தட்ப வெப்ப மாற்றத்தால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடு! (Post.9883)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9883

Date uploaded in London – 23 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் 25-7-2021 முடிய ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.

தொடுப்பு : https://onlineradiofm.in/stations/all-india-air-chennai-pc

உரை எண் : 2 – 17-7-21 அன்று காலை ஒலிபரப்பப்பட்டது

தட்ப வெப்ப  மாற்றத்தால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடு!

கடந்த 50 ஆண்டுகளில் மனித குலம் பயன்படுத்தி வரும் வாகனங்களில் படிம எரிபொருள் பயன்படுத்தப் படுவதால் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் பசுமை வாயுக்கள் வளி மண்டலத்தை மாசு படுத்தி வந்துள்ளன. கடந்த 130 ஆண்டுகளில் புவியின் வெப்பத்தில் 0.85 டிகிரி செண்டிகிரேடு கூடுதலாகி உள்ளது. ஒவ்வொரு பத்து ஆண்டையும் எடுத்துக் கொண்டு பார்த்தால் இப்போது வெப்பம் கூடிக் கொண்டே போகிறது.இதனால் தட்பவெப்பத்தைச் சீராக வைத்திருக்கும் பனிப்பாறைகள் உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது.

உலகின் மொத்த ஜனத்தொகையில் பாதிக்கு மேல் கடலுக்கு 60 கிலோமீட்டர் அருகிலேயே வசித்து வருவதால் கடல் மட்டம் உயர்வதால் அவர்கள் இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாவர். 

அதிக வெப்பமான நிலையில் நாம் காற்றை சுவாசிக்கும் போது சுவாசக் கோளாறுகளும் இதயக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. 2003ஆம் ஆண்டு கோடை காலத்தில் மட்டும் எப்போதும் இல்லாதபடி 70000 கூடுதல் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படும் சீர்கேடுகளைக் குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளது. சுத்தமான ஆற்றல் அமைப்புகளை உருவாக்குமாறும் பயன்படுத்துமாறும் அது இடைவிடாது வலியுறுத்தி வருகிறது.

குறைந்த தூரமுள்ள இடங்களுக்கு சைக்கிளில் செல்வது, நடந்து செல்வது உள்ளிட்ட பல நல்ல பழக்கங்கள் படிம எரிம பொருளைப் பயன்படுத்தும் வாகனப் பயன்பாட்டை மட்டுப் படுத்தும்,

2015ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயல்படும் அமைப்புகளை ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் செயல்பட, ஒரு செயல்திட்டத்தைத் தந்துள்ளது. அத்துடன் உலகெங்கும் தட்ப வெப்ப மாற்றத்தால் ஏற்படும் சீர்கேடுகளைக் குறித்து மனித குலம் விழிப்புணர்ச்சிப் பெற அனைத்து இடங்களிலும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் தகவல்களைப் பரப்ப வலியுறுத்தியுள்ளது.

ஐந்து வயதுக்கும் கீழாக உள்ள குழந்தைகளும், முதியோரும் தட்ப வெப்ப மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவதால் இந்த அபாயத்தை மிகவும் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.

பல அறிவியல் ஆய்வுகள், ‘தட்ப வெப்ப மாற்றத்தால் பஞ்சங்கள் ஏற்படும்’, ‘சூறாவளிகளும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும்’, ‘தொற்று வியாதிகள் பரவும்’, ‘பல தீவுகளில் வசிப்போரும் கடலோரம் வசிப்போரும் அபாயத்திற்கு உள்ளாவர்’ ஆகியவற்றைத் தெரிவித்துள்ளன. ஆகவே இதைத் தடுக்க ஒவ்வொருவரும் இந்தச் சீர்கேட்டைத் தடுக்கும் ஒரு தலைவனாக தம் தம் பகுதிகளில் செயல்பட வேண்டும்.

Lungs and Heart

–subham–

tags-தட்ப வெப்பம், மாற்றம், ஆரோக்கியம் , சீர்கேடு

காஷ்மீர், நமது காஷ்மீர், நடப்பது என்ன? நல்லவை தான் நடக்கிறது! (9867 Post)

கர்னல் ஷெராக் (Col Sherag) தெரிவிக்கிறார்:-

01)   1.5 லக்ஷம் ஹிந்து-சீக்கிய குடும்பங்கள் ஜம்மு-காஷ்மீரில் குடியிருப்போராக ஆகி விட்டனர்.

02)     உமர் அப்துல்லா, மெஹ்பூபாவிகு வழங்கப்பட்ட சலுகைகள்/வசதிகள் நீக்கப்பட்டு விட்டன.

03)     ஜம்மு காஷ்மீர் நேஷனல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மீதும் காஷ்மீர் கட்டுப்பாடுகள் விதிப்பது நீக்கப்பட்டது.

04)     ஹிந்து புனிதத்தலங்களின் மீதான காஷ்மீரின் கட்டுப்பாடு நீங்கியது.

05)     1990இல் ஹிந்துக்கள் காஷ்மீரில் விட்டு விட்ட சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளோரின் மீது, தானாகவே நடவடிக்கை எடுக்க அதற்குரிய அதிகாரமையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06)     ஜம்முகாஷ்மீரில் உள்ள அனைத்து கோல்ஃப் மற்றும் இதர கிளப்புகளின் மீதான கட்டுப்பாடை காஷ்மீர் இழந்தது.

07)     பல்கலைக் கழக விஷயங்களில் காஷ்மீர் முதல் அமைச்சரின் பங்கு இனி இருக்கவே இருக்காது.

08)     தேச விரோதிகளுக்கு ஜம்முகாஷ்மீரில் 42 வருடங்களுக்கு முன்னர் தரப்பட்டிருந்த சட்டரீதியான பாதுகாப்பு நீக்கப்பட்டது.பப்ளிக் சேஃப்டி ஆக்ட், 1978இன் படி நடவடிக்கைக்கு உள்ளாகியிருப்போர் ஜம்மு காஷ்மீருக்கு வெளியிலும் கூட எந்தச் சிறையிலும் இனி அடைக்கப்படலாம்.

09)     ஜம்முவிலிருது அரசு அலுவலகம் இனி காஷ்மீருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜம்முவிலிருந்தே செயல்படலாம். (ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த அலுவலகம் -பைல்கள் உட்பட- காஷ்மீருக்கு மாறுவது வழக்கம்)

10)     பரூக், உமர், ஆஜாத், மெஹ்பூபா உள்ளிட்ட பழைய முதல் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள், வசதிகள் நீக்கப்பட்டன. இதில் குடியிருப்பு, வாகனங்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.

11)     அனைத்து பல்கலைக்கழகங்களும் இனி நியூ டெல்லியின் கட்டுப்பாட்டுக்கு வந்து விட்டன. இங்குள்ள பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் காஷ்மீரை மையமாகக் கொண்டிருப்பது இனி இல்லை. மாற்றப்படலாம்.

12)     தர்மாத் ட்ரஸ்டின் கட்டுப்பாட்டிலோ அல்லது அந்தத் தலத்திற்கான தல வாரியத்தின் கட்டுப்பாட்டிலோ இதுவரை ஹிந்து புனிதத் தலங்கள் இருந்தன.இனி இந்த வாரியங்கள் நியூ டெல்லியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும்.

13)     ஜம்மு காஷ்மீர் வக்ஃப் போர்ட் கூட நியூ டெல்லியினால் எடுக்கப்பட்டு விட்டது. அதன் முழு சொத்துக்கள் இதுவரை காஷ்மீர் முஸ்லீம்களின் நன்கொடைகளால் உருவாக்கப்பட்டிருந்தன. இனி நியூ டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் இவை வரும்.

14)      பண்டிட்களிடமிருந்து வாங்கப்பட்ட சொத்துக்களைக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களை வெளியேற்ற உள்ளூர் நிர்வாகத்திற்கு நியூ டெல்லி அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதற்கான விற்பனைப் பத்திரங்கள் செல்லாது என அறிவிக்கப்படலாம்.

15)     கோல்ஃப் மைதானங்கள் மட்டுமல்ல, அனைத்து காட்டு நிலங்களும் கூட நியூ டெல்லியின் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது. டூரிஸ்ட் டெவலப்மெண்ட் அதிகாரிகளும் இனி டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பர். இந்தியாவிலிருந்தே இனி நிலங்களை லீசுக்கு விடலாம். வசதிகளை யாருக்கும் தரலாம்.

16)     முன்பிருந்ததைப் போல் அல்லாமல் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி வாரண்ட் ப்ரெஸிடென்ஸில் (Warrant of Precedence) 15ஆம் நிலைக்கு இறக்கப்பட்டிருக்கிறார்.

17)     ஜம்மு காஷ்மீர் முதன்மந்திரியினால் பல்கலைக்கழக போர்ட் மற்றும் வக்ஃப் போர்டுக்கு செய்யப்பட்ட நாமினேஷன்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன.

18)      அனைத்து காஷ்மீர் ஐஏஎஸ் அதிகாரிகளும் குறைந்த முக்கியத்துவம் கொண்டுள்ள நிலைகளில் வைக்கப்பட்டதோடு, உள்ளூர் வாசிகள் அல்லாத அதிகாரிகள் நிர்வாகத்தை இயக்க ஜம்முவிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

19)     ஆயிரக்கணக்கான லேண்ட் பேங்குகள் (Land Banks of thousands of Kanals) இந்த மாநிலம் சாராத மற்றவருக்கு ‘Investment and Industry’ என்ற பெயரில் தரப்படும்.

நமது MHA (Ministry of Home Affairs) அதிக விளம்பரப்படுத்தாமல் ஆர்ப்பாட்டமின்றி, ஓசையின்றி இவை அனைத்தையும் அமுல் படுத்தியுள்ளது.

       சாதனை தான்!

***

INDEX

ஜம்மு காஷ்மீர் சட்டங்களில் மாற்றம்.

19 மாற்றங்களின் பட்டியல்

ஜம்மு காஷ்மீர் பாரதத்தின் முழுமையான பகுதியான ஆகி விட்டதற்கான சான்றுகள்!

Source and Thanks to Truth Vol 89 No 12 Dated 2-7-2021 – https://m.facebook

Tags- ஜம்மு ,காஷ்மீர், மாற்றம்

தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்!

Radio Talk written by S NAGARAJAN

Date: 14 November 2015

POST No. 2327

Time uploaded in London :– 10-11 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015; Part 2 posted on 7th ;Part 3 on 8th nov.

Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov.; Part 6- 12th; Part- 7- 13th.Nov.

 

8.தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்!

உலகின் தட்பவெப்ப நிலை வெகு வேகமாக மாறி வருகிறது.புவி வெப்பமடைந்து வருகிறது.இந்த மாறுதலுக்குக் காரணம் மனிதனின் செயல்களே என்பது வருத்தமூட்டும் செய்தி!

புவி வெப்பம் அடைவதால் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருகின்றன; அவற்றின் உறைவிடங்கள் மறைகின்றன; சுற்றுப்புறச் சூழல் அமைப்புகள் பாதிக்கப்படுகின்றன.பூமியை எதிர்நோக்கியுள்ள அபாயங்களில் மிகப் பெரிய அபாயம் புவி வெப்பமாதலே என்பதை விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் ஒரு மனதாக ஒப்புக் கொண்டுள்ளனர். சமீபத்திய ஆய்வுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உஷ்ணம் அதிகரித்து வருவதையும் தட்பவெப்ப நிலையில் சீரற்ற மாறுபாடுகள் அதிகரிப்பதையும் அறிவிக்கின்றன.

தொல்படிம எரிபொருள்களான நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்டவை எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் போது அது காற்றை மாசுபடுத்துகிறது. சூரிய கிரணங்களை மேகங்கள் சூரியனிலிருந்து பிரதிபலிக்க வைத்து அவை விண்வெளியை அடையச் செய்கின்றன. இது ஒரு அசாதாரண விளைவை ஏற்படுத்துகிறது. இது க்ளோபல் டிம்மிங் (global dimming) என்ற சொற்றொடரால் குறிப்பிடப்படுகிறது. இந்த க்ளோபல் டிம்மிங்கின் விளைவாக குறைந்த வெப்பமும் ஆற்றலும் பூமியை அடைகிறது. முதலில் இது நலம் பயக்கும் ஒன்றாகத் தோன்றினாலும் இதுவே ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளிலும் எண்பதுகளிலும் எதியோப்பியாவில் ஏற்பட்ட பஞ்சத்திற்குக் காரணம் என கண்டறியப்பட்டது. ஏனெனில் வட துருவத்தில் உள்ள பெருங்கடல்கள் மழையை உருவாக்கும் வண்ணம் உரிய வெப்பத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே இந்தப் பஞ்சங்களினால் லட்சக்கணக்கில் அங்கு மக்கள் மடிந்தனர்.

க்ளோபல் டிம்மிங்கிற்குக் காரணமாக அமையும் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சுப் புகை வளி மண்டலத்தில் கலப்பதைத் தடுப்பதே இதற்குச் சரியான தீர்வாக அமையும்.

க்ளோபல் டிம்மிங்கைத் தடுப்பதன்  மூலம் தட்பவெப்ப நிலை சீரடைந்து புவி வெப்பமயமாதல் தடுக்கப்படும். மக்களின் ஆரோக்கியம் மேம்படும். ஆகவே இன்றைய உடனடிக் கடமை புவி வெப்பமடைவதைத் தடுப்பதே ஆகும்.

தொடரும்…………………………….