
Translated by London swaminathan
Date: 23 April 2016
Post No. 2749
Time uploaded in London :– 9-39 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

1.வித்தம் பந்துர்வய: கர்மவித்யா பவதி பஞ்சமீ
ஏதானி மானஸ்தானானி கரீயோ யத்யதுத்தரம்
மனு ஸ்மிருதி 2-136
வித்தம் – பணம்/செல்வம்
பந்து- உறவினர்
வய: – வயது
கர்ம- ஒருவனுடைய தொழில்
வித்யா – கற்ற கல்வி/அறிவு
இந்த வரிசையைக் கவனியுங்கள். கடைசியில் மனு அழகாக முடிக்கிறார். முதலில் சொன்னதைவிட அடுத்தது மிகவும் முக்கியமானது. அதாவது பணத்தை விட உறவினர், உறவினரைவிட வயது, வயதைவிட ஒருவனுடைய கடமை/தொழில், அதைவிட ஒருவன் கற்ற கல்வி. அதாவது கல்விக்கும் அறிவுக்கும்தாம் முக்கியத்துவம்.
Xxx

2.பூஜிக்கத் தக்க 5 பேர்
2.பஞ்சைவ பூஜயன் லோகே யச: ப்ராப்னோதி கேவலம்
தேவான் பித்ரூன் மனுஷ்யாஞ்ச பிக்ஷூனதிதி பஞ்சமான்
–விதுரநீதி 1-80
தேவா: – கடவுள்
பித்ரு – முன்னோர்கள் (நீத்தார்)
மனுஷ்யா: – மனிதர் (மனிதனாக வாழும் மனிதன்; சிலர் மிருகம் போலவும் வாழ்கின்றனர் அன்றோ!)
பிக்ஷு- சாது, சந்யாசிகள்
அதிதி – விருந்தினர்
Xxxx
3.யார் யாருக்கு விருது/பட்டம்/பரிசு கொடுத்து கௌரவிக்க வேண்டும்?
3.பூஜ்யா வித்யாபுத்திபௌருஷாபிஜனகர்மாதிசயதஸ்ச புருஷா:
–அர்த்தசாஸ்திரம் 3-20-23
வித்யா- கல்வியில் தேர்ச்சி பெற்றோர்
புத்தி- புதிய கண்டுபிடிப்புகள்; யோஜனைகள் சொன்ன புத்திமான்கள்
பௌருஷ – வீரதீரச் செயல் புரிந்தோர்
அபிஜன – உயர்குலத்தில் பிறந்தோர் (அறிஞர்கள், அரசர்களின் வாரிசுகள்)
கர்மாதிசய: – அற்புதப்பணியாற்றுவோர் (கின்னஸ் சாதனை போல சாதனை புரிவோர்)
Xxxx

4.நன்கு கவனிக்கப்படவேண்டிய/உபசரிக்கப்பட வேண்டிய 5 பேர்
4.அதிதிர்பாலக: பத்னீஜனனீ ஜனகஸ்ததா
பஞ்சைதே க்ருஹிண: போஷ்யா இதரே ச ஸ்வ சக்தித:
–சுபாஷித ரத்ன பாண்ட்காரம் 157/206
அதிதி – விருந்தினர்
பாலகா: – பாலர்கள் (சிறுவர், சிறுமியர்)
பத்னீ – மனைவி
ஜனனீ – தாயார்
ஜனக: – தந்தை

–சுபம்–
You must be logged in to post a comment.