
WRITTEN BY S NAGARAJAN
Date: 16 April 2016
Post No. 2729
Time uploaded in London :– 6-34 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
பாக்யா 8-4-2016 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் வெளியான கட்டுரை
சூரிய கிரகணமும் மன்னர்கள் மரணமும்!
ச.நாகராஜன்

“சுக்கிரனின் சஞ்சாரம் என்பது பிரமாதமான ஒரு விஷயம் இல்லை. ஆனால் முழு சூரிய கிரகணம் என்பதோ அற்புதமான ஒரு விஷயம்” – நீல் டி க்ராஸ் டைஸன்
பவேரியா மன்னனான லூயி 840ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி சூரிய கிரகணம் ஒன்றைப் பார்த்தான். பின்னர் உடனே அவனது மரணம் சம்பவித்தது. அவனது மூன்று மகன்களும் அரசுரிமைக்காகச் சண்டையிட ஆரம்பித்தனர். மூன்று வருடங்கள் கழித்து இந்த உரிமைப் போர் ஒரு முடிவுக்கு வந்தது. பிரம்மாண்டமான சாம்ராஜ்யம் மூன்றாகப் பிரிந்தது. அந்த மூன்று நாடுகள் தான் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி!
1133 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி சூரிய கிரகணம் ஒன்று இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் பார்க்கும்படி நிகழ்ந்தது. இங்கிலாந்து மன்னர் முதலாம் ஹென்றி இந்த கிர்கணம் முடிந்தவுடன் நார்மண்டி என்னும் இடத்தில் இறந்து விட்டார். ஜெர்மானியிலோவெனில் அகஸ்பர்க் என்ற நகரில் வாழ்ந்து வந்தோரை ட்யூக் ஃப்ரடரிக் என்ற பிரபு கொலை செய்ததால் ஜெர்மனியே துயரில் ஆழ்ந்தது.
மன்னன் மூன்றாம் ரிச்சர்டுக்கு சூரிய கிரகணம் என்றாலே பிடிக்காது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரிட்டனில் 531 வருடங்களுக்கு முன்னர் 1485ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. கிரகணம் முடிந்தவுடன் ரிச்சர்டின் மனைவி இறந்து விட்டார். ஐந்து மாதங்கள் கழித்து ரிச்சர்டும் போஸ்வொர்த் என்ற இடத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டார். கதை இத்துடன் முடியவில்லை. 527 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அவர் உடல் 2012இல் மறுபடியும் உரிய முறையில் அடக்கம் செய்யப்பட்டது.
இள்வரசி டயானா பரிதாபகரமாக ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டார். 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி சூரிய் கிரகணம் நிகழ்ந்ததற்கு முதல் நாள் இந்த விபத்து நேர்ந்தது.
வரலாற்று ஆசிரியரான யூயார்சுகியாடி சூரிய கிரகணமும் மன்னர்கள் ம்ரணமும் என்பது பற்றி ஒரு புத்தகத்தையே எழுதி விட்டார். தாய்லாந்து வரலாறு பற்றி இவர் ஆராய்ச்சி செய்ததால் அங்கு நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றிய சுவையான தகவல்களை இவர் தந்துள்ளார்.

1699ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தை நராய் என்னும் மன்னன் பார்த்தான். அவன் சூரிய ராஜா என்று புகழப்பட்ட பதினான்காம் லூயியுடன் நல்ல ராஜீய உறவுகளைக் கொண்டிருந்தான்.பொழுதுபோக்காக வானியல் நிகழ்வுகளை ஆராய்வது நராயின் வழக்கம்.. அவன் நாட்டிற்கு வந்த பிரெஞ்சு மிஷனரிகள் கூறிய பீஜிங்கில் நிறுவப்பட்ட வானியல் ஆய்வுக் கூடம் பற்றிக் கேள்விப்பட்ட் அவன் தனது நகரிலும் அது போல ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பி லாப்பூரி என்ற இடத்தில் இருந்த தன் அரண்மனையில் அமைக்கச் சொன்னான். அங்கு அமைக்கப்பட்ட வானியல் கூடத்திலிருந்து தான் அவன் இந்த கிரகணத்தைப் பார்த்தான்.அவனுடன் கூட இருந்து கிரகணத்தை அவனது அரசவை பிரபுக்களில் ஒருவனான பெட்ராச்சாவும் பார்த்தான். பெட்ராச்சாவின் ஜோதிடர்கள் வானில் வரும் பெரிய அறிகுறி அவன் மன்னனாகப் போவதற்கான அறிகுறி என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிகழ்வைப் பார்த்த பெட்ராச்சா, :’தனக்கான அறிகுறி’ அது தான் என்று நம்பினான். எங்கே மன்னன் நராய் மிஷனரிகளின் பேச்சைக் கேட்டு கிறிஸ்தவ மதத்திற்குத் தழுவி விடுவானோ என்று பயந்த பெட்ராச்சா நராயைக் கவிழ்த்து அரசைக் கைப்பற்றினான். மிஷனரிகள் உள்ளிட்ட அயல் நாட்டார் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்றினான். ஜோதிடர்கள் கூறிய படியே வானியல் நிகழ்வு ஒன்று அவன் மன்னனாக வழி வகுத்தது!
அடுத்து ஒரு சூரிய கிரகணம் 1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நிகழ்ந்தது. தாய்லாந்தில் அப்போது மன்னனாக இருந்தவன் சயாமைச் சேர்ந்த மாங்குட் என்பவன். இந்த கிரகணத்தைப் பார்க்க அவன் வா கோ என்ற கிராமத்திற்குச் சென்று அதைப் பார்த்தான். (இந்த மன்னனாக யூல் பிரின்னர் 1956ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தி கிங் அண்ட் ஐ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்தார்)
மன்னனாக ஆவதற்கு முன்னர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாங்குட் ஒரு பிட்சுவாக இருந்தான். ஐரோப்பிய வானவியலையும் கணிதத்தையும் அப்போது மாங்குட் நன்கு கற்றிருந்தான். தனது தேசத்திய சயாமிய வானவியலிலும் அவன் தேர்ந்திருந்தான். அது அவ்வளவு சரியாக இல்லை என்பதை உணர்ந்த அவன் அறிவியல் முறைப்படி காலண்டரையே மாற்றினான். தனது கணிதத்தின் படி சரியான நேரத்தைக் கணித்த அவன் கிரகணத்தைப் பார்க்க சிறந்த இடம் என்று வா கோ கிராமத்தையும் தேர்ந்தெடுத்து ஏராளமான அயல்நாட்டார், பிரெஞ்சு மிஷனரிகள் உள்ளிட்டோருடன் அங்கு முகாமிட்டான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வா கோவில் மலேரியா ஜுரத்தினால் பீடிக்கப்பட்டு அவன் மரணமடைந்தான். இன்றும் தாய்லாந்து மக்கள் ம்ன்னன் மாங்குட்டை மறக்கவில்லை.

அவன் நினைவைப் போற்றும் வண்ணம் இன்றும் கூட தாய்லாந்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி தேசீய அறிவியல் நாளாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
சூரிய கிரகண நிகழ்வுகளையும் மன்னர்களையும் பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுதலாம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பிரான்ஸை சேர்ந்த சர்ஜனும் பிரபல உயிரியல் விஞ்ஞானியுமான அலெக்ஸி காரல் (தோற்றம் 28-6-1873 மறைவு 5-11-1944) Alexis Carrel மருத்துவத்திற்கான நோபல் பரிசை 1912ஆம் ஆண்டு பெற்றவர். பெரிய பகுத்தறிவுவாதியாக கடவுள் ந்மபிக்கையற்று இருந்த அவர் ஆத்திகவாதியாக மாறியது எப்படி? 1902ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சம்பவத்தினால் தான். அன்றைய தினம் அவர் ஒரு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அதே ரயிலில் பயணம் செய்த ஒரு மேரி பெய்லி என்னும் பெண் மரணத்தின் விளிம்பில் இருந்தாள். அவளுக்கு இருந்த் நோய் ட்யூபர்குலாஸ் பெரிடோனிஸ் என்னும் வியாதி. அவளைச் சோதித்த அலெக்ஸி காரல் அவள் இறந்து விட்டாள் என்றே முடிவு கட்டினார்.

லூர்துவிற்குக் கொண்டு செல்லப்பட்ட அவள் கோமா நிலையில் அங்குள்ள ம்ருத்துவமனையை அடைந்தாள். அவள் வயிற்றின் மீது லூர்துவின் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. என்ன ஆச்சரியம், அவள் நாடித்துடிப்பு சீராக ஆரம்பித்தது. அவள் வ்யிறில் இருந்த வீக்கம் வற்ற ஆரம்பித்தது. இதைப் பார்த்த அலெக்ஸி காரலுக்கு தன்னையே நம்ப முடியவில்லை. எந்த வித மருந்தும் இல்லாமல் ஒரு தீர்த்தம் தெளிக்கப்பட்டவுடன் அநேகமாக இறந்து விட்ட ஒரு பெண் எப்படி சாதாரண நிலைக்குத் திரும்ப முடியும்? அந்த அற்புத சம்பவம் அவரை முற்றிலுமாக மாற்றியது. பெரும் ஆத்திகராக் மாறிய் அவர் பிரார்த்தனையின் பலனைப் பற்றி அற்புதமாக ஒரு பெரிய கட்டுரையையே எழுதியுள்ளார். உலகின் தலை சிறந்த க்ட்டுரைகளில் ஒன்றாக் அது இன்று வரை போற்றப்படுகிறது!

*************
You must be logged in to post a comment.