மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்ச்சுடரே! (Post No.6380)

Written by S NAGARAJAN
swami_48@yahoo.com


Date: 13 May 2019


British Summer Time uploaded in London – 11-09 AM

Post No. 6380

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

இறைவன் பற்றிய இரகசியங்கள் -கட்டுரை எண் 5626  வெளியான தேதி 5-11-2018

நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே கட்டுரை எண் 6357 வெளியான தேதி : 8-5-19

இவற்றின் தொடர்ச்சியாக இதோ ஒரு கட்டுரை :-

மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்ச்சுடரே!

ச.நாகராஜன்

இறைவனை ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்கள் வியந்து போற்றுகின்றன. என்றாலும் அவனை முழுதுமாக விரித்துரைக்க முடியவில்லை. சில பாடல்களின் தொகுப்பு இதோ:-

பரிபாடல் – முதல் பாடல்

திருமால் –

பாடியவர் பெயர் தெரியவில்லை.

ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை

தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,

மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்

சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,

வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5


எரிமலர் சினைஇய கண்ணை; பூவை

விரிமலர் புரையும் மேனியை; மேனித்

திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்

தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை

எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை– 10


சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்

ஏவல் உழந்தமை கூறும்,

நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

அமர் வென்ற கணை

இணைபிரி அணி துணி பணி எரி புரை

விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15

நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு

கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி

நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்

தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்

எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20


றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு

இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்

மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி

மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை

உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் 25


போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்

சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்

உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.


சொல்லில் அடங்காப் பெரும் புகழ்

பொருவேம்என்றவர் மதம் தபக் கடந்து,

செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30


இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!

தெருள நின் வரவு அறிதல்

மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:

அன்ன மரபின் அனையோய்! நின்னை

இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35


அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்

பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை

மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்

திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்

துதி மொழிகள்
விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40

அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;

திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்

மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;

அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்

திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45


ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்

மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;

நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்

புலமும், பூவனும், நாற்றமும், நீ;

வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50


நிலனும், நீடிய இமயமும், நீ.

அதனால்,

இன்னோர் அனையை; இனையையால்என,

அன்னோர் யாம் இவண் காணாமையின்,

பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55


மன்னுயிர் முதல்வனை ஆதலின்,

நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!

நின் ஒக்கும் புகழ் நிழலவை;

பொன் ஒக்கும் உடையவை;

புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60


எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;

மண்ணுறு மணி பாய் உருவினவை;

எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,

ஆங்கு,

காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை


யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,

ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்

வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே;

திருவாசகம் – மாணிக்கவாசகர் அருளியது

சிவபுராணம்
(திருப்பெருந்துறையில் அருளியது)

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க 
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ⁠5 

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க 
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க 
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க 
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க 
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ⁠10 

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி 
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி 
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி 
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ⁠15 
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி 

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் 
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை 
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். ⁠20 

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி 
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி 
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய், 
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் 
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் ⁠25 

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் ⁠30 

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் 
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் 
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற 
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் 
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ⁠35 

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா 
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி 
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே 
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே 
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ⁠40 

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் 
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் 
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் 
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே 
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே ⁠45 

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் 
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று 
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் 
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த 
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை ⁠50 

மறைந்திட மூடிய மாய இருளை 
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி 
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, 
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை 
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, ⁠55 

விலங்கு மனத்தால், விமலா உனக்கு 
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் 
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி 
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, 
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் ⁠60 

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே 
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே 
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே 
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே 
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் ⁠65 

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே 
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே 
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே 
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே ⁠70 

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் 
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே 
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே 
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் ⁠75 

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே 
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே 
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே 
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற 
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் ⁠80 

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் 
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் 
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே 
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப 
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று ⁠85 

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் 
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே 
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே 
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே 
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே ⁠90 

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று 
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் 
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 
பல்லோரும் ஏத்தப் பணிந்து. ⁠95 

அப்பர்

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே. 

கம்ப ராமாயணம்

கடவுள் வாழ்த்து

உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்

நிலைபெ றுத்தலும் நீக்கலு நீங்கலா

அலகி லாவிளை யாட்டுடையா ரவர்

தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே

சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

கடவுள் வாழ்த்து

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

கம்ப ராமாயணம் – இரணியன் வதைப் படலம்

சாணிலும் உளன்,ஓர் தன்மை அணுவினைச் சத கூறு இட்ட

கோணினும் உளன், மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற

தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன், இத்தன்மை

காணுதி விரைவின் என்றான்; நன்று எனக் கனகன் நக்கான்!

தாயுமானவர்

 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்


அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
        ஆனந்த பூர்த்தியாகி
அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
        அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
        தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
        தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
        எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
        என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
        கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
        கருதிஅஞ் சலிசெய்குவாம்.  

திருமழிசைப் பிரான் அருளியது :-

பூநிலாய வைந்துமாய்ப் 

புனற்கண்நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்ச் 

சிறந்தகா லிரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி 

வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ணநின்னை 

யார்நினைக்க வல்லரே?  (1) 

 
ஆறுமாறு மாறுமாயொ 

ரைந்துமைந்து மைந்துமாய், 
ஏறுசீரி ரண்டுமூன்று 

மேழுமாறு மெட்டுமாய், 
வேறுவேறு ஞானமாகி 

மெய்யினொடு பொய்யுமாய், 
ஊறொடோ சை யாயவைந்து 

மாய ஆய மாயனே. (2) 


ஐந்துமைந்து மைந்துமாகி 

யல்லவற்று ளாயுமாய், 
ஐந்துமூன்று மொன்றுமாகி 

நின்றவாதி தேவனே, 
ஐந்துமைந்து மைந்துமாகி 

யந்தரத்த ணைந்துநின்று, 
ஐந்துமைந்து மாயநின்னை 

யாவர்காண வல்லரே? (3) 


மூன்றுமுப்ப தாறினோடொ 

ரைந்துமைந்து மைந்துமாய், 
மூன்றுமூர்த்தி யாகிமூன்று 

மூன்றுமூன்று மூன்றுமாய, 
தோன்றுசோதி மூன்றுமாய்த் 

துளக்கமில் விளக்கமாய், 
ஏன்றெனாவி யுள்புகுந்த 

தென்கொலோவெம் மீசனே. (4) 

 
நின்றியங்கு மொன்றலாவு 

ருக்கடோ றும் ஆவியாய், 
ஒன்றியுள்க லந்துநின்ற 

நின்னதன்மை யின்னதென்று, 
என்றும்யார்க்கு மெண்ணிறந்த 

ஆதியாய்நின் னுந்திவாய், 
அன்றுநான்மு கற்பயந்த 

வாதிதேவ னல்லையே? (5) 


நாகமேந்து மேருவெற்பை 

நாகமேந்து மண்ணினை, 
நாகமேந்து மாகமாக 

மாகமேந்து வார்புனல், 
மாகமேந்து மங்குல்தீயொர் 

வாயுவைந் தமைந்துகாத்து, 
ஏகமேந்தி நின்றநீர்மை, 

நின்கணேயி யன்றதெ. (6) 


ஒன்றிரண்டு மூர்த்தியா 

யுறக்கமோடு ணர்ச்சியாய், 
ஒன்றிரண்டு காலமாகி 

வேலைஞால மாயினாய், 
ஒன்றிரண்டு தீயுமாகி 

யாயனாய மாயனே 
ஒன்றிரண்டு கண்ணினுனு 

முன்னையேத்த வல்லனே? (7) 


ஆதியான வானவர்க்கு 

மண்டமாய வப்புறத்து, 
ஆதியான வானவர்க்கு 

மாதியான வாதிநீ, 
ஆதியான வானவாண 

ரந்தகாலம் நீயுரைத்தி, 
ஆதியான காலநின்னை 

யாவர்காண வல்லரே? (8) 


தாதுலாவு கொன்றைமாலை 

துன்னுசெஞ்ச டைச்சிவன், 
நீதியால்வ ணங்குபாத 

நின்மலா.நி லாயசீர் 
வேதவாணர் கீதவேள்வி 

நீதியான வேள்வியார், 
நீதியால் வணங்குகின்ற 

நீர்மைநின்கண் நின்றதே (9) 

 
தன்னுளேதி ரைத்தெழும் 

தரங்கவெண்த டங்கடல் 
தன்னுளேதி ரைத்தெழுந் 

தடங்குகின்ற தன்மைபோல், 
நின்னுளேபி றந்திறந்து 

நிற்பவும் திரிபவும், 
நின்னுளேய டங்குகின்ற 

நீர்மைநின்கண் நின்றதே. (10) 

அறபுதமான இந்தப் பாடல்கள் விளக்க முடியா இறைத் தன்மையைச் சற்று விளக்கிப் பார்த்து, ‘அட, இது யாரால் முடியும்’ என்று வியக்கின்ற பான்மையைப் பார்க்கலாம்.

****

–subham–