங்களில் மணலின் உப்புக்கள் கிடைக்கின்றன. அகேட் , அமெதிஸ்ட் ஓபல் (Agate, Amethyst, Opal) முதலிய ரத்தினைக் கற்காளாகவும் தோண்டி எடுக்கப்படுகின்றன. மணலை ரசாயன முறையில் மற்ற உலோகங்களுடன் கலந்து கலப்பு உலோகம் (Alloy) தாயாரிக்கையில் சில சிறப்பு இயல்புகள், குணங்கள் ஏற்படுகின்றன .

***

மணல் என்னும் சிலிகா-வின் ரசாயன குணங்கள்

குறியீடு – Si எஸ் ஐ

அணு எண் -14

உருகு நிலை – 1410 டிகிரி C/ சி 

கொதி நிலை – 2355 டிகிரி C/ சி   –

மணல்= சிலிகன் டை ஆக்ஸைட் silicon di oxide

மூன்று ஐசடோப் உண்டு. ஆனால் கதிரியக்கம் கிடையாது.

–subham–tags- மண், மணல், சிலிக்கான் , குவார்ட்ஸ், சூரிய தகடு 

உடலுக்கு மண் தேவையா? மண்ணின் மகத்தான சக்தி -1 (Post No.9754)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9754

Date uploaded in London – –20 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

மணல் என்னும் மூலகம் / தனிமம் பற்றிய அதிசயமான விஷயங்களை இன்று காண்போம். பிரபஞ்ச்சத்திலுள்ள 118 தனிமங்களில் இதுவரை 34 மூ லகங்களைக் கண்டோம். இன்று சிலிகா SILICA என்னும் 35ஆவது தனிமத்தின் கதையைக் கேளுங்கள்.

பெண்களின் மார்பகத்தை அலங்கரிப்பது சிலிகா.

கம்யூட்டரில் கோடிக்கணக்கான விஷயங்களை  தேக்கி வைப்பது சிலிகா- SILICON CHIPS .

வீட்டின் கூரைகளில் சூரிய ஒளியை வாங்கி நமக்கு வெப்பமாக SOLAR PANELS மாற்றித்தருவது சிலிகா; உடலுக்கும் தேவைப்படுவது சிலிகா

இது வெறும் மணல் செய்யும் வேலை !

முதலில் செக்ஸியான விஷயத்துடன் சிலிகா பெரிய விஞ்ஞான விஷயங்களை ஆராய்வோம்

பல பெண்கள் தன் மார்பகங்கள் எடுப்பாக இல்லை என்பதற்காக அறுவைச் சிகிச்சை செய்துகொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு செயற்கை SILICONE மார்பகங்கள் உடலுக்கு உள்ளே பொருத்தப்படுகின்றன. பல நடிகைகள் இப்படி செயற்கை அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்டதை பத்திரிகைகளில் கிசு கிசு (GOSSIP) பகுதிகளில் படித்திருப்பீர்கள்.

சிலிகான் என்னும் தனிமம் (ELEMENT) மணலைக் குறிக்கும். சிலா என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லுக்கு பாறை என்று பொருள். அதிலிருந்து நாம் வடிப்பதே கோவில் சிலைகள் ; லத்தீன் மொழியில் ‘சிலக்ஸ்’ என்பர். அதிலிருந்து அந்தச் சொல் ஐரோப்பிய மொழிகளில் பலவித அவதாரம் எடுத்தது.

உலகம் முழுதும் இந்தப் பொருள் நிரம்பி இருக்கிறது. அது மட்டுமல்ல விண்வெளியில் உளது. விண்கற்களில் சிலவற்றில் மணலின் கூட்டுப்பொருளான சிலிகன் டை ஆக்சைட் (SILICON DI OXIDE) இருக்கிறது.

பெண்கள் தன் மார்பகப் பகுதியில் வைக்கும் செயற்கை முலைகள் சிலிகோன் SILICONES எனப்படும். ரசாயன பாஷையில் இதை ஆர்கா னோ சிலிகோன் – ஆக்சிஜன் பாலிமர் (ORGANO SILICONE- OXYGEN POLYMERS)  என்பர். அமெரிக்காவில் பெண்கள் இதை அழகு சாதன பொருளாகப் COSMETICS பயன்படுத்தவே உலகம் முழுதும் பரவி பெரும் (COURT CASES) வழக்குகளை உண்டாக்கி  பல கோடி டாலர் நஷ்ட ஈட்டுச் செய்திகளாக உருவாயின.

1960 களில் துவங்கிய சிலிகோன் பொருத்தல் 1990-களில் நஷ்ட ஈடு கோரும் வழக்குகளாக மாறின. சிலிகோன் என்னும் செயற்கை உறுப்பைப் பொருத்திக் கொண்ட பெண்கள் அது உடலுக்குள் ஒழுகி (LEAKING) ஆரோக்கியப் பிரச்சினைகளை உருவாக்குவதாக புகார் செய்தனர். இதனால் இது தொடர்பான புதிய சட்டங்கள், கட்டுப்பாடு விதிமுறைகள் பிறந்தன. செயற்கை மார்பக  சிலிகோன்களை உற்பத்தி செய்த மிகப்பெரிய நிறுவனமான டவ் கார்னிங் DOW CORNING கம்பெனி திவால் ஆகியது. அது மூன்று பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுக்க நேரிட்டது.

அமெரிக்காவில் இந்த மோகம் முடிவுக்கு வந்தது. ஆயினும் உலகின் மற்ற நாடுகளில் இப்போதும் சிலிகோன்  பொருத்துதல் நடை பெறுகிறது.

உண்மை என்ன ?

மணலைக் கொண்டு செய்யும் இந்த சிலிகோன் உண்மையில் பிரச்சனை எதையும் உண்டாக்காது என்று அமெரிக்கா மற்றும் சுவீடன் நாட்டிலுள்ள புகழ்மிகு விஞ்ஞான நிறுவனங்கள் நிரூபித்தன. இதனால் புற்றுநோய் (CANCER) வரும் என்பதற்கெல்லாம் ஆதாரமே இல்லை. தவறான ஆபரேஷன் முறைகளால் ஏற்படும் கோளாறுகள் எல்லா வகை ஆபரேஷன்களிலும் நிகழக்கூடும் அதற்கும் சிலிகோனுக்கும் தொடர்பு இல்லை.

****

சர்ப்ரைஸ், சர்ப்ரைஸ் SURPRISE SURPRISE

சிலிகோன் பற்றிய கெட்ட செய்திக்கு  நேர்மாறான நல்ல செய்தியும் உண்டு. தீ விபத்துக்களில் உடல் கருகி  உருமாறியவர்களுக்கு  உதவுவது இந்த சிலிகோன் தான் .கருகிய தோலின் மீது சிலிகோன் ஜெல் பூசினால் புதிய திசுக்கள் வேகமாக வளர்ந்து குணமடைகிறார்கள் என்பதை ஸ்கட்லாந்தின் கிளாஸ்கோ நகர ஆஸ்பத்திரி பேராசிரியர் ஹென்றி ரெய்ட் PROF HENRY REID, CANNIESBURN HOSPITAL, GLASGOW, SCOTLAND, UK.கண்டுபிடித்தார்.

***

GEM STONES

மணல் என்று நாம் ஆற்றின், கடலின் கரைகளில் காண்பது சிலிக்கன் டை  ஆக்சைட் SILICON DI OXIDE ஆகும். இதன் மறு  வடிவங்களே கிறிஸ்டல் CRYSTAL எனப்படும் ஸ்படிகம் மற்றும் குவார்ட்ஸ் QUARTZ  எனப்படும் கண்ணாடிக்கல் ஆகும். இதில் வேறு சில ரசாயன உப்புக்கள் கலக்கும் பொழுது ஓபல் , அமெதிஸ்ட் OPAL , AMETHYST  எனப்படும் ரத்தினக் கற்களும் உருவாகின்றன.

–தொடரும்

tags- சிலிகா, மணல், செயற்கை மார்பகம்,  முலை , சிலிகோன்