Written by S NAGARAJAN
Post No.1853; Date: 9 May 2015
Uploaded at London time: 14-29
சம்ஸ்கிருதச் செல்வம் – பாகம் 3
கவிதைப் புதிர்களின் தொடர் வரிசையில் இன்னும் ஒரு பஹிர் ஆலாப வகை புதிர்:
கீத்ருக் கிம் ஸ்யான்ன மத்ஸ்யானாம் ஹிதம் ஸ்வேச்சாவிஹாரிணாம் I
குணை: பரேஷாமத்யர்தம் மோததே கீத்ருஷ: புமான் II
தங்கள் இஷடம் போல விளையாட நினைக்கும் மீன்களுக்கு எது, எதனால் பிடிக்காமல் இருக்கும்? இதற்கான விடை வி – மத் –சரா – இதன் பொருள் ; நீரிலேயே வாழும் பறவைகள்
ஏன் என்று சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். நீர் நிலைகளையே ஆதாரமாகக் கொண்டு வாழும் பறவைகளுக்கு உணவு அந்த நீர் நிலைகளில் வாழும் மீன்கள் தானே! ஆகவே தான் அப்படிப்பட்ட பறவைகள் வாழும் இடத்தில் வசிக்கவே அவை அஞ்சும்!
மற்ற மனிதர்களின் நல்ல குணங்களினால் எப்படிப்பட்ட மனிதன் சந்தோஷமடைகிறான்?
விடை : வி – மத்சரா: பொருள் : பொறாமை அற்ற ஒரு மனிதரால்.
விமத்சரா: என்ற ஒரே சொற்றொடரை இரு விதமாகப் பிரித்தால் அது இரு வேறு கேள்விகளுக்கு விடையை அளிக்கிறது.
இன்னொரு புதிர்:
கீத்ருக் தோயம் துஸ்தரம் ஸ்யாத் திதீர்ஷோ:
கா பூஜ்யாஸ்மின் கட்கமாமந்த்ரயஸ்வ I
த்ருஷ்ட்வா தூமம் தூரதோ மானவிஞ்ஞா:
கிம் கர்தாஸ்மி ப்ராதரேவாஷ்ரயாஷம் II
இது சாலினி என்ற சந்தத்தில் அமைந்துள்ள ஒரு புதிர் செய்யுள்.
ஒருவன் கடந்து செல்ல விரும்பும் போது எந்த நீர் நிலை (நதி) கடந்து செல்ல மிகவும் கஷ்டமானது? (தோயம் என்றால் நீர் அல்லது இங்கு நீர்நிலை/நதி)
இதற்கான விடை: அ–நு – படகு இல்லாத போது
மதிக்கப்பட வேண்டியவர் மாதா (தாயார்)
மதிப்பதற்குத் தகுதியானவர் யார்?
இதற்கான விடை : மாதா (தாயார்)
வாளை எப்படி அழைப்பது? –
இதற்கான விடை: ஆஸே! (ஓ கத்தியே என்று)
மிக்க அறிவார்ந்தவர்களே, தூரத்தில் புகையைக் கண்டால் நான் என்ன செய்வது?
இதற்கான விடை: அனுமாதாஸே (காலையிலேயே தீ இருப்பதை அனுமானத்தால் அறியலாம்)
இப்படி, அனுமாதாஸே என்ற ஒரே சொற்றொடர் நான்கு கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறது.
வீர சிவாஜியின் கத்தி
விடை தெரிந்து புதிர்களைக் கையாள்வது சுலபம். விடை தெரியாமல் இருக்கும் போது சம்ஸ்கிருதத்தில் சொற்விற்பன்னராக இருக்கும் ஒருவர் மட்டுமே விடையைச் சரியாகக் கூற முடியும், இல்லையா!
*************



You must be logged in to post a comment.